Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል ከህፍ   አንቀፅ:
وَلَقَدْ صَرَّفْنَا فِیْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ ؕ— وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَیْءٍ جَدَلًا ۟
18.54. நாம் அவர்கள் அறிவுரை பெற்றுக்கொள்ளும்பொருட்டு முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்தக் குர்ஆனில் பல்வேறு வகையான உதாரணங்களை விளக்கியுள்ளோம். ஆயினும் மனிதன் -குறிப்பாக நிராகரிப்பவன்- அதிகமாக தவறான முறையில் தர்க்கம் செய்பவனாகவே உள்ளான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَمَا مَنَعَ النَّاسَ اَنْ یُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰی وَیَسْتَغْفِرُوْا رَبَّهُمْ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمْ سُنَّةُ الْاَوَّلِیْنَ اَوْ یَاْتِیَهُمُ الْعَذَابُ قُبُلًا ۟
18.55. பிடிவாதம்கொண்ட நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்விடம் இருந்து முஹம்மது நபி கொண்டவந்ததன் மீது நம்பிக்கைகொள்வதற்கும், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதற்கும் தடையாக இருப்பது விளக்கப்படுத்துவதில் உள்ள குறையல்ல. அவர்களுக்கு அல்குர்ஆனில் பல்வேறு உதாரணங்கள் கூறப்பட்டுள்ளன. மேலும் தெளிவான ஆதாரங்களும் அவர்களிடம் வந்துள்ளன. முந்தைய சமூகங்களைப்போல தாங்களும் தண்டிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட தண்டனையை நேரடியாகக் கண்டுவிட வேண்டும் என்று அவர்கள் பிடிவாதத்தின் காரணமாக கோறுவதே அவர்களைத் தடுத்தது.
ዓረብኛ ተፍሲሮች:
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِیْنَ اِلَّا مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۚ— وَیُجَادِلُ الَّذِیْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوْۤا اٰیٰتِیْ وَمَاۤ اُنْذِرُوْا هُزُوًا ۟
18.56. நாம் தூதர்களை நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவர்களாவும் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளை எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாவுமே அனுப்பி வைக்கின்றோம். உள்ளங்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரம் இருந்த போதிலும் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட சத்தியத்தை தங்களின் அசத்தியத்தால் முறியடித்துவிட வாதம் செய்கிறார்கள். அவர்கள் குர்ஆனையும் எச்சரிக்கைகளையும் நகைப்புக்குரியதாகவும் பரிகாசமாகவும் ஆக்கிக் கொண்டார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰیٰتِ رَبِّهٖ فَاَعْرَضَ عَنْهَا وَنَسِیَ مَا قَدَّمَتْ یَدٰهُ ؕ— اِنَّا جَعَلْنَا عَلٰی قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ یَّفْقَهُوْهُ وَفِیْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ— وَاِنْ تَدْعُهُمْ اِلَی الْهُدٰی فَلَنْ یَّهْتَدُوْۤا اِذًا اَبَدًا ۟
18.57. தன் இறைவனின் வசனங்களைக்கொண்டு அறிவுரை வழங்கப்பட்டபோது அதிலுள்ள தண்டனை பற்றிய எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் படிப்பினை பெறாமல் புறக்கணித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அவன் இவ்வுலக வாழ்வில் சேர்த்துவைத்த பாவங்களையும் நிராகரிப்பையும் மறந்துவிட்டான். அவற்றிலிருந்து அவன் மீளவில்லை. இத்தகைய பண்புடையவர்களின் உள்ளங்களில், குர்ஆனைப் புரிந்துகொள்ள முடியாதவாறு ஒரு திரையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் செவிகளில் அதனைக் கேட்க முடியாமல் ஒரு அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதனைச் செவிமடுக்கமாட்டார்கள். நீர் அவர்களை ஈமானின் பக்கம் அழைத்தாலும் அவர்களின் உள்ளங்களில் திரையும் செவிகளில் அடைப்பும் இருப்பதால் ஒருபோதும் உமது அழைப்பிற்குப் பதிலளிக்க மாட்டார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَرَبُّكَ الْغَفُوْرُ ذُو الرَّحْمَةِ ؕ— لَوْ یُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوْا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ ؕ— بَلْ لَّهُمْ مَّوْعِدٌ لَّنْ یَّجِدُوْا مِنْ دُوْنِهٖ مَوْىِٕلًا ۟
18.58. பொய்பிப்பவர்களுக்கு விரைவாக வேதனையளிக்கப்பட வேண்டும் என்று தூதர் எதிர்பார்க்காமலிருப்பதற்காக அவருக்கு அல்லாஹ் கூறுகிறான்: “-தூதரே!- உமது இறைவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அனைத்தையும் வியாபித்த கருணை உடையனாகவும் இருக்கின்றான். பாவிகள் பாவமன்னிப்புக் கோரும்பொருட்டு அவர்களுக்கு அவகாசம் அளிப்பதும் அவனது அருளே. அவன் இந்த புறக்கணிப்பாளர்களை தண்டிக்க விரும்பினால் இவ்வுலகிலேயே உடனுக்குடன் அவர்களைத் தண்டித்திருப்பான். ஆயினும் அவன் சகிப்புத்தன்மை மிக்கவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். அவர்கள் பாவமன்னிப்புக் கோரும்பொருட்டு அவர்களை விட்டும் தண்டனையைத் தாமதப்படுத்துகிறான். மாறாக அவர்கள் மீளாவிட்டால் அவர்களது நிராகரிப்பு, புறக்கணிப்பு என்பவற்றுக்கு அவர்களுக்கு கூலி வழங்கப்படுவதற்கு குறிக்கப்பட்ட இடமும் காலமும் உண்டு. அவனைத் தவிர ஒதுங்குவதற்கு எந்தப் புகலிடத்தையும் அவர்கள் பெறவே முடியாது.
ዓረብኛ ተፍሲሮች:
وَتِلْكَ الْقُرٰۤی اَهْلَكْنٰهُمْ لَمَّا ظَلَمُوْا وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَّوْعِدًا ۟۠
18.59. ஹூத், ஸாலிஹ், ஷுஜப் ஆகியோரின் சமூகங்கள் வாழ்ந்த ஊர்களைப் போன்ற உங்களுக்கு நெருக்கமான நிராகரித்த அந்த ஊர்களில் உள்ளோரை, பாவங்கள் மற்றும் நிராகரிப்பின் மூலம் தமக்குத் தாமே அநியாயம் செய்தபோது அழித்துவிட்டோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் வைத்திருந்தோம்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاِذْ قَالَ مُوْسٰی لِفَتٰىهُ لَاۤ اَبْرَحُ حَتّٰۤی اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَیْنِ اَوْ اَمْضِیَ حُقُبًا ۟
18.60. -தூதரே!- மூஸா தம் பணியாளர் யூஷா இப்னு நூனிடம் கூறிய நேரத்தை நினைவு கூர்வீராக: “இரு கடல்களும் சங்கமிக்கும் இடத்தை அடையும்வரை நான் சென்றுகொண்டே இருப்பேன். அல்லது அந்த நல்லடியாரை சந்தித்து அவரிடமிருந்து கல்வி கற்பதற்காக நீண்ட காலம் சென்றுகொண்டே இருப்பேன்".
ዓረብኛ ተፍሲሮች:
فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَیْنِهِمَا نَسِیَا حُوْتَهُمَا فَاتَّخَذَ سَبِیْلَهٗ فِی الْبَحْرِ سَرَبًا ۟
18.61. இருவரும் நடந்து சென்றார்கள். இரு கடல்களும் சங்கமிக்கும் இடத்தை அவர்கள் அடைந்தபோது இருவரும் கட்டுச்சாதனமாகக் கொண்டுவந்த மீனை மறந்துவிட்டார்கள். அல்லாஹ் அந்த மீனுக்கு உயிரளித்தான். அது கடலில் சுரங்கம் போன்ற ஒரு வழியை அமைத்துக் கொண்டது. அதில் நீர் ஒட்டவில்லை.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• عظمة القرآن وجلالته وعمومه؛ لأن فيه كل طريق موصل إلى العلوم النافعة، والسعادة الأبدية، وكل طريق يعصم من الشر.
1. குர்ஆனின் கண்ணியமும், மகத்துவமும் பொதுத்தன்மையும் (கூறப்பட்டுள்ளது). நிச்சயமாக அதில் பயனுள்ள கல்வி மற்றும் நிரந்தர வெற்றியின்பால் கொண்டுசெல்லும், தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் அனைத்து வழிகளும் உள்ளன.

• من حكمة الله ورحمته أن تقييضه المبطلين المجادلين الحق بالباطل من أعظم الأسباب إلى وضوح الحق، وتبيُّن الباطل وفساده.
2. அல்லாஹ்வின் கருணை மற்றும் மதிநுட்பத்தின் வெளிப்பாடு, அசத்தியத்தைக்கொண்டு விவாதிக்கும் அசத்தியவாதிகளை ஏற்படுத்துவது சத்தியம் தெளிவாவதற்கும் அசத்தியம் கெட்டது என்று தெளிவு பெறுவதற்கு வழிவகுக்கும் பிரதான காரணிகளில் ஒன்றாகும்.

• في الآيات من التخويف لمن ترك الحق بعد علمه أن يحال بينه وبين الحق، ولا يتمكن منه بعد ذلك، ما هو أعظم مُرَهِّب وزاجر عن ذلك.
3. சத்தியத்தை அறிந்த பின்னரும் அதை விட்டுவிடுவோருக்கு, அவர்களுக்கும் சத்தியத்திற்குமிடையே திரை ஏற்பட்டு அதன் பின் அதனை அடைய முடியாமல் போகும் என்ற மேலுள்ள வசனங்களில் காணப்படும் எச்சரிக்கை அவ்வாறான செயலைச் செய்வதை விட்டும் பெரும் அச்சமூட்டலாகும்.

• فضيلة العلم والرحلة في طلبه، واغتنام لقاء الفضلاء والعلماء وإن بعدت أقطارهم.
4.அறிவு, அதனைத் தேடுவதற்கான பயணம் செய்தல் என்பவை சிறப்புக்குரியதாகும். நல்லோர்கள், அறிஞர்கள் உள்ள இடங்கள் வெகு தூரத்தில் இருந்தாலும் அவர்களின் சந்திப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

• الحوت يطلق على السمكة الصغيرة والكبيرة ولم يرد في القرآن لفظ السمك، وإنما ورد الحوت والنون واللحم الطري.
5.ஹூத் என்ற வார்த்தைப் பிரயோகம் சிறிய மற்றும் பெரிய மீனுக்குப் பயன்படுத்தப்படும் பிரயோகமாகும். ஸமக் என்ற வார்த்தைப் பிரயோகம் அல்குர்ஆனில் இடம்பெறவில்லை. ஹூத், நூன், லஹ்முத் தரீ என்பவைகளே இடம்பெற்றுள்ளன.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል ከህፍ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት