Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - تەرجىمىلەر مۇندەرىجىسى

XML CSV Excel API
Please review the Terms and Policies

مەنالار تەرجىمىسى سۈرە: ئال ئىمران   ئايەت:
اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ ۚ— وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ ؕ— وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரும்) அறவே இல்லை. நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் மிகைத்தவன், ஞானவான்.
ئەرەپچە تەپسىرلەر:
فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِالْمُفْسِدِیْنَ ۟۠
(அவர்கள் புறக்கணித்து) விலகினால், நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளை மிக அறிந்தவன்.
ئەرەپچە تەپسىرلەر:
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰی كَلِمَةٍ سَوَآءٍ بَیْنَنَا وَبَیْنَكُمْ اَلَّا نَعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَیْـًٔا وَّلَا یَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ ؕ— فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ ۟
(நபியே!) கூறுவீராக: "வேதக்காரர்களே! எங்கள் மத்தியிலும் உங்கள் மத்தியிலும் சமமான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்! அதாவது: அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) வணங்கமாட்டோம்; அவனுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்; அல்லாஹ்வைத் தவிர நம்மில் சிலர் சிலரை கடவுள்களாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்." (இதை ஏற்காமல் அவர்கள்) விலகினால், "நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு சாட்சியாக இருங்கள்!" என்று கூறுங்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِیْۤ اِبْرٰهِیْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰىةُ وَالْاِنْجِیْلُ اِلَّا مِنْ بَعْدِهٖ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
வேதக்காரர்களே! இப்ராஹீம் விஷயத்தில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள். தவ்றாத்தும், இன்ஜீலும் அவருக்கு பின்னரே தவிர இறக்கப்படவில்லை. சிந்தித்து புரியமாட்டீர்களா?
ئەرەپچە تەپسىرلەر:
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ حَاجَجْتُمْ فِیْمَا لَكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَآجُّوْنَ فِیْمَا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
(முன்பு) நீங்களோ உங்களுக்கு எதில் (கொஞ்சம்) அறிவிருந்ததோ அதில் தர்க்கம் செய்தீர்கள். ஆகவே, உங்களுக்கு எதில் (சிறிதும்) அறிவில்லையோ அதில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
مَا كَانَ اِبْرٰهِیْمُ یَهُوْدِیًّا وَّلَا نَصْرَانِیًّا وَّلٰكِنْ كَانَ حَنِیْفًا مُّسْلِمًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
இப்ராஹீம் யூதராக, கிறித்தவராக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றுபவராக, முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்தவராக) இருந்தார். இணைவைப்பவர்களில் அவர் இருக்கவில்லை.
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّ اَوْلَی النَّاسِ بِاِبْرٰهِیْمَ لَلَّذِیْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِیُّ وَالَّذِیْنَ اٰمَنُوْا ؕ— وَاللّٰهُ وَلِیُّ الْمُؤْمِنِیْنَ ۟
நிச்சயமாக இப்ராஹீமுக்கு மக்களில் மிக நெருங்கியவர், அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இஸ்லாமை ஏற்ற) நம்பிக்கையாளர்களும்தான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் ஆவான்.
ئەرەپچە تەپسىرلەر:
وَدَّتْ طَّآىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ یُضِلُّوْنَكُمْ ؕ— وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟
வேதக்காரர்களில் ஒரு கூட்டம் உங்களை வழிகெடுக்க விரும்புகிறது. தங்களைத் தவிர (உங்களை) வழிகெடுக்க மாட்டார்கள். (இதை அவர்கள்) உணரமாட்டார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ۟
வேதக்காரர்களே! அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்? (நபியின் உண்மைக்கு) நீங்களே சாட்சியளிக்கிறீர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
 
مەنالار تەرجىمىسى سۈرە: ئال ئىمران
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - تەرجىمىلەر مۇندەرىجىسى

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

تاقاش