Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-አንዓም   አንቀፅ:
وَكَذٰلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِّیَقُوْلُوْۤا اَهٰۤؤُلَآءِ مَنَّ اللّٰهُ عَلَیْهِمْ مِّنْ بَیْنِنَا ؕ— اَلَیْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِالشّٰكِرِیْنَ ۟
6.53. இவ்வாறே நாம் சிலரை சிலரைக் கொண்டு சோதித்தோம். உலக பாக்கியங்களில் அவர்களை ஏற்றத்தாழ்வுடையோராக ஆக்கினோம். செல்வம் வழங்கப்பட்ட நிராகரிப்பாளர்கள் ஏழை முஸ்லிம்களைப் பார்த்து, “நமக்கு மத்தியில் இவர்களுக்குத்தான் அல்லாஹ் நேர்வழிகாட்டி அருள்புரிந்துள்ளானா?” இந்த ஈமான் சிறந்ததாக இருந்திருக்குமானால் இவர்கள் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள், ஏனெனில் நாமே எப்பொழுதும் முந்துபவர்கள்”. தன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களையும் நம்பிக்கைகொள்ளாத நிராகரிப்பாளர்களையும் அல்லாஹ் அறிய மாட்டானா என்ன? நிச்சயமாக அல்லாஹ் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். இதனால்தான் நன்றி செலுத்துவோருக்கு ஈமான் கொள்ள வாய்ப்பளித்து நிராகரிப்பாளர்களை கைவிட்டுவிடுகிறான். அவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاِذَا جَآءَكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاٰیٰتِنَا فَقُلْ سَلٰمٌ عَلَیْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلٰی نَفْسِهِ الرَّحْمَةَ ۙ— اَنَّهٗ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوْٓءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهٖ وَاَصْلَحَ ۙ— فَاَنَّهٗ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
6.54. தூதரே! நீர் கொண்டுவந்ததன் நம்பகத் தன்மையை அறிவிக்கக்கூடிய நம் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு சலாம் என்னும் முகமன் கூறுவீராக. அல்லாஹ்வின் விசாலமான கருணையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. கருணை புரிவதை அல்லாஹ் தன்மீது உபரியாகக் கடமையாக்கிக் கொண்டான். யாரேனும் அறியாமல் பாவம் செய்து பின்னர் பாவமன்னிப்புக் கோரி தம் செயலைச் சீர்படுத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கக்கூடியவன். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ وَلِتَسْتَبِیْنَ سَبِیْلُ الْمُجْرِمِیْنَ ۟۠
6.55. மேற்கூறப்பட்டவற்றை நாம் உமக்குத் தெளிவுபடுத்தியது போல் நமது அத்தாட்சிகளையும், அசத்தியவாதிகளுக்கெதிரான நமது ஆதாரத்தையும் நாம் தெளிவுபடுத்துகிறோம். தவிர்ந்து, எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு குற்றவாளிகளின் பாதையையும் வழிமுறையையும் தெளிவுபடுத்தவும் அவ்வாறு செய்கிறோம்.
ዓረብኛ ተፍሲሮች:
قُلْ اِنِّیْ نُهِیْتُ اَنْ اَعْبُدَ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— قُلْ لَّاۤ اَتَّبِعُ اَهْوَآءَكُمْ ۙ— قَدْ ضَلَلْتُ اِذًا وَّمَاۤ اَنَا مِنَ الْمُهْتَدِیْنَ ۟
6.56. தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் மற்றவற்றை வணங்குவதை அல்லாஹ் எனக்குத் தடைசெய்துள்ளான்.” தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதில் உங்களின் மனஇச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன். நான் உங்களின் மனஇச்சைகளைப் பின்பற்றினால் சத்தியத்தைவிட்டும் நெறிபிறழ்ந்து விடுவேன்.” இதுதான் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள ஆதாரம் இன்றி மனஇச்சையைப் பின்பற்றும் ஒவ்வொருவரது நிலை.
ዓረብኛ ተፍሲሮች:
قُلْ اِنِّیْ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَكَذَّبْتُمْ بِهٖ ؕ— مَا عِنْدِیْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖ ؕ— اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ— یَقُصُّ الْحَقَّ وَهُوَ خَیْرُ الْفٰصِلِیْنَ ۟
6.57. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “நான் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீது இருக்கின்றேன். வெறும் மனஇச்சையின் மீதல்ல. நீங்கள் இந்த ஆதாரத்தை நிராகரித்துவிட்டீர்கள். நீங்கள் அவசரப்படுத்தும் வேதனையயோ, நீங்கள் கேட்கும் அற்புத சான்றுகளோ என் கைவசம் இல்லை. அவைகள் அல்லாஹ்விடமே உள்ளன. அனைத்து தீர்ப்பும்- நீங்கள் கேட்பது உட்பட- அல்லாஹ்விடமே உள்ளது. அவன் உண்மையைக் கூறுகிறான். அதைக் கொண்டு தீர்ப்பளிக்கிறான். அவனே தெளிவுபடுத்துவதிலும் அசத்தியத்திலிருந்து சத்தியத்தை வேறுபடுத்துவதிலும் மிகச்சிறந்தவன்.
ዓረብኛ ተፍሲሮች:
قُلْ لَّوْ اَنَّ عِنْدِیْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖ لَقُضِیَ الْاَمْرُ بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ— وَاللّٰهُ اَعْلَمُ بِالظّٰلِمِیْنَ ۟
6.58. தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் அவசரப்படுத்தும் வேதனை என் கட்டுப்பாட்டில் இருந்தால் நான் அதனை உங்கள் மீது இறக்கியிருப்பேன். எனக்கும் உங்களுக்குமிடைய விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கும். அநியாயக்காரர்களுக்கு எவ்வளவு அவகாசம் அளிக்க வேண்டும்? எப்போது அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
ዓረብኛ ተፍሲሮች:
وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَیْبِ لَا یَعْلَمُهَاۤ اِلَّا هُوَ ؕ— وَیَعْلَمُ مَا فِی الْبَرِّ وَالْبَحْرِ ؕ— وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا یَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِیْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا یَابِسٍ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
6.59. மறைவானவற்றின் பொக்கிஷங்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர வேறு யாரும் அவற்றை அறியமாட்டார்கள். கடலிலும் தரையிலுமுள்ள உயிரினங்கள், தாவரங்கள், உயிரற்றவைகள் என ஒவ்வொரு படைப்பையும் அவன் அறிந்தவன். எந்த இடத்தில் ஒரு இலை விழுந்தாலும், பூமியில் மறைந்துள்ள எந்த விதையாக இருந்தாலும், காய்ந்தவை, பசுமையானவை என அனைத்தும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• الله تعالى يجعل العباد بعضهم فتنة لبعض، فتتفاوت درجاتهم في الرزق وفي الكفر والإيمان، والكفر والإيمان ليس منوطًا بسعة الرزق وضيقه.
1. அல்லாஹ் அடியார்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்குகிறான். வாழ்வாதாரம், ஈமான், நிராகரிப்பு ஆகியவற்றில் மக்கள் வேறுபட்டவர்களாக காணப்படுகிறார்கள். நிராகரிப்பும் விசுவாசமும் வாழ்வாதார வசதி மற்றும் நெருக்கடியுடன் சம்பந்தப்பட்டதல்ல.

• من أخلاق الداعية طلاقة الوجه وإلقاء التحية والتبسط والسرور بأصحابه.
2. அழைப்பாளன் மலர்ந்த முகத்தோடு, முகமனோடு, மகிழ்ச்சியோடு தன் தோழர்களை சந்திக்க வேண்டும்.

• على الداعية اجتناب الأهواء في عقيدته ومنهجه وسلوكه.
3. அழைப்பாளன் தன் கொள்கையில், வழிமுறையில், நடத்தையில் ஒருபோதும் மனஇச்சையைப் பின்பற்றிவிடக்கூடாது.

• إثبات تفرد الله عز وجل بعلم الغيب وحده لا شريك له، وسعة علمه في ذلك، وأنه لا يفوته شيء ولا يعزب عنه من مخلوقاته شيء إلا وهو مثبت مدوَّن عنده سبحانه بأدق تفاصيله.
4. மறைவானவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான். அவனுக்கு இணையாக யாரும் இல்லை. அது சம்பந்தமான அவனது அறிவு விசாலமானது. அவனிடம் மிகத் துல்லியமான விபரங்களுடன் பதிவுசெய்யப்படாமல், அவனது படைப்புகளில் எந்த ஒன்றும் அவனை விட்டு மறைய முடியாது.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-አንዓም
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት