Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Chương: Al-Nur   Câu:
قُلْ اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ ۚ— فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَیْهِ مَا حُمِّلَ وَعَلَیْكُمْ مَّا حُمِّلْتُمْ ؕ— وَاِنْ تُطِیْعُوْهُ تَهْتَدُوْا ؕ— وَمَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
24.54. -தூதரே!- இந்த நயவஞ்சகர்களிடம் நீர் கூறுவீராக: “வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். அவ்விருவருக்கும் கட்டுப்படுமாறு உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நீங்கள் புறக்கணித்துவிட்டால் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக எடுத்துரைப்பதே தூதர் மீதுள்ள பொறுப்பாகும். அவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் கொண்டுவந்ததன் மீது செயல்படுவது உங்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர் உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, அவர் தடுத்துள்ளதிலிருந்து விலகி நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிந்தால் நீங்கள் சத்தியத்தை அடைந்துவிடுவீர்கள். தெளிவாக எடுத்துரைப்பதே தூதர் மீதுள்ள கடமையாகும். உங்களைக் கட்டாயப்படுத்தி நேர்வழிக்கு சுமந்து கொண்டுவருவது அவருடைய கடமையல்ல.
Các Tafsir tiếng Ả-rập:
وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسْتَخْلِفَنَّهُمْ فِی الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۪— وَلَیُمَكِّنَنَّ لَهُمْ دِیْنَهُمُ الَّذِی ارْتَضٰی لَهُمْ وَلَیُبَدِّلَنَّهُمْ مِّنْ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا ؕ— یَعْبُدُوْنَنِیْ لَا یُشْرِكُوْنَ بِیْ شَیْـًٔا ؕ— وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
24.55. உங்களில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு அவன் பின்வருமாறு வாக்களிக்கிறான்: “அவன் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு உதவிபுரிந்து அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த நம்பிக்கையாளர்களை பிரதிநிதிகளாக ஆக்கியது போன்று அவர்களையும் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்குவான். அவன் ஏற்றுக்கொண்ட அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தை மேலோங்கியதாகவும் நிலைபெற்றதாகவும் ஆக்குவான். அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்திற்குப் பிறகு அவர்களை அமைதியானவர்களாக மாற்றுவான்.” அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு யாரையும் இணையாக்கமாட்டார்கள். இதன் பின்னரும் இந்த அருட்கொடைகளுக்கு யார் நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வார்களோ அவர்கள்தாம் அல்லாஹ்வுக்கு அடிபணிவதை விட்டும் வெளியேறியவர்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
24.56. தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். உங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்குங்கள். தூதர் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ள காரியங்களை செயல்படுத்தி அவர் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவருக்குக் கட்டுப்படுங்கள். அதனால் அல்லாஹ்வின் கருணையைப் பெறுவீர்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
لَا تَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْا مُعْجِزِیْنَ فِی الْاَرْضِ ۚ— وَمَاْوٰىهُمُ النَّارُ ؕ— وَلَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
24.57. -தூதரே!- அல்லாஹ்வை நிராகரித்தவர்களை நான் தண்டிக்க விரும்பினால் அவர்கள் என்னிடமிருந்து தப்பி விடுவார்கள் என்று நீர் ஒருபோதும் எண்ணிவிடாதீர். மறுமை நாளில் அவர்களின் தங்குமிடம் நரகமாகும். நரகில் அவர்கள் தங்கும் இடம் மிகவும் மோசமான தங்குமிடமாகும்.
Các Tafsir tiếng Ả-rập:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لِیَسْتَاْذِنْكُمُ الَّذِیْنَ مَلَكَتْ اَیْمَانُكُمْ وَالَّذِیْنَ لَمْ یَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍ ؕ— مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِیْنَ تَضَعُوْنَ ثِیَابَكُمْ مِّنَ الظَّهِیْرَةِ وَمِنْ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ۫ؕ— ثَلٰثُ عَوْرٰتٍ لَّكُمْ ؕ— لَیْسَ عَلَیْكُمْ وَلَا عَلَیْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ ؕ— طَوّٰفُوْنَ عَلَیْكُمْ بَعْضُكُمْ عَلٰی بَعْضٍ ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
24.58. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களின் ஆண், பெண் அடிமைகளும், பருவமடையாத சுதந்திரமான சிறுவர்களும் உங்களிடம் வருவதற்கு மூன்று நேரங்களில் அனுமதி பெற வேண்டும். அவை: அதிகாலைத் தொழுகைக்கு முன்னர் நீங்கள் உங்கள் தூங்கும் ஆடைகளை கழற்றி எனைய நேரத்தில் அணியும் ஆடைகளை மாற்றும்போது, பகல் நேரத்தில் முற்பகல் தூக்கம் போடுவதற்காக நீங்கள் உங்கள் ஆடைகளைக் களையும் போது, இஷா தொழுகைக்குப் பிறகுள்ள நேரம். ஏனெனில் நிச்சயமாக அது உறங்கும் நேரம், எனைய நேர ஆடைகளை களைந்து உறங்கும் ஆடை அணிதல் போன்றவற்றுக்கான நேரமாகும். இந்த மூன்று நேரங்களும் உங்களுக்கு மறைவான நேரங்களாகும். உங்களின் அனுமதியின்றி யாரும் உங்களிடம் வரக்கூடாது. இந்த மூன்று நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் அனுமதியின்றி அவர்கள் உங்களிடம் வருவதில் உங்களுக்கும் அவர்களுக்கும் எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் எப்போதும் ஒருவரையொருவர் சுற்றிவருபவர்கள். எனவே எல்லா நேரங்களிலுமே அனுமதியின்றி நுழைய முடியாது என அவர்களைத் தடுப்பது சிரமமான ஒன்றாகும். அனுமதி கோருதல் பற்றிய சட்டங்களை அல்லாஹ் தெளிவுபடுத்தியவாறே மார்க்க சட்டங்களை அறிவிக்கக்கூடிய வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் தனது அடியார்களின் நலன்களை அறிந்தவனாவான். அவர்களுக்கு அவன் விதிக்கும் சட்டங்களில் அவன் ஞானமுள்ளவன்.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• اتباع الرسول صلى الله عليه وسلم علامة الاهتداء.
1. தூதரைப் பின்பற்றுவது நேர்வழி பெற்றிருப்பதன் அடையாளமாகும்.

• على الداعية بذل الجهد في الدعوة، والنتائج بيد الله.
2. அழைப்பதில் கடுமையாக முயற்சி செய்வதே அழைப்பாளர் மீதுள்ள கடமையாகும். முடிவுகள் அல்லாஹ்விடமே உள்ளன.

• الإيمان والعمل الصالح سبب التمكين في الأرض والأمن.
3. ஈமானும் நற்செயலும் பூமியில் அதிகாரமும் அமைதியும் கிடைப்பதற்குக் காரணியாக இருக்கின்றது.

• تأديب العبيد والأطفال على الاستئذان في أوقات ظهور عورات الناس.
4. மக்களின் மறைவிடங்கள் வெளிப்படும் நேரங்களில் அனுமதி கேட்பதற்கு அடிமைகளையும் பிள்ளைகளையும் பழக்குதல்.

 
Ý nghĩa nội dung Chương: Al-Nur
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an - Mục lục các bản dịch

Do Trung tâm Diễn giải Nghiên cứu Kinh Qur'an phát hành.

Đóng lại