Check out the new design

《古兰经》译解 - 泰米尔语翻译-欧麦尔·谢里夫 * - 译解目录

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

含义的翻译 章: 优努斯   段:
وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِیْۤ اٰیَاتِنَا ؕ— قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا ؕ— اِنَّ رُسُلَنَا یَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ ۟
இன்னும், மனிதர்களுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின்னர் கருணையை நாம் சுவைக்க வைத்தால், அப்போது அவர்களுக்கு நம் வசனங்களில் ஒரு சூழ்ச்சி செய்ய (சிந்தனை தோன்றுகிறது). (நபியே!) “அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிகத் தீவிரமானவன்” என்று கூறுவீராக! நிச்சயமாக நம் (வானவ) தூதர்கள் நீங்கள் சூழ்ச்சி செய்வதைப் பதிவு செய்கிறார்கள்.
阿拉伯语经注:
هُوَ الَّذِیْ یُسَیِّرُكُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ ؕ— حَتّٰۤی اِذَا كُنْتُمْ فِی الْفُلْكِ ۚ— وَجَرَیْنَ بِهِمْ بِرِیْحٍ طَیِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِیْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِیْطَ بِهِمْ ۙ— دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬— لَىِٕنْ اَنْجَیْتَنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
அவன்தான் உங்களை நிலத்திலும் நீரிலும் பயணிக்க வைக்கிறான். இறுதியாக, நீங்கள் கப்பல்களில் இருக்கும் நிலையில், நல்ல காற்றால் (அந்த கப்பல்கள்) அ(வற்றில் பயணிப்ப)வர்களை சுமந்து செல்கின்றன. இன்னும், அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். (இந்நிலையில்) அவற்றைப் புயல் காற்று வந்தடைந்தன. இன்னும், எல்லா இடத்திலிருந்தும் அவர்களை அலைகள் சூழ்ந்து வந்தன. இன்னும், “நிச்சயமாக தாம் அழிக்கப்பட்டோம்” என்று அவர்கள் எண்ணியபோது, “(அல்லாஹ்வே!) இதிலிருந்து நீ எங்களைப் பாதுகாத்(து கரை சேர்த்)தால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர்களில் இருப்போம்” என்று அவர்கள் அல்லாஹ்வை - அவனுக்கு (மட்டும்) வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக - அழைக்கிறார்கள்.
阿拉伯语经注:
فَلَمَّاۤ اَنْجٰىهُمْ اِذَا هُمْ یَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ— یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّمَا بَغْیُكُمْ عَلٰۤی اَنْفُسِكُمْ ۙ— مَّتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ— ثُمَّ اِلَیْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
ஆக, அவன் அவர்களை பாதுகாத்தபோது அவர்கள் பூமியில் உடனே நியாயமின்றி, (பாவம் செய்வதிலும் குழப்பம் செய்வதிலும்) எல்லை மீறுகிறார்கள். மனிதர்களே! உங்கள் எல்லை மீறுதல் எல்லாம் உங்களுக்கே கேடானதாகும். இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமாகும். பிறகு, நம் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, (அப்போது) நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் உங்களுக்கு அறிவிப்போம்.
阿拉伯语经注:
اِنَّمَا مَثَلُ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا یَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُ ؕ— حَتّٰۤی اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّیَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَیْهَاۤ ۙ— اَتٰىهَاۤ اَمْرُنَا لَیْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِیْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ ؕ— كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
உலக வாழ்க்கையின் உதாரணமெல்லாம் மேகத்திலிருந்து நாம் இறக்கிய (மழை) நீரைப் போன்றுதான். ஆக, மனிதர்களும் கால்நடைகளும் புசிக்கின்ற பூமியின் தாவரம் அ(ந்)த (மழையி)ன் மூலம் முளைத்து, (ஒன்றோடு ஒன்று) கலந்து (அடர்த்தியாக வளர்ந்து) விட்டது. இறுதியாக, (அந்த செடி கொடிகளால்) பூமி அலங்காரமாக காட்சி தந்தது. இன்னும், அதன் உரிமையாளர்கள் (பயிர்களை அறுவடை செய்வதற்காக அங்கு வந்து,) நிச்சயமாக அவர்கள் அவற்றின் மேல் (-அவற்றை அறுவடை செய்ய) ஆற்றல் பெற்றவர்கள் என்று எண்ணியபோது, - (அவற்றை அழிப்பதற்குரிய) நம் கட்டளை இரவில் அல்லது பகலில் அவற்றுக்கு வந்தது. ஆகவே, அவற்றை அவை நேற்றைய தினம் இல்லாததைப் போன்று வேரறுக்கப்பட்டதாக நாம் ஆக்கி விட்டோம். (அல்லாஹ்வின் அத்தாட்சிகளில்) சிந்திக்கின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு நாம் விவரிக்கிறோம்.
阿拉伯语经注:
وَاللّٰهُ یَدْعُوْۤا اِلٰی دَارِ السَّلٰمِ ؕ— وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
ஈடேற்றத்தின் இல்ல(மாகிய சொர்க்க)த்தின் பக்கம் அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். இன்னும் அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டுகிறான்.
阿拉伯语经注:
 
含义的翻译 章: 优努斯
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语翻译-欧麦尔·谢里夫 - 译解目录

由谢赫欧麦尔·谢里夫·本·阿布杜·赛拉姆翻译。

关闭