Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል ከህፍ   አንቀፅ:
مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَآىِٕهِمْ ؕ— كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْ ؕ— اِنْ یَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا ۟
18.5. அல்லாஹ்வுக்குப் பிள்ளை உள்ளதாக இட்டுக்கட்டும் இவர்களிடம் அவர்களின் வாதத்திற்கு, இவர்களிடமோ இவர்கள் குருட்டுத்தனமாகப் பின்பற்றும் இவர்களின் முன்னோர்களிடமோ எந்த ஆதாரமோ, அறிவோ இல்லை. சிந்திக்காமல் அவர்களின் வாயிலிருந்து வெளிப்படும் அந்த வார்த்தை மிகவும் மோசமானது. அவர்கள் எவ்வித அடிப்படையோ, ஆதாரமோ அற்ற பொய்யான வார்த்தையையே கூறுகிறார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلٰۤی اٰثَارِهِمْ اِنْ لَّمْ یُؤْمِنُوْا بِهٰذَا الْحَدِیْثِ اَسَفًا ۟
18.6. -தூதரே!- அவர்கள் இந்தக் குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ளவில்லை என்றால் கவலையால் உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!. அவ்வாறு செய்யாதீர். அவர்களை நேர்வழிக்குக் கொண்டுவருவது உம்மீதுள்ள கடமையல்ல. எடுத்துரைப்பதே உம்மீதுள்ள கடமையாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
اِنَّا جَعَلْنَا مَا عَلَی الْاَرْضِ زِیْنَةً لَّهَا لِنَبْلُوَهُمْ اَیُّهُمْ اَحْسَنُ عَمَلًا ۟
18.7. நாம் பூமியின் மேற்பகுதியிலுள்ள படைப்புகள் அனைத்தையும் அதற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளோம். அவர்களில் அல்லாஹ்வுக்கு விருப்பமான நற்செயல்களைச் செய்பவர் யார்? தீய செயல்களைச் செய்பவர் யார்? என்று நாம் அவர்களைச் சோதித்து, ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை நாம் வழங்குவதற்கே அவ்வாறு செய்துள்ளோம்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاِنَّا لَجٰعِلُوْنَ مَا عَلَیْهَا صَعِیْدًا جُرُزًا ۟ؕ
18.8. நாம் பூமியின் மேற்பகுதியிலுள்ள படைப்புகள் அனைத்தையும் தாவரங்களோ செடிகொடிகளோ அற்ற மண்ணாக ஆக்கிடுவோம். இது படைப்புகளுக்குரிய வாழ்க்கை முடிந்தபிறகேயாகும். அவர்கள் அதன் மூலம் படிப்பினை பெற்றுக்கொள்ளட்டும்.
ዓረብኛ ተፍሲሮች:
اَمْ حَسِبْتَ اَنَّ اَصْحٰبَ الْكَهْفِ وَالرَّقِیْمِ كَانُوْا مِنْ اٰیٰتِنَا عَجَبًا ۟
18.9. -தூதரே!- நிச்சயமாக குகைவாசிகளின் சம்பவமும் அவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட ஏடுகளும் நம்முடைய வியக்கத்தக்க சான்றுகளில் உள்ளவை என்று எண்ணாதீர். மாறாக அதுவல்லாத வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பது போன்றவை அதனை விட வியக்கத்தக்கதாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
اِذْ اَوَی الْفِتْیَةُ اِلَی الْكَهْفِ فَقَالُوْا رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَیِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا ۟
18.10. -தூதரே!- நம்பிக்கைகொண்ட இளைஞர்கள் தங்களின் மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தஞ்சமடைந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் தங்கள் இறைவனிடம் பிரார்த்தித்தவாறு கூறினார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்து, எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றி உன் புறத்திலிருந்து அருளை எங்களுக்கு வழங்குவாயாக. நிராகரிப்பாளர்களைவிட்டு புலம்பெயர்ந்ததையும் நம்பிக்கைகொண்டதையும் சத்திய வழியை அடைந்ததாகவும் சரியான நிலைப்பாடாகவும் எங்களுக்கு ஆக்குவாயாக.
ዓረብኛ ተፍሲሮች:
فَضَرَبْنَا عَلٰۤی اٰذَانِهِمْ فِی الْكَهْفِ سِنِیْنَ عَدَدًا ۟ۙ
18.11. அவர்கள் புறப்பட்டு குகையில் தஞ்சமடைந்த பிறகு சப்தங்களை செவியுறமுடியாதவாறு அவர்களில் செவிகளில் ஒரு திரையை ஏற்படுத்திவிட்டோம். பல்லாண்டுகள் அவர்களை தூங்கச் செய்தோம்.
ዓረብኛ ተፍሲሮች:
ثُمَّ بَعَثْنٰهُمْ لِنَعْلَمَ اَیُّ الْحِزْبَیْنِ اَحْصٰی لِمَا لَبِثُوْۤا اَمَدًا ۟۠
18.12. பின்னர் அவர்களின் நீண்ட தூக்கத்திற்குப் பிறகு நாம் அவர்களை எழுப்பினோம், அவர்களின் விஷயத்தில் கருத்துவேறுபாடுகொண்ட இரு கூட்டங்களில் யார் அவர்கள் குகையிலே தங்கியிருந்த கால அளவை சரியாக அறிகிறார்கள் என்பதை நாம் -மற்றவர்களுக்குப் புலப்படும் விதத்தில்- அறிவதற்காகவே அவ்வாறு செய்தோம்.
ዓረብኛ ተፍሲሮች:
نَحْنُ نَقُصُّ عَلَیْكَ نَبَاَهُمْ بِالْحَقِّ ؕ— اِنَّهُمْ فِتْیَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًی ۟ۗۖ
18.13. -தூதரே!- அவர்களின் செய்தியை சந்தேகமற்ற உண்மையான விதத்தில் நாம் உமக்கு அறிவிக்கின்றோம். தங்கள் இறைவனின் மீது நம்பிக்கைகொண்டு அவனுக்குக் கட்டுப்பட்டு நற்செயல்கள் புரிந்த இளைஞர்களே அவர்கள். நாம் அவர்களுக்கு மென்மேலும் நேர்வழியையும், சத்தியத்தின் மீது உறுதியையும் வழங்கினோம்.
ዓረብኛ ተፍሲሮች:
وَّرَبَطْنَا عَلٰی قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَاۡ مِنْ دُوْنِهٖۤ اِلٰهًا لَّقَدْ قُلْنَاۤ اِذًا شَطَطًا ۟
18.14. நம்பிக்கை மற்றும் அதில் உறுதியைக் கடைபிடித்தல் மூலம் அவர்களின் உள்ளங்களைப் பலப்படுத்தினோம். மேலும் நிராகரிக்கும் அரசனுக்கு முன்னிலையில் எழுந்து அல்லாஹ்வை மாத்திரமே நம்புவோம் என தமது நம்பிக்கையை அறிவித்து நாட்டைத் துறப்பதற்கான பொறுமையின் மூலமும் அவர்களின் உள்ளங்களை பலப்படுத்தினோம். அவர்கள் அரசனிடம் கூறினார்கள்: “எங்கள் இறைவனின் மீது நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அவனையே நாங்கள் வணங்கினோம். அவன்தான் வானங்கள் மற்றும் பூமியை படைத்துப் பராமரிக்கும் இறைவன். அவனைத் தவிர பொய்யாக கருதப்படக்கூடிய கடவுள்கள் யாரையும் நாங்கள் ஒருபோதும் வணங்க மாட்டோம். -அவனைத் தவிர மற்றவர்களை நாம் வணங்கினால்-, சத்தியத்தை விட்டு தூரமான, அநீதியான வார்த்தையை நாம் கூறியதாகிவிடும்.”
ዓረብኛ ተፍሲሮች:
هٰۤؤُلَآءِ قَوْمُنَا اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً ؕ— لَوْلَا یَاْتُوْنَ عَلَیْهِمْ بِسُلْطٰنٍ بَیِّنٍ ؕ— فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ۟ؕ
18.15. பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்கி கூறினார்கள்: “நம்முடைய இந்த சமூகத்தினர் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை வணங்கப்படும் தெய்வங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் தங்களின் வணக்க வழிபாட்டிற்கு தெளிவான ஆதாரங்களைக் கொண்டுவருவதற்கு சக்திபெற மாட்டார்கள். அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• الداعي إلى الله عليه التبليغ والسعي بغاية ما يمكنه، مع التوكل على الله في ذلك، فإن اهتدوا فبها ونعمت، وإلا فلا يحزن ولا يأسف.
1. அல்லாஹ்வின்பால் மக்களை அழைப்பவர் அவன் மீது நம்பிக்கைவைத்து தம்மால் இயன்ற அளவு சிறந்த முறையில் எடுத்துரைக்க முயற்சிக்க வேண்டும். அவர்கள் அதன் மூலம் நேர்வழி பெற்றால் நல்லது. இல்லையெனில் அதற்காக அழைப்பாளர் கவலை கொள்ளக்கூடாது, நிராசையடையக் கூடாது.

• في العلم بمقدار لبث أصحاب الكهف، ضبط للحساب، ومعرفة لكمال قدرة الله تعالى وحكمته ورحمته.
2. குகைவாசிகள் குகையில் தங்கியிருந்த கால அளவைக் அறிவதில் கணக்கை ஒழுங்குபடுத்துவதும் அல்லாஹ்வின் வல்லமை, அவனுடைய ஞானம், கருணைஆகியவற்றின் பரிபூரணத்தன்மையை அறிந்துகொள்வதும் உண்டு.

• في الآيات دليل صريح على الفرار بالدين وهجرة الأهل والبنين والقرابات والأصدقاء والأوطان والأموال؛ خوف الفتنة.
3. குழப்பத்திற்குப் பயந்து குடும்பம், பிள்ளைகள், உறவினர், நண்பர்கள், நாடுகள், சொத்துகள் ஆகியவற்றை விட்டு மார்க்கத்தைப் பாதுகாக்க புலம்பெயர்ந்து செல்லலாம் என்பதற்கு மேலுள்ள வசனங்களில் தெளிவான ஆதாரம் உண்டு.

• ضرورة الاهتمام بتربية الشباب؛ لأنهم أزكى قلوبًا، وأنقى أفئدة، وأكثر حماسة، وعليهم تقوم نهضة الأمم.
4. இளைஞர்களுக்கு இஸ்லாமிய பண்பாட்டுப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும். ஏனெனில் அவர்கள் மிகவும் தூய்மையான தெளிவான உள்ளம் கொண்டவர்கள், அதிகமாக உணர்ச்சி பொங்கக்கூடியவர்கள். அவர்களைக் கொண்டே சமூக எழுச்சி ஏற்படுகிறது.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል ከህፍ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት