Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Chương: Al-Nisa'   Câu:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یَزْعُمُوْنَ اَنَّهُمْ اٰمَنُوْا بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ یُرِیْدُوْنَ اَنْ یَّتَحَاكَمُوْۤا اِلَی الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْۤا اَنْ یَّكْفُرُوْا بِهٖ ؕ— وَیُرِیْدُ الشَّیْطٰنُ اَنْ یُّضِلَّهُمْ ضَلٰلًا بَعِیْدًا ۟
4.60. தூதரே! “உம்மீது இறக்கப்பட்டதன் மீதும் உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்கு இறக்கப்பட்டதன் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம்” என்று பொய்யாக வாதிடும் யூதர்களிலுள்ள நயவஞ்சகர்களது முரண்பாட்டை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் அல்லாஹ்வின் சட்டங்களை விட்டுவிட்டு மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களிடம் தீர்வு தேடுகிறார்கள். அவற்றை நிராகரிக்கும்படியே அவர்கள் ஏவப்பட்டிருந்தார்கள். அவர்கள் சத்தியத்தை அடையமுடியாத அளவு ஷைத்தான் அவர்களை அதனை விட்டும் வெகுதூரமாக்க விரும்புகிறான்.
Các Tafsir tiếng Ả-rập:
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ رَاَیْتَ الْمُنٰفِقِیْنَ یَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا ۟ۚ
4.61. தூதரே! இந்த நயவஞ்சகர்களிடம், “உங்களிடையேயுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அல்லாஹ் இறக்கிய வேதத்திலுள்ள தீர்ப்பின் பக்கமும், உங்களது பிரச்சினையில் தீர்ப்பு வழங்குவதற்காக தூதரின் பக்கமும் வாருங்கள்” என்று கூறப்பட்டால் உம்மைப் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு தீர்வுதேடி மற்றவர்களிடம் செல்வதை நீர் காண்பீர்.
Các Tafsir tiếng Ả-rập:
فَكَیْفَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ثُمَّ جَآءُوْكَ یَحْلِفُوْنَ ۖۗ— بِاللّٰهِ اِنْ اَرَدْنَاۤ اِلَّاۤ اِحْسَانًا وَّتَوْفِیْقًا ۟
4.62. தூதரே! அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டு, “நாங்கள் உங்களைவிட்டுவிட்டு மற்றவர்களிடம் சென்றது எங்களிடையே நன்மையும் இணக்கமும் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்” எனஅல்லாஹ்வின் பெயரைக்கொண்டு சத்தியம் செய்து சாக்குப்போக்குக் கூறியவர்களாக உம்மிடம் வரும்போழுது அந்த நயவஞ்சகர்களின் நிலை எவ்வாறிருக்கும்?! அவர்கள் அந்த வாதத்தில் பொய்யர்களே. ஏனெனில் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களைத் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வதில்தான் நன்மை அடங்கியுள்ளது.
Các Tafsir tiếng Ả-rập:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یَعْلَمُ اللّٰهُ مَا فِیْ قُلُوْبِهِمْ ۗ— فَاَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِیْۤ اَنْفُسِهِمْ قَوْلًا بَلِیْغًا ۟
4.63. இவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் நயவஞ்சகத்தையும் கெட்ட எண்ணத்தையும் அல்லாஹ் நன்கறிவான். தூதரே! அவர்களைப் புறக்கணித்து விட்டு விடுவீராக. அவர்களுக்கு ஆர்வமூட்டியவாறும் எச்சரிக்கை செய்தவாறும் அல்லாஹ்வின் கட்டளைகளைத் தெளிவுபடுத்துவீராக. அவர்களின் உள்ளங்களில் ஆணித்தரமாகப் பதிந்து உணர்வூட்டும் வார்த்தையைக் கூறுவீராக.
Các Tafsir tiếng Ả-rập:
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِیُطَاعَ بِاِذْنِ اللّٰهِ ؕ— وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِیْمًا ۟
4.64. நாம் தூதர்களை அனுப்பியதெல்லாம் அல்லாஹ்வின் நாட்டத்தையும், அவனின் ஏற்பாட்டையும் கொண்டு அவர் கட்டளையிடும் விஷயங்களில் மக்கள் அவருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் பாவங்கள் செய்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்த சமயத்தில் - நீர் உயிரோடு இருக்கும்போது - உம்மிடம் வந்து தாங்கள் செய்த பாவங்களை ஒத்துக் கொண்டு கைசேதப்பட்டு திருந்தியவர்களாக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால், நீரும் அவர்களுக்காக மன்னிப்புக் கோரினால் அவர்கள் அல்லாஹ்வை பெரும் மன்னிப்பாளனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் கண்டிருப்பார்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
فَلَا وَرَبِّكَ لَا یُؤْمِنُوْنَ حَتّٰی یُحَكِّمُوْكَ فِیْمَا شَجَرَ بَیْنَهُمْ ثُمَّ لَا یَجِدُوْا فِیْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَیْتَ وَیُسَلِّمُوْا تَسْلِیْمًا ۟
4.65. ஆனால் உண்மையில் விடயம் நயவஞ்சகர்கள் கூறுவது போலல்ல. பின்னர் அல்லாஹ் தன்மீதே சத்தியமிட்டுக் கூறுகிறான், “அவர்கள் தங்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு தூதர் உயிரோடு இருக்கும்போது அவரிடமும் அவர் இறந்தபிறகு மார்க்க சட்டங்களிடமும் தீர்வு தேடி, அந்த தீர்வில் சந்தேகம்கொள்ளாமல் அதனை முழுமனதாக ஏற்றுக்கொண்டு அதற்குக் கட்டுப்படும்வரை உண்மையான நம்பிக்கையாளர்களாக ஆக மாட்டார்கள்.”
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• الاحتكام إلى غير شرع الله والرضا به مناقض للإيمان بالله تعالى، ولا يكون الإيمان التام إلا بالاحتكام إلى الشرع، مع رضا القلب والتسليم الظاهر والباطن بما يحكم به الشرع.
1. அல்லாஹ்வின் சட்டங்களை விட்டுவிட்டு மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களிடம் தீர்வுதேடி அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது அல்லாஹ்வின்மீது கொண்ட ஈமானை முறிக்கக்கூடியதாகும். அல்லாஹ்வின் சட்டத்தில் தீர்வுதேடி, அதன் தீர்ப்பை உளப்பூர்வமாக ஏற்று, அதற்கு முழுமையாக அடிபணிவதன் மூலமே இறைநம்பிக்கை பூரணமடைகிறது.

• من أبرز صفات المنافقين عدم الرضا بشرع الله، وتقديم حكم الطواغيت على حكم الله تعالى.
2. அல்லாஹ்வின் சட்டங்களைக்கொண்டு திருப்தியடையாமல் அதனை விட ஷைத்தான்களின் தீர்ப்புக்கு முன்னுரிமை வழங்குவது நயவஞ்சகர்களின் பிரதான பண்புகளில் ஒன்றாகும்.

• النَّدْب إلى الإعراض عن أهل الجهل والضلالات، مع المبالغة في نصحهم وتخويفهم من الله تعالى.
3. மூடர்களுக்கும் வழிகேடர்களுக்கும் அதிகமதிகம் உபதேசம் செய்து, அல்லாஹ்வைப் பற்றி அச்சமூட்டுவதுடன் அவர்களைப் புறக்கணித்து நடக்குமாறும் வேண்டப்பட்டுள்ளது.

 
Ý nghĩa nội dung Chương: Al-Nisa'
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an - Mục lục các bản dịch

Do Trung tâm Diễn giải Nghiên cứu Kinh Qur'an phát hành.

Đóng lại