Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-አንዓም   አንቀፅ:
اِنَّمَا یَسْتَجِیْبُ الَّذِیْنَ یَسْمَعُوْنَ ؔؕ— وَالْمَوْتٰی یَبْعَثُهُمُ اللّٰهُ ثُمَّ اِلَیْهِ یُرْجَعُوْنَ ۟
6.36. விஷயத்தைச் செவியுற்று புரிந்து கொள்பவர்கள்தாம் நீர் கொண்டு வந்ததை ஏற்றுக்கொண்டு பதிலளிப்பார்கள். நிராகரிப்பாளர்கள் இறந்தவர்களாவர். அவர்களுக்கு எந்த சிறப்பும் இல்லை. அவர்களின் உள்ளங்கள் இறந்துவிட்டன. மரணித்தவர்களை மறுமை நாளில் அல்லாஹ் உயிர்கொடுத்து எழுப்புவான். பின்னர் அவர்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவர்கள் சேர்த்துவைத்த செயல்களுக்கு அவன் கூலி வழங்குவான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَقَالُوْا لَوْلَا نُزِّلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ— قُلْ اِنَّ اللّٰهَ قَادِرٌ عَلٰۤی اَنْ یُّنَزِّلَ اٰیَةً وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
6.37. “முஹம்மதின் நம்பகத்தன்மையை நிரூபிக்கக்கூடிய வழக்கத்திற்கு மாறான ஏதேனும் ஒரு ஆதாரம் அவருடைய இறைவனிடமிருந்து அவருக்கு இறக்கப்பட்டிருக்கக்கூடாதா?” என்று இணைவைப்பாளர்கள் வீம்பாகக் கேட்கிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக, “அவர்கள் விரும்புவது போன்று ஓர் அத்தாட்சியை இறக்குவதற்கு அல்லாஹ் சக்தியுடையவன்தான். ஆனால் இவ்வாறு கேட்கும் இணைவைப்பாளர்களில் பெரும்பாலோர் அல்லாஹ் தன் ஞானத்தின் பிரகாரமே ஆதாரங்களை இறக்குவான் அவர்களது வேண்டுதல்களுக்கேற்பவல்ல, என்பதை அறியமாட்டார்கள். அவன் இறக்கியும் அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையென்றால் அவன் அவர்களை அழித்துவிடுவான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَمَا مِنْ دَآبَّةٍ فِی الْاَرْضِ وَلَا طٰٓىِٕرٍ یَّطِیْرُ بِجَنَاحَیْهِ اِلَّاۤ اُمَمٌ اَمْثَالُكُمْ ؕ— مَا فَرَّطْنَا فِی الْكِتٰبِ مِنْ شَیْءٍ ثُمَّ اِلٰی رَبِّهِمْ یُحْشَرُوْنَ ۟
6.38. ஆதமின் மக்களே! பூமியின் மேற்பரப்பில் நடமாடும் எந்த உயிரினமானாலும், வானத்தில் பறந்து திரியும் எந்த பறவையானாலும் படைப்பிலும் வாழ்வாதாரத்திலும் அவையும் உங்களைப் போன்ற இனங்கள்தாம். லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே பதியாமல் எந்த ஒன்றையும் நாம் விட்டுவைக்கவில்லை. அனைத்தையும் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் பக்கமே மறுமைநாளில் தீர்ப்பிற்காக ஒன்றுதிரட்டப்படுவர். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அவன் வழங்கிடுவான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا صُمٌّ وَّبُكْمٌ فِی الظُّلُمٰتِ ؕ— مَنْ یَّشَاِ اللّٰهُ یُضْلِلْهُ ؕ— وَمَنْ یَّشَاْ یَجْعَلْهُ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
6.39. நம்முடைய வசனங்களை நிராகரித்தவர்கள் கேட்க முடியாத செவிடர்களை, பேசமுடியாத ஊமையர்களைப் போன்றவர்களாவர். அத்துடன் அவர்கள் பார்க்கமுடியாமல் இருள்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எவ்வாறு நேர்வழி அடைய முடியும்? யாரை அல்லாஹ் வழிகெடுக்க நாடிவிட்டானோ அவரை வழிகெடுத்தே தீருவான். யாருக்கு நேர்வழிகாட்ட நாடுகிறானோ அவருக்கு கோணலற்ற நேரான வழியைக் காட்டுகிறான்.
ዓረብኛ ተፍሲሮች:
قُلْ اَرَءَیْتَكُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُ اللّٰهِ اَوْ اَتَتْكُمُ السَّاعَةُ اَغَیْرَ اللّٰهِ تَدْعُوْنَ ۚ— اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
6.40. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “உங்களின் தெய்வங்கள் நன்மையளிக்கவோ தீங்கினை அகற்றவோ சக்திபெற்றவை என்று நீங்கள் கூறும் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் எனக்கு அறிவியுங்கள், அல்லாஹ்வின் வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு நிச்சயமாக வரும் என்று எச்சரிக்கப்பட்ட அந்நேரம் வந்துவிட்டால் உங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்குவதற்கு அல்லாஹ்வைத் தவிர உள்ளவர்களையா அழைப்பீர்கள்?.”
ዓረብኛ ተፍሲሮች:
بَلْ اِیَّاهُ تَدْعُوْنَ فَیَكْشِفُ مَا تَدْعُوْنَ اِلَیْهِ اِنْ شَآءَ وَتَنْسَوْنَ مَا تُشْرِكُوْنَ ۟۠
6.41. உண்மையில் உங்களைப் படைத்த அல்லாஹ்வையே நீங்கள் அழைப்பீர்கள். அப்பொழுது அவன் நாடினால் உங்களது துன்பத்தைப் போக்கி, தீங்கினை அகற்றுவான். அவனே இதற்குப் பொறுப்பாளன், ஆற்றல்மிக்கவன். அல்லாஹ்வுடன் இணையாக்கிய உங்களின் தெய்வங்களை - அவற்றால் உங்களுக்குப் பலனோ, தீங்கோ அளிக்கமுடியாது என்பதை நீங்கள் அறிந்திருப்பதால் - விட்டுவிடுவீர்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰۤی اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ یَتَضَرَّعُوْنَ ۟
6.42. தூதரே! உமக்கு முந்தைய சமூகங்களிலும் தூதர்களை அனுப்பினோம். அந்த மக்கள் தூதர்களை நிராகரித்தார்கள். அவர்கள் கொண்டுவந்ததைப் புறக்கணித்தார்கள். அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணிய வேண்டும் என்பதற்காக வறுமை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய் போன்ற சோதனைகளைக் கொண்டு நாம் அவர்களைச் தண்டித்தோம்.
ዓረብኛ ተፍሲሮች:
فَلَوْلَاۤ اِذْ جَآءَهُمْ بَاْسُنَا تَضَرَّعُوْا وَلٰكِنْ قَسَتْ قُلُوْبُهُمْ وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
6.43. அவர்களுக்கு நமது சோதனை வந்தபோது, அது நீங்கும் பொருட்டு, அல்லாஹ்வுக்கு அவர்கள் கட்டுப்பட்டு அடிபணிந்திருந்தால் அவர்கள் மீது நாம் கருணை காட்டியிருப்போம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அறிவுரை பெறாதவாறு அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்த நிராகரிப்பான, பாவமான செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டினான். அதனால் அவர்கள் தங்களின் பாவங்களில் நிலைத்திருந்தார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَیْهِمْ اَبْوَابَ كُلِّ شَیْءٍ ؕ— حَتّٰۤی اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ ۟
6.44. கடுமையான வறுமை மற்றும் நோய் மூலம் அவர்கள் அறுவுறுத்தப்பட்டதை அவர்கள் விட்டு, அல்லாஹ்வின் கட்டளையின்படி செயல்படாமல் இருந்தபோது, கொஞ்சம்கொஞ்சமாக வசதியின் வாயில்களை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம்; ஏழ்மையின் பின் செல்வத்தையும் நோயின் பின் ஆரோக்கியத்தையும் அவர்களுக்கு வழங்கினோம். இதனால் அவர்களுக்கு கர்வம் ஏற்பட்டபோது, தமக்கு வழங்கப்பட்ட வசதிகளினால் சந்தோசம் அவர்களை ஆட்கொண்ட போது திடீரென நம்முடைய வேதனை அவர்களை அடைந்தது. அதனால் தடுமாற்றத்திலும் விரக்தியிலும் சிக்கிக்கொண்டனர்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• تشبيه الكفار بالموتى؛ لأن الحياة الحقيقية هي حياة القلب بقَبوله الحق واتباعه طريق الهداية.
1. நிராகரிப்பாளர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளார்கள். ஏனெனில் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு நேர்வழியைப் பின்பற்றுவதன் மூலம் இதயம் உயிர்பெறுவதே உண்மையான வாழ்க்கையாகும்.

• من حكمة الله تعالى في الابتلاء: إنزال البلاء على المخالفين من أجل تليين قلوبهم وردِّهم إلى ربهم.
2. அல்லாஹ் சோதிப்பதன் நோக்கங்களில் ஒன்றுதான், தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவர்கள் தன் பக்கம் திரும்புவதற்காகவும் அவர்களது உள்ளங்கள் இளகிவிடுவதற்காகவும் சோதனைகளை ஏற்படுத்துவதாகும்.

• وجود النعم والأموال بأيدي أهل الضلال لا يدل على محبة الله لهم، وإنما هو استدراج وابتلاء لهم ولغيرهم.
3. வழிகேடர்களின் கைகளில் இருக்கும் செல்வங்களும் அருட்கொடைகளும் அல்லாஹ் அவர்களை நேசிக்கிறான் என்பதற்கான அடையாளங்கள் அல்ல. மாறாக அது அவர்களை விட்டுப்பிடிப்பதற்கும் அவர்களையும் ஏனையோரையும் சோதிப்பதற்குமே வழங்கப்பட்டுள்ளது.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-አንዓም
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት