Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûratu's-Sâd   Ayet:
قَالَ فَالْحَقُّ ؗ— وَالْحَقَّ اَقُوْلُ ۟ۚ
38.84. அல்லாஹ் கூறினான்: “சத்தியம் என்னிடம் உள்ளது. சத்தியத்தையே நான் கூறுவேன். நான் அதைத்தவிர வேறேதுவும் கூற மாட்டேன்.
Arapça tefsirler:
لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ اَجْمَعِیْنَ ۟
38.85. இப்லீஸே! மறுமை நாளில் உன்னாலும் நிராகரிப்பில் உன்னைப் பின்பற்றிய ஆதமுடைய மக்கள் அனைவராலும் நான் நரகத்தை நிரப்புவேன்.”
Arapça tefsirler:
قُلْ مَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ وَّمَاۤ اَنَا مِنَ الْمُتَكَلِّفِیْنَ ۟
38.86. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் உங்களிடம் எடுத்துரைக்கும் அறிவுரைக்காக எந்தக் கூலியையும் உங்களிடம் கேட்கவில்லை. எனக்கு எடுத்துரைக்குமாறு ஏவப்பட்டவற்றைத் தவிர வேறெதையும் கொண்டுவந்து நான் அதிகப்படுத்த சிரமம் எடுத்துக்கொண்டவனும் அல்ல.
Arapça tefsirler:
اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟
38.87. நிச்சயமாக குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்களில் பகுத்தறிவுடையோருக்கான ஓர் அறிவுரையாகும்.
Arapça tefsirler:
وَلَتَعْلَمُنَّ نَبَاَهٗ بَعْدَ حِیْنٍ ۟۠
38.88. சிறிது காலத்தின் பின் நீங்கள் மரணிக்கும் வேளையில் இந்த குர்ஆனின் செய்தி உண்மையானது என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்வீர்கள்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• الداعي إلى الله يحتسب الأجر من عنده، لا يريد من الناس أجرًا على ما يدعوهم إليه من الحق.
1. அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளர் அல்லாஹ்விடமே கூலியை எதிர்பார்க்கிறார். சத்தியத்தின் பக்கம் அழைப்பதற்கு அவர் மக்களிடம் கூலியை எதிர்பார்க்கமாட்டார்.

• التكلّف ليس من الدِّين.
2. வலிந்து செயற்படுவது மார்க்கத்தில் உள்ளதல்ல.

• التوسل إلى الله يكون بأسمائه وصفاته وبالإيمان وبالعمل الصالح لا غير.
3. அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் மற்றும் நற்செயல்களைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கலாம். ஏனையவற்றைக் கொண்டல்ல.

 
Anlam tercümesi Sure: Sûratu's-Sâd
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat