Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Câu: (215) Chương: Al-Baqarah
یَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ ؕ— قُلْ مَاۤ اَنْفَقْتُمْ مِّنْ خَیْرٍ فَلِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ؕ— وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟
2.215. தூதரே! உம்முடைய தோழர்கள், அவர்களின் செல்வங்களில் எதைச் செலவுசெய்ய வேண்டும்? யாருக்கு வழங்க வேண்டும்? என்று உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களுக்குக் கூறுவீராக: நீங்கள் தூய்மையான எந்த செல்வத்தைச் செலவு செய்தாலும் உங்களின் தாய்தந்தையருக்காக, தேவைக்கேற்ப நெருங்கிய உங்களின் உறவினருக்காக, தேவையுடைய அநாதைகளுக்காக, ஏழைகளுக்காக, நாட்டையும் குடும்பத்தையும் விட்டு துண்டிக்கப்பட்ட வழிப்போக்கர்களுக்காக செலவு செய்யுங்கள்.முஃமின்களே! குறைவாகவோ அதிகமாகவோ நீங்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• ترك شكر الله تعالى على نعمه وترك استعمالها في طاعته يعرضها للزوال ويحيلها بلاءً على صاحبها.
1. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமலும் அவனுக்குக் கட்டுப்பட்ட வழிகளில் அவற்றைப் பயன்படுத்தாமலும் இருப்பது அவற்றின் அழிவுக்கும் அவை துன்பமாக மாறுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

• الأصل أن الله خلق عباده على فطرة التوحيد والإيمان به، وإبليس وأعوانه هم الذين صرفوهم عن هذه الفطرة إلى الشرك به.
2. இயல்பில் தன் அடியார்கள் தன்னையே வணங்கி, தன்மீதே நம்பிக்கைகொள்ளுமாறுதான் அல்லாஹ் அவர்களைப் படைத்துள்ளான். ஷைத்தானும் அவனுடைய சகாக்களுமே அடியார்களின் இந்த இயல்பிருந்து திசைதிருப்பி இணைவைப்பின் பக்கம் அவர்களைக் கொண்டு செல்கிறார்கள்.

• أعظم الخذلان الذي يؤدي للفشل أن تختلف الأمة في كتابها وشريعتها، فيكفّر بعضُها بعضًا، ويلعن بعضُها بعضًا.
3. சமூகத்தை பலவீனத்தின் பக்கம் இட்டுச் செல்லும் மிக மோசமான வீழ்ச்சி, ஒரு சமூகம் தங்களின் வேதத்திலும் மார்க்கத்திலும் கருத்துவேறுபட்டு ஒருவர் மற்றவரை காஃபிர் என்று கூறுவதும் ஒருவர் மற்றவரை சபிப்பதும்தான்.

• الهداية للحق الذي يختلف فيه الناس، ومعرفة وجه الصواب بيد الله، ويُطلب منه تعالى بالإيمان به والانقياد له.
4. மக்கள் முரண்பட்டுள்ளவற்றில் சரியான வழியை அறிந்து அடைவது அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. அவன்மீது நம்பிக்கைகொண்டு அவனுக்குக் கட்டுப்படுவதன் மூலமே அவனிடம் அதனைக் கேட்கவேண்டும்.

• الابتلاء سُنَّة الله تعالى في أوليائه، فيبتليهم بقدر ما في قلوبهم من الإيمان به والتوكل عليه.
5. சோதனை, அல்லாஹ் தன் நேசர்களின் விஷயத்தில் ஏற்படுத்திக் கொண்ட நியதியாகும். அவர்களின் உள்ளத்திலிருக்கும் ஈமான் மற்றும் அவனைச் சார்ந்திருக்கும் தன்மைக்கேற்பவே அவன் அவர்களைச் சோதிக்கிறான்.

• من أعظم ما يعين على الصبر عند نزول البلاء، الاقتداء بالصالحين وأخذ الأسوة منهم.
6. துன்பம் வரும்போது பொறுமையாக இருக்க உதவும் மிகச் சிறந்த வழி நல்லவர்களைப் பின்பற்றுவதும் அவர்களிடமிருந்து முன்மாதிரியைப் பெற்றுக்கொள்வதும்தான்.

 
Ý nghĩa nội dung Câu: (215) Chương: Al-Baqarah
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an - Mục lục các bản dịch

Do Trung tâm Diễn giải Nghiên cứu Kinh Qur'an phát hành.

Đóng lại