Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Chương: Al-Ma-idah   Câu:
مِنْ اَجْلِ ذٰلِكَ ؔۛۚ— كَتَبْنَا عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَیْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِی الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِیْعًا ؕ— وَمَنْ اَحْیَاهَا فَكَاَنَّمَاۤ اَحْیَا النَّاسَ جَمِیْعًا ؕ— وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَیِّنٰتِ ؗ— ثُمَّ اِنَّ كَثِیْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰلِكَ فِی الْاَرْضِ لَمُسْرِفُوْنَ ۟
5.32. காபீல் தன் சகோதரனைக் கொலை செய்ததனால் இஸ்ராயீலின் மக்களுக்கு அறிவித்தோம்: “பழிவாங்குதல் அல்லது நிராகரிப்போ வழிப்பறிக்கொள்ளை மூலமோ பூமியில் குழப்பம் விளைவித்தல் ஆகிய காரணத்திற்காக அன்றி ஒரு மனிதனைக் கொலை செய்பவர் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவரைப் போன்றவராவார். ஏனெனில் அவன் அப்பாவிக்கும் குற்றவாளிக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணவில்லை. யார் அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதற்காக ஒரு உயிரைக் கொலைசெய்யாமல் தவிர்ந்துகொண்டாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போலாவார். ஏனெனில் அவரது செயலால் அனைவருக்கும் அமைதி கிடைக்கிறது. எமது தூதர்கள் இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். இருந்தும் அவர்களில் பெரும்பாலானோர் பாவங்கள் புரிந்து தங்கள் தூதர்களுக்கு மாறுசெய்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களாகவே இருந்தார்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
اِنَّمَا جَزٰٓؤُا الَّذِیْنَ یُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَسْعَوْنَ فِی الْاَرْضِ فَسَادًا اَنْ یُّقَتَّلُوْۤا اَوْ یُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَیْدِیْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ یُنْفَوْا مِنَ الْاَرْضِ ؕ— ذٰلِكَ لَهُمْ خِزْیٌ فِی الدُّنْیَا وَلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ
5.33. அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போரிட்டு, கொலை, சொத்தபகரிப்பு, வழிப்பறிக்கொள்ளை ஆகிய செயல்களின் மூலம் பூமியில் குழப்பத்தையும் வெறுப்பையும் விளைவிக்க விரைபவர்களின் கூலி இதுதான்: “அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு அல்லது அறையப்படாமல் கொல்லப்பட வேண்டும் அல்லது அவர்களின் வலது கையையும் இடது காலையும் வெட்ட வேண்டும் அத்தவறில் மீண்டும் ஈடுபட்டால் இடது கையுடன் வலது காலும் துண்டிக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும். இந்த தண்டனை அவர்களுக்கு இவ்வுலகில் கிடைக்கும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
Các Tafsir tiếng Ả-rập:
اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ قَبْلِ اَنْ تَقْدِرُوْا عَلَیْهِمْ ۚ— فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
5.34. ஆட்சியாளர்களே! ஆயினும் இந்த வழிப்பறிக்கொள்ளையர்கள் உங்களிடம் பிடிபடுவதற்கு முன்னரே பாவமன்னிப்புக் கோரிக்கொண்டாலே தவிர. அறிந்துகொள்ளுங்கள், பாவமன்னிப்புக்கோரியதன் பின் அவர்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அவர்களைத் தண்டிக்காமல் விட்டு விடுவதும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.
Các Tafsir tiếng Ả-rập:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَیْهِ الْوَسِیْلَةَ وَجَاهِدُوْا فِیْ سَبِیْلِهٖ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
5.35. அல்லாஹ்வை நம்பியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனது நெருக்கத்தையும் தேடுங்கள். அல்லாஹ்வின் திருப்தியை நாடி நிராகரிப்பாளர்களுடன் போர் செய்யுங்கள். நீங்கள் இவ்வாறு செய்தால் நீங்கள் வேண்டுவதைப் பெற்று பயப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
Các Tafsir tiếng Ả-rập:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ اَنَّ لَهُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لِیَفْتَدُوْا بِهٖ مِنْ عَذَابِ یَوْمِ الْقِیٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
5.36. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களுக்கு பூமியிலுள்ளவை அனைத்தும் அது போன்ற இன்னொரு மடங்கும் சொந்தமாக இருந்தாலும், மறுமைநாளில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க அவற்றை அவர்கள் ஈடாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனையுண்டு.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• حرمة النفس البشرية، وأن من صانها وأحياها فكأنما فعل ذلك بجميع البشر، وأن من أتلف نفسًا بشرية أو آذاها من غير حق فكأنما فعل ذلك بالناس جميعًا.
1.மனித உயிர் புனிதமானது. ஒரு உயிரைப் பாதுகாத்து உயிர் வாழவைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழவைத்தவர் போன்றவராவார். எவ்வித உரிமையுமின்றி ஒரு உயிரை அழித்தவர் அல்லது தீங்கு விளைவித்தவர் அனைத்து மனிதர்களுக்கும் அவ்வாறு செய்தவர் போலாவார்.

• عقوبة الذين يحاربون الله ورسوله ممن يفسدون بالقتل وانتهاب الأموال وقطع الطرق هي: القتل بلا صلب، أو مع الصلب، أو قطع الأطرف من خلاف، أو بتغريبهم من البلاد؛ وهذا على حسب ما صدر منهم.
2. கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவற்றின் மூலம் பூமியில் குழப்பம் விளைவித்து அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போரிடக்கூடியவர்களுக்கான தண்டனை இதுதான், தூக்கில் போடப்பட்டோ தூக்கில் போடப்படாமலோ அவர்கள் கொல்லப்பட வேண்டும் அல்லது அவர்களின் மாறுகை மாறுகால் வெட்டப்பட வேண்டும் அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும். இது அவர்களின் செயல்களுக்கேற்பவே அமைந்துள்ளது.

• توبة المفسدين من المحاربين وقاطعي الطريق قبل قدرة السلطان عليهم توجب العفو.
3. மன்னர் கைது செய்வதற்கு முன் குழப்பக்காரர்களும் வழிப்பறிக்கொள்ளயைர்களும் திருந்திவிட்டால் அவர்களை மன்னிப்பது அவசியமாகும்.

 
Ý nghĩa nội dung Chương: Al-Ma-idah
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an - Mục lục các bản dịch

Do Trung tâm Diễn giải Nghiên cứu Kinh Qur'an phát hành.

Đóng lại