Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ሁድ   አንቀፅ:
اُولٰٓىِٕكَ لَمْ یَكُوْنُوْا مُعْجِزِیْنَ فِی الْاَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِیَآءَ ۘ— یُضٰعَفُ لَهُمُ الْعَذَابُ ؕ— مَا كَانُوْا یَسْتَطِیْعُوْنَ السَّمْعَ وَمَا كَانُوْا یُبْصِرُوْنَ ۟
11.20. இந்த பண்புகளை உடையவர்கள் அல்லாஹ்வின் வேதனை இறங்கினால் அதிலிருந்து இப்பூமியில் எங்கும் விரண்டோட சக்தியற்றவர்களாவர். அல்லாஹ்வின் வேதனையை அவர்களை விட்டும் தடுக்கும் அல்லாஹ்வைத் தவிரவுள்ள எந்த உதவியாளர்களும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு விட்டதனாலும் பிற மக்களையும் அதனை விட்டுத் தடுத்ததனாலும் மறுமை நாளில் அவர்களின் வேதனை இன்னும் அதிகரிப்படும். அவர்கள் இவ்வுலகில் சத்தியத்தையும் நேர்வழியையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்பவர்களாக இருக்கவில்லை; சத்தியத்தை அவர்கள் கடுமையாக புறக்கணித்ததனால் பிரபஞ்சத்தில் காணப்படும் அல்லாஹ்வின் சான்றுகளை பயனளிக்கும் விதத்தில் பார்க்கக்கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை.
ዓረብኛ ተፍሲሮች:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
11.21. இந்த பண்புகளை உடையவர்கள்தாம் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அழிவிற்கான காரணிகளைத் தேடி தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்களாவர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்த பரிந்துரையாளர்கள், இணைத் தெய்வங்கள் யாவும் அவர்களை விட்டும் மறைந்துவிட்டன.
ዓረብኛ ተፍሲሮች:
لَا جَرَمَ اَنَّهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ۟
11.22. நிச்சயமாக மறுமை நாளில் இவர்கள்தாம் நஷ்டமடைந்த வியாபாரிகள். அவர்கள் ஈமானுக்குப் பகரமாக நிராகரிப்பையும் மறுமைக்குப் பகரமாக இவ்வுலகத்தையும் அருளுக்குப் பகரமாக வேதனையையும் ஆக்கிக் கொண்டார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَتُوْۤا اِلٰی رَبِّهِمْ ۙ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
11.23. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் உண்மைப்படுத்தி, நற்செயல்கள் புரிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து அடிபணிந்தவர்கள்தாம் சுவனவாசிகளாவர். அங்கு என்றென்றும் அவர்கள் தங்கியிருப்பார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
مَثَلُ الْفَرِیْقَیْنِ كَالْاَعْمٰی وَالْاَصَمِّ وَالْبَصِیْرِ وَالسَّمِیْعِ ؕ— هَلْ یَسْتَوِیٰنِ مَثَلًا ؕ— اَفَلَا تَذَكَّرُوْنَ ۟۠
11.24. நிராகரிப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள் ஆகிய இரு பிரிவினர்களுக்கும் உதாரணம், நிராகரிப்பாளர்கள் எதையும் பார்க்க முடியாத குருடர்களையும் எதையும் செவியேற்க முடியாத செவிடர்களையும் போன்றவர்களாவர். அவர்களால் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்கமாட்டார்கள். அவர்களுக்குப் பயனளிக்கும விதத்தில் பார்க்கவும் மாட்டார்கள். நம்பிக்கையாளர்கள் நன்கு செவியேற்கக் கூடியவர்களையும் பார்க்கக் கூடியவர்களையும் போன்றவர்களாவர். இருபிரிவினரும் இந்நிலையில் சமமாவார்களா என்ன? ஒருபோதும் சமமாக மாட்டார்கள். நீங்கள் இதைக் கொண்டு படிப்பினை பெறமாட்டீர்களா?
ዓረብኛ ተፍሲሮች:
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ ؗ— اِنِّیْ لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۙ
11.25. நாம் நூஹை அவருடைய சமூகத்தின்பால் தூதராக அனுப்பினோம். அவர் அவர்களுக்கு கூறினார்: “என் சமூகமே! நான் உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்பவனாவேன்; உங்களுக்கு எந்த தூதைக்கொண்டு நான் அனுப்பப்பட்டுளேனோ அதை உங்களுக்கு நான் தெளிவுபடுத்தக் கூடியவனாவேன்.
ዓረብኛ ተፍሲሮች:
اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ— اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ اَلِیْمٍ ۟
11.26. அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படி நான் உங்களை அழைக்கின்றேன். அவனைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் மீது வேதனை மிக்க நாளின் தண்டனையைக் குறித்து அஞ்சுகிறேன்.
ዓረብኛ ተፍሲሮች:
فَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰىكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰىكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِیْنَ هُمْ اَرَاذِلُنَا بَادِیَ الرَّاْیِ ۚ— وَمَا نَرٰی لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِیْنَ ۟
11.27. அவருடைய சமூகத்தின் நிராகரித்த தலைவர்கள் கூறினார்கள்: “நாங்கள் உமது அழைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்களை விட உமக்கு எந்த சிறப்பும் இல்லை. ஏனெனில் நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர்தாம். மேலும் எமது பார்வையில் இழிவானவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். நாங்கள் உம்மைப் பின்பற்றுவதற்கு பணத்திலோ பதவியிலோ கண்ணியத்திலோ எவ்வித மேலதிக சிறப்பும் உங்களுக்கு இல்லை. மாறாக உங்களது கூற்றில் நீங்கள் பொய்யர்களே என நாங்கள் கருதுகிறோம்.”
ዓረብኛ ተፍሲሮች:
قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَاٰتٰىنِیْ رَحْمَةً مِّنْ عِنْدِهٖ فَعُمِّیَتْ عَلَیْكُمْ ؕ— اَنُلْزِمُكُمُوْهَا وَاَنْتُمْ لَهَا كٰرِهُوْنَ ۟
11.28. நூஹ் அவர்களிடம் கூறினார்: “என் சமூகமே! என் நம்பகத் தன்மைக்கு சாட்சி கூறி, என்னை உண்மைப்படுத்துவதை உங்கள் மீது கடமையாக்கும் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீது நானிருந்து, அவன் தன் புறத்திலிருந்து எனக்கு தூதுத்துவம், நபித்துவம் என்னும் அருட்கொடையையும் வழங்கியிருக்க, உங்களின் அறியாமையினால் உங்களுக்கு அது மறைக்கப்பட்டதாக இருந்தால் நாம் உங்களை நம்பிக்கைகொள்ளும்படி, உங்களின் உள்ளங்களில் அதனை வலுக்கட்டாயமாக நுழைவித்து கட்டாயப்படுத்தவா முடியும்? நாம் அதற்கு சக்தி பெற்றவர்கள் அல்ல. அல்லாஹ்வே ஈமான் கொள்ளும் பாக்கியத்தை அளிக்கிறான்.”
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• الكافر لا ينتفع بسمعه وبصره انتفاعًا يقود للإيمان، فهما كالمُنْتَفِيَين عنه بخلاف المؤمن.
1. நிராகரிப்பாளன் தன் செவிப்புலனாலும் பார்க்கும் திறனாலும் நம்பிக்கைக்கு இட்டுச் செல்லும் விதத்தில் பயன்பெறுவதில்லை. எனவே அவ்விரண்டும் அவனுக்கு இல்லாதவை போன்றாகி விட்டது. ஆனால் நம்பிக்கையாளனோ இதற்கு மாறாக (அவற்றின் மூலம் பயனடைகிறான்).

• سُنَّة الله في أتباع الرسل أنهم الفقراء والضعفاء لخلوِّهم من الكِبْر، وخُصُومهم الأشراف والرؤساء.
2. பெருமையற்றிருக்க வேண்டும் என்பதனால் இறைத் தூதர்களைப் பின்பற்றியவர்கள் ஏழைகளாகவும் பலவீனர்களாகவும் தாம் இருந்துள்ளார்கள். ஆனால் அவர்களின் எதிரிகள் உயர்ந்தவர்களாகவும் தலைவர்களாகவும் இருந்துள்ளார்கள்.

• تكبُّر الأشراف والرؤساء واحتقارهم لمن دونهم في غالب الأحيان.
3. தலைவர்களும் உயர்ந்தவர்களும் பெருமையும் தங்களைவிடக் கீழானவர்களை அற்பமாகக் கருதும் தன்மையும் உடையோராக உள்ளனர்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ሁድ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት