Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - تەرجىمىلەر مۇندەرىجىسى

XML CSV Excel API
Please review the Terms and Policies

مەنالار تەرجىمىسى سۈرە: قەمەر   ئايەت:

அல்கமர்

اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ۟
மறுமை நெருங்கிவிட்டது. சந்திரன் பிளந்து விட்டது.
ئەرەپچە تەپسىرلەر:
وَاِنْ یَّرَوْا اٰیَةً یُّعْرِضُوْا وَیَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ ۟
அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) புறக்கணிக்கின்றனர்; இன்னும் (இது ஒரு) தொடர்ச்சியான சூனியமாகும் என்றும் கூறுகின்றனர்.
ئەرەپچە تەپسىرلەر:
وَكَذَّبُوْا وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ ۟
இன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர்; தங்கள் மன இச்சைகளை அவர்கள் பின்பற்றினார்கள். எல்லாக் காரியங்களும் (அவற்றுக்குரிய இடத்தில்) நிலையாகத் தங்கக் கூடியதுதான். (நன்மை, நல்லவர்களை சொர்க்கத்தில் தங்க வைக்கும். தீமை, பாவிகளை நரகத்தில் தங்க வைக்கும்.)
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ جَآءَهُمْ مِّنَ الْاَنْۢبَآءِ مَا فِیْهِ مُزْدَجَرٌ ۟ۙ
திட்டவட்டமாக செய்திகளில் எதில் எச்சரிக்கை இருக்குமோ அது அவர்களிடம் வந்துவிட்டது.
ئەرەپچە تەپسىرلەر:
حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ ۟ۙ
மிக ஆழமான ஞானம் (-இந்த குர்ஆன் அவர்களிடம் வந்திருக்கின்றது). ஆனால், எச்சரிப்பாளர்கள் (பலர் எச்சரித்தும் அவர்களுக்கு அவர்கள்) பலனளிக்க முடியவில்லை.
ئەرەپچە تەپسىرلەر:
فَتَوَلَّ عَنْهُمْ ۘ— یَوْمَ یَدْعُ الدَّاعِ اِلٰی شَیْءٍ نُّكُرٍ ۟ۙ
ஆகவே, அவர்களை விட்டு நீர் விலகி விடுவீராக! அழைப்பாளர் மிக கடினமான ஒன்றை நோக்கி (-மறுமையின் மைதானத்தை நோக்கி) அழைக்கின்ற நாளில்
ئەرەپچە تەپسىرلەر:
خُشَّعًا اَبْصَارُهُمْ یَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌ ۟ۙ
அவர்களது பார்வைகள் இழிவடைந்த நிலையில், (கூட்டமாக) பரவி வரக்கூடிய வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைக்குழிகளை விட்டு (விரைந்து) வெளியேறுவார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
مُّهْطِعِیْنَ اِلَی الدَّاعِ ؕ— یَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا یَوْمٌ عَسِرٌ ۟
அழைப்பாளரை நோக்கி பணிவுடன் பயத்துடன் விரைந்தவர்களாக வருவார்கள். நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “இது ஒரு சிரமமான நாள்.”
ئەرەپچە تەپسىرلەر:
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ ۟
இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்கள் பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் நமது அடியாரை பொய்ப்பித்தனர். (அது மட்டுமா!) அவர் ஒரு பைத்தியக்காரர் என்று(ம்) கூறினர். இன்னும் அவர் (அவர்களால் கடுமையாக) எச்சரிக்கப்பட்டார்.
ئەرەپچە تەپسىرلەر:
فَدَعَا رَبَّهٗۤ اَنِّیْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ ۟
ஆகவே, அவர் தனது இறைவனிடம், “நிச்சயமாக நான் தோற்கடிக்கப்பட்டேன். ஆகவே, நீ பழி தீர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.
ئەرەپچە تەپسىرلەر:
فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ۟ؗۖ
ஆகவே, நாம் அடை மழையைக் கொண்டு மேகத்தின் வாசல்களை திறந்து விட்டோம்.
ئەرەپچە تەپسىرلەر:
وَّفَجَّرْنَا الْاَرْضَ عُیُوْنًا فَالْتَقَی الْمَآءُ عَلٰۤی اَمْرٍ قَدْ قُدِرَ ۟ۚ
இன்னும் பூமியை ஊற்றுக் கண்களால் பீறிட்டு ஓடச்செய்தோம். (வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும்) தண்ணீர் திட்டமாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்தின் மீது சந்தித்தன.
ئەرەپچە تەپسىرلەر:
وَحَمَلْنٰهُ عَلٰی ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍ ۟ۙ
அவரை பலகைகள் இன்னும் ஆணிகள் உடைய (-பலகைகள் இன்னும் ஆணிகளினால் செய்யப்பட்ட) கப்பல் மீது பயணிக்க வைத்தோம்.
ئەرەپچە تەپسىرلەر:
تَجْرِیْ بِاَعْیُنِنَا جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ ۟
அது நமது கண்களுக்கு முன்பாக (-நமது பார்வையில் நமது கட்டளைப் படி) செல்கிறது, நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு கூலி கொடுப்பதற்காக.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ تَّرَكْنٰهَاۤ اٰیَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
திட்டவட்டமாக அதை நாம் ஓர் அத்தாட்சியாக விட்டுவைத்தோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
ئەرەپچە تەپسىرلەر:
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?!
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
ئەرەپچە تەپسىرلەر:
كَذَّبَتْ عَادٌ فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
ஆது சமுதாயம் பொய்ப்பித்தது. எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْ یَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ ۟ۙ
நிச்சயமாக நாம் அவர்கள் மீது குளிர்ந்த சூறாவளிக் காற்றை (நரகம் வரை நீடித்து இருக்கும்) நிலையான ஒரு தீமையுடைய நாளில் அனுப்பினோம்.
ئەرەپچە تەپسىرلەر:
تَنْزِعُ النَّاسَ ۙ— كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ ۟
அது மக்களை கழட்டி எறிந்தது. அவர்கள் வேரோடு சாய்ந்த பேரீட்ச மரத்தின் பின் பகுதிகளைப் போல் ஆகிவிட்டார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
ئەرەپچە تەپسىرلەر:
كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ ۟
ஸமூது சமுதாயம் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
ئەرەپچە تەپسىرلەر:
فَقَالُوْۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤ ۙ— اِنَّاۤ اِذًا لَّفِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟
எங்களில் இருந்து ஒருவராக இருக்கின்ற ஒரு மனிதரையா நாங்கள் பின்பற்றுவோம்! அப்படி என்றால் நிச்சயமாக நாங்கள் வழிகேட்டிலும் சிரமத்திலும் ஆகிவிடுவோம் என்று கூறினர்.
ئەرەپچە تەپسىرلەر:
ءَاُلْقِیَ الذِّكْرُ عَلَیْهِ مِنْ بَیْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ ۟
எங்களுக்கு மத்தியில் அவருக்கு மட்டும் இறைவேதம் இறக்கப்பட்டதா? இல்லை, அவர் பெருமையுடைய பெரும் பொய்யர் ஆவார்.
ئەرەپچە تەپسىرلەر:
سَیَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ ۟
நாளை அவர்கள் விரைவில் அறிவார்கள், “பெருமையுடைய பெரும் பொய்யர் யார்” என்று?
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ ۟ؗ
நிச்சயமாக நாம் பெண் ஒட்டகத்தை அவர்களுக்கு சோதனையாக அனுப்புவோம். அவர்களிடம் (அவர்களுக்கு வர இருக்கின்ற வேதனையை) நீர் எதிர்பார்த்திருப்பீராக! இன்னும் பொறுமை காப்பீராக!
ئەرەپچە تەپسىرلەر:
وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ بَیْنَهُمْ ۚ— كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ ۟
நிச்சயமாக தண்ணீர் (ஒட்டகம் நீர் குடிக்காத நாளில்) அவர்களுக்கு மத்தியில் (சமமான) பங்காகும் என்று அவர்களுக்கு அறிவிப்பீராக! தண்ணீர் குடிக்கப்படுகின்ற எல்லா நேரங்களிலும் (அந்த அந்த நேரத்திற்குரியவர்கள் மட்டும்) ஆஜராக வேண்டும்.
ئەرەپچە تەپسىرلەر:
فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰی فَعَقَرَ ۟
(அந்த ஒட்டகத்தைக் கொல்வதற்காக) அவர்கள் தங்கள் தோழரை அழைத்தனர். அவன் (தனது கரத்தால் அதைப்) பிடித்து, அறுத்தான்.
ئەرەپچە تەپسىرلەر:
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ صَیْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِیْمِ الْمُحْتَظِرِ ۟
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு சப்தத்தை அனுப்பினோம். அவர்கள் தொழுவத்தின் தீணிகளைப் போல் ஆகிவிட்டனர்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
ئەرەپچە تەپسىرلەر:
كَذَّبَتْ قَوْمُ لُوْطٍۭ بِالنُّذُرِ ۟
லூத்துடைய மக்களும் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ— نَجَّیْنٰهُمْ بِسَحَرٍ ۟ۙ
நிச்சயமாக அவர்கள் மீது நாம் கல் மழையை அனுப்பினோம், லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர. அவர்களை நாம் அதிகாலையில் பாதுகாத்தோம்.
ئەرەپچە تەپسىرلەر:
نِّعْمَةً مِّنْ عِنْدِنَا ؕ— كَذٰلِكَ نَجْزِیْ مَنْ شَكَرَ ۟
நம்மிடமிருந்து (அவர்கள் மீது) அருட்கொடையாக (நாம் அவர்களை பாதுகாத்தோம்). இவ்வாறுதான் நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ ۟
திட்டவட்டமாக நமது தண்டனையை அவர் அவர்களுக்கு எச்சரித்தார். அவர்கள் அந்த எச்சரிக்கையை சந்தேகித்தனர்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَیْفِهٖ فَطَمَسْنَاۤ اَعْیُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
திட்டவட்டமாக அவர்கள் அவரிடம் அவரது விருந்தினர்களை வேண்டி (விருந்தினர்களிடம் தங்கள் ஆசையை தனித்துக் கொள்ள) அடம்பிடித்தனர். நாம் அவர்களின் கண்களை (அழித்து முகத்தோடு முகமாக) சமமாக்கி விட்டோம். ஆகவே, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ ۟ۚ
அதிகாலை சூரியன் விடிவதற்கு முன் (நரகம் வரை தொடர்ந்து) நிலைத்திருக்கக்கூடிய வேதனை காலையில் அவர்களை திட்டவட்டமாக வந்தடைந்தது.
ئەرەپچە تەپسىرلەر:
فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
ஆக, என் வேதனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்!
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ جَآءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُ ۟ۚ
திட்டவட்டமாக ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு (நமது) எச்சரிக்கை வந்தன.
ئەرەپچە تەپسىرلەر:
كَذَّبُوْا بِاٰیٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِیْزٍ مُّقْتَدِرٍ ۟
அவர்கள் நமது அத்தாட்சிகளை எல்லாம் பொய்ப்பித்தனர். ஆகவே, மிக்க மிகைத்தவன், மகா வல்லமை உடையவனின் தண்டனையால் அவர்களை தண்டித்தோம்.
ئەرەپچە تەپسىرلەر:
اَكُفَّارُكُمْ خَیْرٌ مِّنْ اُولٰٓىِٕكُمْ اَمْ لَكُمْ بَرَآءَةٌ فِی الزُّبُرِ ۟ۚ
உங்களுடைய (இக்கால) நிராகரிப்பாளர்கள் (முந்திய நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை விட சிறந்தவர்களா? (நீங்கள் திருந்தவில்லை என்றால், அவர்களுக்கு வந்த வேதனை உங்களுக்கும் வரும்.) அல்லது (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாப்பிற்குரிய) விடுதலை பத்திரம் (முந்திய) வேதங்களில் உங்களுக்கு இருக்கிறதா?
ئەرەپچە تەپسىرلەر:
اَمْ یَقُوْلُوْنَ نَحْنُ جَمِیْعٌ مُّنْتَصِرٌ ۟
அல்லது, நாங்கள் (எங்களை பிரிக்க நினைப்பவர்களிடம்) பழிதீர்த்துக் கொள்கின்ற கூட்டம் ஆவோம் என்று அவர்கள் கூறுகின்றார்களா?
ئەرەپچە تەپسىرلەر:
سَیُهْزَمُ الْجَمْعُ وَیُوَلُّوْنَ الدُّبُرَ ۟
விரைவில் இந்த கூட்டங்கள் தோற்கடிக்கப்படுவார்கள். புறமுதுகு காட்டுவார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰی وَاَمَرُّ ۟
மாறாக, மறுமைதான் இவர்களின் (முழுமையான தண்டனைக்கு) வாக்களிக்கப்பட்ட நேரமாகும். மறுமை மிக பயங்கரமானதும் மிக கசப்பானதுமாகும்.
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟ۘ
நிச்சயமாக குற்றவாளிகள் வழிகேட்டிலும் (இணைவைப்பின்) மிகப் பெரிய சிரமத்திலும் இருக்கின்றனர்.
ئەرەپچە تەپسىرلەر:
یَوْمَ یُسْحَبُوْنَ فِی النَّارِ عَلٰی وُجُوْهِهِمْ ؕ— ذُوْقُوْا مَسَّ سَقَرَ ۟
நரகத்தில் அவர்களின் முகங்கள் மீது அவர்கள் இழுக்கப்படும் நாளில், “ஸகர் நரகத்தின் கடுமையை சுவையுங்கள்!” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّا كُلَّ شَیْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ ۟
நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியின் தாய் புத்தகத்தில் நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம்.
ئەرەپچە تەپسىرلەر:
وَمَاۤ اَمْرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ ۟
நமது கட்டளை (ஆகு என்ற) ஒன்றைத் தவிர வேறு இல்லை. கண் சிமிட்டுவதைப் போல் (உடனே அது ஆகிவிடும்).
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ اَهْلَكْنَاۤ اَشْیَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
(உங்களைப் போன்ற) உங்கள் சக கொள்கையுடையவர்களை (இதற்கு முன்னர்) நாம் திட்டவட்டமாக அழித்தோம். நல்லுபதேசம் பெறுபவர் யாரும் உண்டா?
ئەرەپچە تەپسىرلەر:
وَكُلُّ شَیْءٍ فَعَلُوْهُ فِی الزُّبُرِ ۟
அவர்கள் செய்த எல்லா விஷயங்களும் (வானவர்கள் எழுதிய செயல்) ஏடுகளில் (பதியப்பட்டு) உள்ளன.
ئەرەپچە تەپسىرلەر:
وَكُلُّ صَغِیْرٍ وَّكَبِیْرٍ مُّسْتَطَرٌ ۟
எல்லா சிறியவையும் பெரியவையும் எழுதப்பட்டு உள்ளது. (அதற்கேற்ப அவர்களுக்கு கூலி கொடுக்கப்படும்.)
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَهَرٍ ۟ۙ
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களில் இன்னும் நதிகளில் இருப்பார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
فِیْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِیْكٍ مُّقْتَدِرٍ ۟۠
(வீண் பேச்சுகள் அற்ற) உண்மையான பேச்சுகளுடைய சபையில், மகா வல்லமையுடைய பேரரசனுக்கு அருகில் இருப்பார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
 
مەنالار تەرجىمىسى سۈرە: قەمەر
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - تەرجىمىلەر مۇندەرىجىسى

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

تاقاش