Check out the new design

แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ สูเราะฮ์: An-Nahl   อายะฮ์:
لِیَكْفُرُوْا بِمَاۤ اٰتَیْنٰهُمْ ؕ— فَتَمَتَّعُوْا ۫— فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟
16.55. அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தமை, அவர்களை அவனது அருள்களுக்கு நன்றி மறந்து செயற்பட வைத்து விட்டது. அந்த அருள்களில் ஒன்றே துன்பத்தை அகற்றுவதுமாகும். எனவேதான் அவர்களிடம் கூறப்பட்டது: “விரைவாகவோ, தாமதமாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வரும் வரை உங்களிடம் இருக்கும் அருட்கொடைகளை அனுபவித்துக் கொள்ளுங்கள்.”
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَیَجْعَلُوْنَ لِمَا لَا یَعْلَمُوْنَ نَصِیْبًا مِّمَّا رَزَقْنٰهُمْ ؕ— تَاللّٰهِ لَتُسْـَٔلُنَّ عَمَّا كُنْتُمْ تَفْتَرُوْنَ ۟
16.56. இணைவைப்பாளர்கள் எதுவும் அறியாத, -நிச்சயமாக பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ முடியாத ஜடப்பொருள்களான- தங்களின் சிலைகளுக்கு நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து ஒரு பங்கை ஏற்படுத்தி அதன் மூலம் அவற்றை நெருங்குகிறார்கள். -இணைவைப்பாளர்களே!- இந்த சிலைகளை தெய்வங்கள் என்றும் அவற்றிற்கு உங்களின் செல்வங்களிலிருந்து ஒரு பங்கு உண்டு என நீங்கள் எண்ணியது குறித்து மறுமை நாளில் நிச்சயம் நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَیَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَنٰتِ سُبْحٰنَهٗ ۙ— وَلَهُمْ مَّا یَشْتَهُوْنَ ۟
16.57. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வுக்கு பெண் மக்கள் உண்டு என இணைத்துக் கூறினார்கள். அவர்கள்தாம் வானவர்கள் என்றும் நம்புகிறார்கள். அவர்கள் தமக்கு தாம் விரும்பும் ஆண்மக்களை தெரிவுசெய்துகொண்டு, தாம் விரும்பாததை அல்லாஹ்வுக்கு உண்டு எனக் கூறுகின்றார்கள். இதைவிட பெரும் அநியாயம் என்ன இருக்க முடியும்? அல்லாஹ்வுக்கு அவர்கள் ஏற்படுத்தும் இவ்வுறவை விட்டும் அவன் தூய்மையாகி விட்டான்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُ ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِیْمٌ ۟ۚ
16.58. இந்த இணைவைப்பாளர்களில் யாருக்கேனும் பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி கூறப்பட்டால் வெறுப்பால் அவனுடைய முகம் கருத்து விடுகிறது. அவனுடைய உள்ளம் கவலையாலும் துக்கத்தாலும் நிரம்பி வழிகிறது. பின்னர் அவன் தனக்கு விரும்பாததை அல்லாஹ்வோடு இணைத்துக் கூறுகிறார்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
یَتَوَارٰی مِنَ الْقَوْمِ مِنْ سُوْٓءِ مَا بُشِّرَ بِهٖ ؕ— اَیُمْسِكُهٗ عَلٰی هُوْنٍ اَمْ یَدُسُّهٗ فِی التُّرَابِ ؕ— اَلَا سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟
16.59. பெண் குழந்தை பிறந்துள்ளது என்று தனக்குக் கூறப்பட்ட செய்தியால் அவன் மக்களை விட்டும் மறைந்து திரிகிறான். இந்த பெண் குழந்தையை இழிவுடன் வைத்துக் கொள்வதா? அல்லது உயிருடன் மண்ணில் புதைத்து விடுவதா? என்று தனக்குள்எண்ணுகிறான். தமக்குக் குறையாகக் கருதி வெறுப்பதை தங்களின் இறைவனுக்கு கற்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களின் தீர்ப்பு எவ்வளவு மோசமானது!
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ مَثَلُ السَّوْءِ ۚ— وَلِلّٰهِ الْمَثَلُ الْاَعْلٰی ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
16.60. பிள்ளைத் தேவை, அறியாமை, நிராகரிப்பு ஆகிய குறையுள்ள பண்புகள் மறுமையை பொய்பிக்கும் இந்த நிராகரிப்பாளர்களிடமே உள்ளது. கண்ணியம், பரிபூரணம், தேவையற்ற தன்மை, அறிவு போன்ற புகழுக்குரிய பண்புகள் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் தன் அதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாரும் மிகைக்க முடியாது. தன் படைப்பில், நிர்வாகத்தில், தான் சட்டமியற்றுவதில் அவன் ஞானம் மிக்கவன்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَلَوْ یُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَیْهَا مِنْ دَآبَّةٍ وَّلٰكِنْ یُّؤَخِّرُهُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ۚ— فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
16.61. மனிதர்கள் செய்யும் அநியாயத்தினாலும் நிராகரிப்பினாலும் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பதாயிருந்தால் பூமியின் மீது நடமாடும் எந்த மனிதனையும் உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆயினும் அல்லாஹ் தான் அறிந்த குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறான். அல்லாஹ் அறிந்து வைத்திருந்த அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட தவணை வந்து விட்டால் அவர்கள் சிறு நேரம் கூட முந்தவோ, பிந்தவோ மாட்டார்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَیَجْعَلُوْنَ لِلّٰهِ مَا یَكْرَهُوْنَ وَتَصِفُ اَلْسِنَتُهُمُ الْكَذِبَ اَنَّ لَهُمُ الْحُسْنٰی ؕ— لَا جَرَمَ اَنَّ لَهُمُ النَّارَ وَاَنَّهُمْ مُّفْرَطُوْنَ ۟
16.62. அவர்கள் தம்முடன் இணைக்க வெறுக்கும் பெண் மக்களை அவர்கள் அல்லாஹ்வுக்கு இருப்பதாகக் கூறுகின்றார்கள். அல்லாஹ்விடத்தில் தமக்கு உயர்ந்த அந்தஸ்து உண்டு என்று அவர்களின் நாவுகள் பொய்யுரைக்கின்றன. அவர்கள் கூறுவது போல் உண்மையாகவே அவர்கள் எழுப்பப்படும் விடயம் உண்மையென்றால் நிச்சயமாக அவர்கள் நரகம்தான் செல்வார்கள். அங்கு அவர்கள் விட்டு விடப்படுவார்கள். அவர்களால் ஒரு போதும் அங்கிருந்து வெளியேற முடியாது.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
تَاللّٰهِ لَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰۤی اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَهُوَ وَلِیُّهُمُ الْیَوْمَ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
16.63. -தூதரே!- அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் உமக்கு முன்னரும் சமூகங்களின்பால் தூதர்களை அனுப்பினோம். ஷைத்தான் அந்த மக்களின் இணைவைப்பு, நிராகரிப்பு, பாவங்கள் ஆகிய தீய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். மறுமையில் அவர்களது உதவியாளராக அவனையே நினைத்துக் கொண்டுள்ளனர். எனவே அவனிடமே அவர்கள் உதவி தேடட்டும். மேலும் அவர்களுக்கு மறுமையில் வேதனை மிக்க தண்டனை உண்டு.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَمَاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ اِلَّا لِتُبَیِّنَ لَهُمُ الَّذِی اخْتَلَفُوْا فِیْهِ ۙ— وَهُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
16.64. -தூதரே!- ஓரிறைக் கொள்கை, மறுமை நாள், மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் ஆகிய மக்கள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்களைக் குறித்து நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் உம்மீது குர்ஆனை இறக்கியுள்ளோம். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் அல்குர்ஆன் கொண்டு வந்துள்ளதன் மீதும் நம்பிக்கை கொண்ட நம்பிக்கையாளர்களுக்கு அது வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் சத்தியத்தைக் கொண்டு பயனடையக் கூடியவர்களாவர்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• من جهالات المشركين: نسبة البنات إلى الله تعالى، ونسبة البنين لأنفسهم، وأَنفَتُهم من البنات، وتغيّر وجوههم حزنًا وغمَّا بالبنت، واستخفاء الواحد منهم وتغيبه عن مواجهة القوم من شدّة الحزن وسوء الخزي والعار والحياء الذي يلحقه بسبب البنت.
1. இணைவைப்பாளர்களின் அறியாமை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் சில: (1.) அல்லாஹ்வுக்கு பெண் மக்களையும் தங்களுக்கு ஆண் மக்களையும் ஆக்கிக் கொண்டமை. (2.) பெண் பிள்ளைகளுடன் அவர்களின் வெறுப்பு பெண் பிள்ளைக் கிடைத்த நற்செய்தி கூறப்பட்டால் கவலையாலும் துக்கத்தினாலும் அவர்களின் முகங்கள் மாறிவிடும். 3. அவர்களுக்கு ஏற்படும் கடும் கவலை, அவமானம், இழிவு, பெண் குழந்தை கிடைத்ததனால் ஏற்படும் வெட்கம் ஆகிவற்றின் காரணத்தால் மக்களை எதிர்நோக்க முடியாமல் மறைந்து திரிதல்.

• من سنن الله إمهال الكفار وعدم معاجلتهم بالعقوبة ليترك الفرصة لهم للإيمان والتوبة.
2. அல்லாஹ் மக்களை உடனுக்குடன் தண்டிக்க மாட்டான். ஈமான் கொள்வதற்கும், பாவமன்னிப்புக் கோருவதற்கும் அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறான். இது அவனுடைய வழிமுறையாகும்.

• مهمة النبي صلى الله عليه وسلم الكبرى هي تبيان ما جاء في القرآن، وبيان ما اختلف فيه أهل الملل والأهواء من الدين والأحكام، فتقوم الحجة عليهم ببيانه.
3.அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளவற்றையும் பல்வேறுபட்ட மதத்தினரும், மனோ இச்சையின் பிரகாரம் நடந்துகொள்பவர்களும் கருத்து வேறுபாடு கொண்டுள்ள மார்க்கம், சட்டதிட்டங்கள் ஆகிவற்றைத் தெளிவுபடுத்துவதே நபியவர்களின் பெரும் பணியாகும். அதனை தெளிவுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கெதிரான ஆதாரம் நிரூபனமாகி விடும்.

 
แปลความหมาย​ สูเราะฮ์: An-Nahl
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) - สารบัญ​คำแปล

โดย ศูนย์ตัฟซีรเพื่อการศึกษาอัลกุรอาน

ปิด