Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Chương: Al-Ambiya'   Câu:
لَا یَسْمَعُوْنَ حَسِیْسَهَا ۚ— وَهُمْ فِیْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ ۟ۚ
21.102. அவர்கள் நரகத்தின் சத்தத்தை செவியுற மாட்டார்கள். அவர்கள் தாங்கள் விரும்பும் இன்பங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். அவர்களின் இன்பம் ஒரு போதும் முடிவடையாது.
Các Tafsir tiếng Ả-rập:
لَا یَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ؕ— هٰذَا یَوْمُكُمُ الَّذِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
21.103. நரகவாசிகளை நெருப்பு மூடிக்கொள்ளும் போதுள்ள பெரும் பயங்கரம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. “இதுதான் நீங்கள் உலகில் வாக்களிக்கப்பட்ட நாள். நீங்கள் அனுபவிக்கும் இன்பங்களைக் கொண்டு நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வானவர்கள் அவர்களை வாழ்த்துக்கூறி வரவேற்பார்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
یَوْمَ نَطْوِی السَّمَآءَ كَطَیِّ السِّجِلِّ لِلْكُتُبِ ؕ— كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِیْدُهٗ ؕ— وَعْدًا عَلَیْنَا ؕ— اِنَّا كُنَّا فٰعِلِیْنَ ۟
21.104. நாம் பதிவேடுகளை சுருட்டுவதுபோன்று வானத்தை அதிலுள்ளவற்றுடன் சுருட்டும் நாளில் படைப்புகள் அனைத்தையும் அவை ஆரம்பத்தில் படைக்கப்பட்டவாறே ஒன்றுதிரட்டுவோம். இது நாம் அளித்த வாக்குறுதியாகும். நாம் ஒருபோதும் அதற்கு மாறுசெய்ய மாட்டோம். நிச்சயமாக நாம் அளித்த வாக்குறுதிய நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்கின்றோம்.
Các Tafsir tiếng Ả-rập:
وَلَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ ۟
21.105. நாம் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே எழுதிய பிறகு தூதர்களுக்கு இறக்கிய வேதங்களிலும் பின்வருமாறு எழுதினோம்: “நிச்சயமாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய அவனுடைய நல்லடியார்கள்தாம் பூமிக்கு சொந்தக்காரர்களாவர். அவர்கள்தாம் முஹம்மதின் சமூகத்தார்கள்.”
Các Tafsir tiếng Ả-rập:
اِنَّ فِیْ هٰذَا لَبَلٰغًا لِّقَوْمٍ عٰبِدِیْنَ ۟ؕ
21.106. நிச்சயமாக நாம் இறக்கிய அறிவுரையில் தங்கள் இறைவனை அவன் விதித்ததன் படி வணங்கக்கூடிய மக்களுக்கு நலவும், போதுமானளவு வழிகாட்டலும் இருக்கின்றது. அவர்கள்தாம் அதனைக்கொண்டு பயனடையக்கூடியவர்களாவர்.
Các Tafsir tiếng Ả-rập:
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّلْعٰلَمِیْنَ ۟
21.107. -முஹம்மதே!- படைப்புகள் அனைத்திற்கும் அருட்கொடையாகவே நாம் உம்மை அனுப்பியுள்ளோம். அةதனால்தான் நீர் அவர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்கும் அவர்களை இறைவேதனையிலிருந்து காப்பதற்கும் பேராசை கொண்டவராக காணப்படுகின்றீர்.
Các Tafsir tiếng Ả-rập:
قُلْ اِنَّمَا یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟
21.108. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் எனக்குப் பின்வருமாறுதான் வஹி அறிவித்துள்ளான்: “நிச்சயமாக வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனே அல்லாஹ். எனவே அவனை நம்பிக்கைகொள்வதற்கும் அவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுவதற்கும் கட்டுப்படுங்கள்.”
Các Tafsir tiếng Ả-rập:
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْتُكُمْ عَلٰی سَوَآءٍ ؕ— وَاِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ اَمْ بَعِیْدٌ مَّا تُوْعَدُوْنَ ۟
21.109. -தூதரே!- நீர் கொண்டுவந்ததை அவர்கள் புறக்கணித்தால் அவர்களிடம் நீர் கூறிவிடுவீராக: “நிச்சயமாக எனக்கும் உங்களுக்கும் இடைப்பட்ட சமனான விஷயத்தை நான் தெளிவாக எனக்கும் உங்களுக்கும் அறிவித்துவிட்டேன். அல்லாஹ் எச்சரித்த வேதனை உங்கள் மீது எப்போது இறங்கும்? என்பதை நான் அறியமாட்டேன்.
Các Tafsir tiếng Ả-rập:
اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ مِنَ الْقَوْلِ وَیَعْلَمُ مَا تَكْتُمُوْنَ ۟
21.110. நிச்சயமாக நீங்கள் வெளிப்படையாகக் கூறுவதையும் இரகசியமாகக் கூறுவதையும் அல்லாஹ் அறிவான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Các Tafsir tiếng Ả-rập:
وَاِنْ اَدْرِیْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّكُمْ وَمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
21.111. உங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவது உங்களுக்குச் சோதனையாகவும் விட்டுப்பிடிப்பதாகவும் நீங்கள் உங்களின் நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் பிடிவாதமாக இருப்பதற்காக அவனுடைய அறிவின்படி குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு அனுபவிப்பதற்காகவும் இருக்கலாம் என்பதை நான் அறிய மாட்டேன்.
Các Tafsir tiếng Ả-rập:
قٰلَ رَبِّ احْكُمْ بِالْحَقِّ ؕ— وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟۠
21.112. அல்லாஹ்வின் தூதுர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! எங்களுக்கும் நிராகரிப்பில் நிலைத்திருக்கும் எங்கள் சமூகத்திற்குமிடையே உண்மையான முறையில் தீர்ப்பு வழங்குவாயாக. நீங்கள் கூறும் பொய்யான, நிராகரிப்பான வார்த்தைகளுக்காக அருளாளனான எங்கள் இறைவனிடமே நாங்கள் உதவிதேடுகிறோம்.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• الصلاح سبب للتمكين في الأرض.
1. நேர்மை பூமியில் ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்கு காரணமாக இருக்கின்றது.

• بعثة النبي صلى الله عليه وسلم وشرعه وسنته رحمة للعالمين.
2. தூதர் அனுப்பப்பட்டமையும், அவரது மார்க்கமும், வழிமுறையும் அகிலத்தாருக்கு அருட்கொடையே.

• الرسول صلى الله عليه وسلم لا يعلم الغيب.
3. தூதர் மறைவானவற்றை அறிய மாட்டார்.

• علم الله بما يصدر من عباده من قول.
4. அடியார்களிடமிருந்து வெளிப்படும் அனைத்து வார்த்தைகளையும் அல்லாஹ் அறிவான்.

 
Ý nghĩa nội dung Chương: Al-Ambiya'
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an - Mục lục các bản dịch

Do Trung tâm Diễn giải Nghiên cứu Kinh Qur'an phát hành.

Đóng lại