Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አር-ረዕድ   አንቀፅ:
لَهٗ دَعْوَةُ الْحَقِّ ؕ— وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَجِیْبُوْنَ لَهُمْ بِشَیْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّیْهِ اِلَی الْمَآءِ لِیَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهٖ ؕ— وَمَا دُعَآءُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟
13.14. ஏகத்துவம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இதில் எவருக்கும் பங்கு இல்லை. இணைவைப்பாளர்கள் அழைக்கும் சிலைகள் அவர்களை அழைப்போரின் எந்தக் கோரிக்கைக்கும் எந்தப் பதிலையும் அளிக்காது. இதற்கு உதாரணம், தாகித்த மனிதன் தண்ணீரை நோக்கி கையை நீட்டிக் கொண்டு அது தன் வாய்க்குள் சென்றதன் பின் பருக நினைப்பவனை போன்றதாகும். அது ஒருபோதும் அவனுடைய வாய்க்குள் செல்லாது. நிராகரிப்பாளர்கள் சிலைகளை அழைப்பது வீணானதாகவும் சத்தியத்தை விட்டுத் தூரமானதாகவும் இருக்கின்றது. ஏனெனில் நிச்சயமாக அவை பலனை கொண்டுவரவோ தீங்கினை அகற்றவோ சக்தி பெறாது.
ዓረብኛ ተፍሲሮች:
وَلِلّٰهِ یَسْجُدُ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟
13.15. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் அல்லாஹ்வுக்கே சிரம்பணிந்து கட்டுப்படுகின்றனர். இதில் நம்பிக்கையாளன், நிராகரிப்பாளன் என அனைவரும் சமமானவர்களே. நம்பிக்கையாளன் விரும்பி அவனுக்குக் கட்டுப்படுகின்றான். நம்பிக்கையற்றவனோ நிர்ப்பந்தமாக அவனுக்குக் கட்டுப்படுகின்றான். ஆனால் அவனது இயல்போ விரும்பி அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறே அவனுக்குக் கூறுகிறது. நிழலுள்ள அனைத்துப் படைப்பினங்களின் நிழல்களும் பகலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் அவனுக்கே கட்டுப்படுகின்றன.
ዓረብኛ ተፍሲሮች:
قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— قُلِ اللّٰهُ ؕ— قُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ لَا یَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّا ؕ— قُلْ هَلْ یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬— اَمْ هَلْ تَسْتَوِی الظُّلُمٰتُ وَالنُّوْرُ ۚ۬— اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَیْهِمْ ؕ— قُلِ اللّٰهُ خَالِقُ كُلِّ شَیْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ ۟
13.16. -தூதரே!- அல்லாஹ்வுடன் மற்றவர்களை வணங்கும் நிராகரிப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? அவையிரண்டையும் நிர்வகிப்பவன் யார்?” -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் அவையிரண்டையும் படைத்தான். அவனே அவையிரண்டையும் நிர்வகிக்கின்றான். நீங்கள் இதனை ஒத்துக் கொள்கிறீர்கள்.” -தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிரவுள்ள இயலாத பாதுகாவலர்களையா நீங்கள் உங்களுக்கு எடுத்துக்கொண்டீர்கள்? அவை தமக்குத்தாமே பலனை கொண்டுவரவோ தம்மை விட்டும் எத்தீங்கையும் அகற்றவோ சக்தி பெறாது. அவ்வாறிருக்கும் போது எவ்வாறு அவை மற்றவர்களுக்குப் பயனளிக்கும்? -தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “அகப் பார்வையற்ற நிராகரிப்பாளனும் பார்வையுடைய நேர்வழி பெற்ற நம்பிக்கையாளனும் சமமாவார்களா? அல்லது நிராகரிப்பு என்னும் இருள்களும் ஈமான் எனும் ஒளியும் சமமாக முடியுமா? அல்லது தமது இணை தெய்வங்களின் படைப்புடன் அல்லாஹ்வின் படைப்பும் கலந்து குழம்பி விடும் அளவுக்கு அல்லாஹ்வைப் போன்று படைக்கும் இணைகளை அல்லாஹ்வுக்கு அவர்கள் ஏற்படுத்தியுள்ளனரா? -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன்; படைப்பில் அவனுக்கு யாதொரு இணையுமில்லை; அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்; அனைவரையும் மிகைத்தவன்.
ዓረብኛ ተፍሲሮች:
اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِیَةٌ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّیْلُ زَبَدًا رَّابِیًا ؕ— وَمِمَّا یُوْقِدُوْنَ عَلَیْهِ فِی النَّارِ ابْتِغَآءَ حِلْیَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ ؕ— كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْحَقَّ وَالْبَاطِلَ ؕ۬— فَاَمَّا الزَّبَدُ فَیَذْهَبُ جُفَآءً ۚ— وَاَمَّا مَا یَنْفَعُ النَّاسَ فَیَمْكُثُ فِی الْاَرْضِ ؕ— كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ ۟ؕ
13.17. அசத்தியத்தின் அழிவுக்கும் சத்தியம் நிலைப்பதற்கும் உதாரணமாக வானத்திலிருந்து பொழிந்த மழையை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதன் மூலம் ஓடைகள் சிறிய பெரிய அதன் அளவுக்கேற்ப நிரம்பி வழிகின்றன. வெள்ளம் மேலெழும் நுரைகளை சுமந்து செல்கிறது. மேலும், உருக்கி மனிதர்கள் அலங்காரமாகப் பயன்படுத்தும் நோக்கில் அவர்கள் நெருப்பிலிடும் பெறுமதியான கனிமங்களையும் அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். இரண்டிலும் நுரை மிதக்கின்றது. இவ்விரண்டு உதாரணங்கள் மூலமும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். அசத்தியம் மேலேழும் நுரையையும், கனிமங்களை உருக்கும் போது கழிந்து விடும் துருவையும் போன்றது. சத்தியம் தூய்மையான நீரைப் போன்றது. அது பருகப்படுகிறது. பழங்கள், புற்பூண்டுகள் ஆகியவற்றை முளைப்பிக்கிறது. மேலும் சத்தியம், உருக்கப்பட்ட பிறகு மீதமிருக்கும் மக்கள் பயனடையும் கனிமத்தைப் போன்றதாகும். இந்த இரண்டு உதாரணங்களைக் கூறியது போன்று அசத்தியத்திலிருந்து சத்தியம் தெளிவாக வேண்டும் என்பதற்காக மக்களுக்கு அல்லாஹ் உதாரணங்கள் கூறுகிறான்.
ዓረብኛ ተፍሲሮች:
لِلَّذِیْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمُ الْحُسْنٰی ؔؕ— وَالَّذِیْنَ لَمْ یَسْتَجِیْبُوْا لَهٗ لَوْ اَنَّ لَهُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ سُوْٓءُ الْحِسَابِ ۙ۬— وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمِهَادُ ۟۠
13.18. தன்னை ஏகத்துவப்படுத்துமாறும் தனக்குக் கட்டுப்படுமாறும் தமது இறைவன் அழைத்ததை ஏற்றுக்கொண்ட நம்பிக்கையாளர்களுக்கு சுவனம் என்னும் அழகிய கூலி இருக்கின்றது. அவனை ஓருமைப்படுத்தி அவனுக்குக் கட்டுப்படுமாறு விடுத்த அவனது அழைப்புக்குப் பதிலளிக்காத நிராகரிப்பாளர்களுக்கு பூமி நிறைய செல்வங்கள் இருந்து அதேபோன்று மேலதிகமாகவும் இருந்தாலும் அவர்கள் வேதனையிலிருந்து தப்பிக்க அவை அனைத்தையும் ஈடாகக் கொடுத்து விடுவார்கள். அவனுடைய அழைப்புக்கு பதிலளிக்காதவர்கள் அவர்களின் தீய செயல்களுக்கு முழுமையாக விசாரணை செய்யப்படுவார்கள். அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அவர்களின் விரிப்பும் தங்குமிடமுமான நரகம் மிகவும் மோசமானது.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• بيان ضلال المشركين في دعوتهم واستغاثتهم بغير الله تعالى، وتشبيه حالهم بحال من يريد الشرب فيبسط يده للماء بلا تناول له، وليس بشارب مع هذه الحالة؛ لكونه لم يتخذ وسيلة صحيحة لذلك.
1. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை அழைப்பதிலும் அவர்களிடம் உதவி தேடுவதிலும் உள்ள வழிகேடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்களின் உதாரணம், தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக அதனைத் தொடாமல் கைகளை அதன் பக்கம் நீட்டிக்கொண்டிருப்பவரைப் போன்றதாகும். உரிய வழிமுறையைக் கையாளாததினால் நீரை அருந்தவே முடியாது.

• أن من وسائل الإيضاح في القرآن: ضرب الأمثال وهي تقرب المعقول من المحسوس، وتعطي صورة ذهنية تعين على فهم المراد.
2. குர்ஆன் விஷயங்களை விளக்குவதற்கு உதாரணங்களையும் எடுத்துரைக்கிறது. அது வெறும் அறிவால் புரிந்து கொள்ளக்கூடியதை புலன் புரியுமளவுக்கு நெருக்கமாக்கி விடுகிறது. விஷயத்தை புரிந்து கொள்வதற்கு அதன் சரியான ஒரு விம்பத்தை மனதில் தோற்றுவிக்கிறது.

• إثبات سجود جميع الكائنات لله تعالى طوعًا، أو كرهًا بما تمليه الفطرة من الخضوع له سبحانه.
3. விரும்பியோ அல்லது விரும்பாமலோ இயல்பு அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட வேண்டும் எனக் கூறவதால் இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்து கட்டுப்படுகின்றன என்ற விஷயம் உறுதியாகிறது.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አር-ረዕድ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት