Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ni Omar Sharif * - Indise ng mga Salin

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Salin ng mga Kahulugan Surah: Al-Hajj   Ayah:
اُذِنَ لِلَّذِیْنَ یُقٰتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْا ؕ— وَاِنَّ اللّٰهَ عَلٰی نَصْرِهِمْ لَقَدِیْرُ ۟ۙ
சண்டையிடப்படுபவர்களுக்கு - நிச்சயமாக அவர்கள் அநீதியிழைக்கப்பட்டார்கள் என்பதற்காக - (தங்களிடம் சண்டை செய்பவர்களை எதிர்த்து போர் புரிய) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவன் ஆவான்.
Ang mga Tafsir na Arabe:
١لَّذِیْنَ اُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ بِغَیْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ یَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ ؕ— وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِیَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ یُذْكَرُ فِیْهَا اسْمُ اللّٰهِ كَثِیْرًا ؕ— وَلَیَنْصُرَنَّ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ ؕ— اِنَّ اللّٰهَ لَقَوِیٌّ عَزِیْزٌ ۟
அவர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து எவ்வித நியாய(மான காரண)மின்றி வெளியேற்றப்பட்டார்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் என்று அவர்கள் கூறியதற்காகவே தவிர (வேறு எதற்காகவும் அவர்கள் வெளியேற்றப்படவில்லை). மக்களை - அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் பாதுகாப்பது இல்லை என்றால் துறவிகளின் தங்குமிடங்களும் கிறித்தவ ஆலயங்களும் யூத ஆலயங்களும் அதிகமாக அல்லாஹ்வின் பெயர் நினைவு கூறப்படும் மஸ்ஜிதுகளும் உடைக்கப்பட்டிருக்கும். இன்னும், நிச்சயமாக எவர் அவனுக்கு (அல்லாஹ்விற்கு) உதவுவாரோ அவருக்கு அல்லாஹ் உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை உள்ளவன், மிகைத்தவன் ஆவான்.
Ang mga Tafsir na Arabe:
اَلَّذِیْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ؕ— وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ۟
(அல்லாஹ்வின் பாதையில் போர்புரிகின்ற) அவர்களுக்கு பூமியில் நாம் இடமளித்தால் (-அதிகாரமளித்தால்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; இன்னும், (தங்களது செல்வங்களுக்கு உரிய) ஸகாத்தைக் கொடுப்பார்கள்; இன்னும், (மக்களுக்கு) நன்மையை (தவ்ஹீதை) ஏவுவார்கள்; இன்னும், தீமையிலிருந்து (-ஷிர்க்கிலிருந்து மக்களை) தடுப்பார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது.
Ang mga Tafsir na Arabe:
وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّثَمُوْدُ ۟ۙ
(நபியே!) உம்மை இவர்கள் பொய்ப்பித்தால் (அதற்காக கவலைப்படாதீர்.) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் ஆது, இன்னும் ஸமூது சமுதாயத்தினரும் பொய்ப்பித்தார்கள்.
Ang mga Tafsir na Arabe:
وَقَوْمُ اِبْرٰهِیْمَ وَقَوْمُ لُوْطٍ ۟ۙ
இன்னும், இப்ராஹீமுடைய மக்களும் லூத்துடைய மக்களும் (பொய்ப்பித்தனர்).
Ang mga Tafsir na Arabe:
وَّاَصْحٰبُ مَدْیَنَ ۚ— وَكُذِّبَ مُوْسٰی فَاَمْلَیْتُ لِلْكٰفِرِیْنَ ثُمَّ اَخَذْتُهُمْ ۚ— فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟
இன்னும், மத்யன் வாசிகளும் (தங்களது தூதர்களை பொய்ப்பித்தனர்). மூஸாவும் (ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமுதாயத்தால்) பொய்ப்பிக்கப்பட்டார். ஆக, (இந்த) நிராகரிப்பாளர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். (சிறிது காலத்திற்கு) பிறகு, (தண்டனையைக் கொண்டு) நான் அவர்களைப் பிடித்தேன். ஆகவே, (நான் அவர்களுக்கு கொடுத்த) எனது மறுப்பு (-தண்டனை) எப்படி இருந்தது!
Ang mga Tafsir na Arabe:
فَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا وَهِیَ ظَالِمَةٌ فَهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا ؗ— وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَّقَصْرٍ مَّشِیْدٍ ۟
ஆக, எத்தனையோ ஊர்களை அவை அநியாயம் செய்பவையாக இருக்கும் நிலையில் அவற்றை நாம் அழித்தோம். அவை தமது முகடுகள் மீது வீழ்ந்துள்ளன. இன்னும், (பராமரிப்பு இல்லாமல்) விடப்பட்ட எத்தனையோ கிணறுகளையும், சுண்ணாம்புக் கலவைகளைக் கொண்டு கட்டப்பட்ட (உயரமான, நீளமான) மாளிகைகளையும் (அழித்தோம்).
Ang mga Tafsir na Arabe:
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ یَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ یَّسْمَعُوْنَ بِهَا ۚ— فَاِنَّهَا لَا تَعْمَی الْاَبْصَارُ وَلٰكِنْ تَعْمَی الْقُلُوْبُ الَّتِیْ فِی الصُّدُوْرِ ۟
ஆக, அவர்கள் (அழிக்கப்பட்டவர்கள்) பூமியில் பயணம் செய்து பார்க்க மாட்டார்களா? (அப்படி அவர்கள் செய்தால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருந்தால் அவற்றின் மூலம் சிந்தித்து புரிவார்கள். இன்னும், அவர்களுக்கு (நல்லுபதேசத்தை செவியுறும்) காதுகள் இருந்தால் அவர்கள் அவற்றின் மூலம் செவியுறுவார்கள். ஆக, நிச்சயமாக (கண்களின்) பார்வைகள் குருடாகுவதில்லை. எனினும், நெஞ்சங்களில் உள்ள உள்ளங்கள்தான் குருடாகி விடுகின்றன.
Ang mga Tafsir na Arabe:
 
Salin ng mga Kahulugan Surah: Al-Hajj
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ni Omar Sharif - Indise ng mga Salin

Isinalin ito ni Shaykh Omar Sharif bin Abdul-Salam.

Isara