Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ሁድ   አንቀፅ:
وَیَصْنَعُ الْفُلْكَ ۫— وَكُلَّمَا مَرَّ عَلَیْهِ مَلَاٌ مِّنْ قَوْمِهٖ سَخِرُوْا مِنْهُ ؕ— قَالَ اِنْ تَسْخَرُوْا مِنَّا فَاِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُوْنَ ۟ؕ
11.38. நூஹ் தம் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தினார். கப்பல் கட்ட ஆரம்பித்தார். அவருடைய சமூகத்தின் தலைவர்களும் பெரியவர்களும் - தண்ணீரோ ஆறுகளோ இல்லாத நிலத்தில் கப்பலை செய்து கொண்டிருந்ததற்காக - அவரைக் கடந்து செல்லும் போதெல்லாம் பரிகாசம் செய்தார்கள். அவர்கள் திரும்பத் திரும்ப பரிகாசம் செய்த போது நூஹ் கூறினார்: -“செல்வாக்கு உடையவர்களே!- இன்று நாங்கள் கப்பலைச் செய்யும் போது நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்தால் நீங்கள் மூழ்கப் போவதை நீங்கள் அறியாமலிருப்பதை எண்ணி நாங்களும் பரிகாசம் செய்வோம்.
ዓረብኛ ተፍሲሮች:
فَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ— مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَیَحِلُّ عَلَیْهِ عَذَابٌ مُّقِیْمٌ ۟
11.39. இந்த உலகில் இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும் மறுமை நாளில் துண்டிக்கப்படாத நிரந்தரமான தண்டனை யார் மீது இறங்கும் என்பதையும் நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
حَتّٰۤی اِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُ ۙ— قُلْنَا احْمِلْ فِیْهَا مِنْ كُلٍّ زَوْجَیْنِ اثْنَیْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَیْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ ؕ— وَمَاۤ اٰمَنَ مَعَهٗۤ اِلَّا قَلِیْلٌ ۟
11.40. அல்லாஹ் கட்டுமாறு கட்டளையிட்ட கப்பலை நிர்மாணிக்கும் பணியை நூஹ் நிறைவு செய்தார். அவர்களை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்து, வெள்ளம் பெருக்கெடுப்பதை அறிவிக்கும் விதமாக அவர்கள் சமைத்துக் கொண்டிருந்த அடுப்பிலிருந்து நீர் பொங்கியதும். நாம் நூஹிடம் கூறினோம்: “பூமியிலுள்ள எல்லா வகையான உயிரினங்களிலிருந்தும் ஆண் பெண் ஜோடியொன்றை கப்பலில் ஏற்றிக் கொள்வீராக. நம்பிக்கை கொள்ளாததனால் மூழ்குபவர் என ஏற்கனவே முடிவாகி விட்டவர்களைத் தவிர்ந்த உம் குடும்பத்தாரையும் உம் சமூகத்தாரில் நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக் கொள்வீராக. அவர் தம் சமூகத்தாரிடையே நீண்ட காலம் தங்கியிருந்து அவர்களை அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுமாறு அழைத்த போதும் அவர்களிலிருந்து குறைவானவர்களே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَقَالَ ارْكَبُوْا فِیْهَا بِسْمِ اللّٰهِ مَجْرٖىهَا وَمُرْسٰىهَا ؕ— اِنَّ رَبِّیْ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
11.41. நூஹ் நம்பிக்கைகொண்ட தம் குடும்பத்தாரிடமும் சமூகத்தாரிடமும் கூறினார்: “கப்பலில் ஏறிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பெயரால் கப்பல் புறப்படும். அவனுடைய பெயராலே அது நிலைகொண்டு விடும். நிச்சயமாக என் இறைவன் தன் பக்கம் மீளும் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக் கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். நம்பிக்கையாளர்களை அவன் அழிவிலிருந்து காத்ததும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَهِیَ تَجْرِیْ بِهِمْ فِیْ مَوْجٍ كَالْجِبَالِ ۫— وَنَادٰی نُوْحُ ١بْنَهٗ وَكَانَ فِیْ مَعْزِلٍ یّٰبُنَیَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِیْنَ ۟
11.42. மலைகளைப் போன்ற மாபெரும் அலையில் மக்களையும் இன்னபிற உயிரினங்களையும் சுமந்து கொண்டு கப்பல் சென்றது. தன் தந்தை மற்றும் சமூகத்தை விட்டும் ஒரு இடத்தில் ஒதுங்கியிருந்த நிராகரிப்பாளனான தனது மகனை நூஹ் தந்தைப் பாசத்தினால் அழைத்தார். “என் மகனே,வெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்காக எங்களுடன் கப்பலில் ஏறிக்கொள். நிராகரிப்பாளர்களுடன் இணைந்து விடாதே. அவ்வாறு இணைந்தால் அவர்களுக்கு நேர்ந்த மூழ்கடிக்கும் அழிவு உன்னையும் பாதிக்கும்.”
ዓረብኛ ተፍሲሮች:
قَالَ سَاٰوِیْۤ اِلٰی جَبَلٍ یَّعْصِمُنِیْ مِنَ الْمَآءِ ؕ— قَالَ لَا عَاصِمَ الْیَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَ ۚ— وَحَالَ بَیْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِیْنَ ۟
11.43. நூஹின் மகன் அவரிடம் கூறினான்: “நீர் என்னை மூழ்கடிப்பதை விட்டும் என்னைப் பாதுகாப்பதற்காக உயரமான ஒரு மலையில் ஒதுங்கிக் கொள்வேன்.” நூஹ் தம் மகனிடம் கூறினார்: “இன்றைய தினம் அல்லாஹ்வின் தண்டனையான வெள்ளத்தில் மூழ்குவதிலிருந்து அவன் கருணை காட்டியவர்களைத் தவிர யாரும் தப்பமுடியாது.” அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே அவருக்கும் நிராகரித்த அவருடைய மகனுக்குமிடையே ஒரு அலை குறுக்கிட்டது. எனவே அவருடைய மகன் அவனது நிராகரிப்பினால் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டவனாகி விட்டான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَقِیْلَ یٰۤاَرْضُ ابْلَعِیْ مَآءَكِ وَیٰسَمَآءُ اَقْلِعِیْ وَغِیْضَ الْمَآءُ وَقُضِیَ الْاَمْرُ وَاسْتَوَتْ عَلَی الْجُوْدِیِّ وَقِیْلَ بُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
11.44. வெள்ளம் முடிந்த பிறகு அல்லாஹ் பூமிக்குக் கட்டளையிட்டான்: “பூமியே! உன் மேற்பரப்பிலுள்ள வெள்ள நீரை உறிஞ்சி விடு.” வானத்திற்குக் கட்டளையிட்டான்: “வானமே! நிறுத்திக்கொள், மழை பொழியாதே.” தண்ணீர் குறைந்து பூமி காய்ந்து விட்டது. அல்லாஹ் நிராகரிப்பாளர்களை அழித்துவிட்டான். கப்பல் ஜுதி மலையின் நின்றது. “நிராகரித்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய சமூகத்துக்கு அழிவு உண்டாகட்டும்” என்று கூறப்பட்டது.
ዓረብኛ ተፍሲሮች:
وَنَادٰی نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِیْ مِنْ اَهْلِیْ وَاِنَّ وَعْدَكَ الْحَقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِیْنَ ۟
11.45. நூஹ் தம் இறைவனிடம் உதவிகோரியவராக அவனை அழைத்தார். அவர் கூறினார்: “என் மகனும் நீ காப்பாற்றுவேன் என்று வாக்களித்த என் குடும்பத்தைச் சார்ந்தவன்தானே. உன் வாக்குறுதி உண்மையானது. நீ ஒருபோதும் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படமாட்டாய். நீ தீர்ப்புக் கூறுவோரில் மிக சிறந்த நீதமானவனும் மிகவும் அறிந்தவனுமாவாய்.”
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• بيان عادة المشركين في الاستهزاء والسخرية بالأنبياء وأتباعهم.
1. இறைத் தூதர்களையும் அவர்களைப் பின்பற்றுபவர்களையும் பரிகாசம் செய்வது நிராகரிப்பாளர்களின் வழக்கம்தான் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• بيان سُنَّة الله في الناس وهي أن أكثرهم لا يؤمنون.
2. மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் என்பதே மனிதர்களின் விஷயத்தில் அல்லாஹ் விதித்த வழிமுறையாகும்.

• لا ملجأ من الله إلا إليه، ولا عاصم من أمره إلا هو سبحانه.
3. அல்லாஹ்வை விட்டும் வேறெங்கும் ஒதுங்கவோ, அவனின் கட்டளைகளில் இருந்து பாதுகாப்பவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ሁድ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት