Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - மொழிபெயர்ப்பு அட்டவணை

XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு சூரா: அல்அன்பியா   வசனம்:
وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَیْنَاۤ اِلَیْهِمْ فِعْلَ الْخَیْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِیْتَآءَ الزَّكٰوةِ ۚ— وَكَانُوْا لَنَا عٰبِدِیْنَ ۟ۙ
நமது கட்டளையின்படி நேர்வழி காட்டுகின்ற தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். நன்மைகளை செய்வதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும், ஸகாத்தை கொடுப்பதற்கும் நாம் அவர்களுக்கு வஹ்யி அறிவித்தோம். அவர்கள் நம்மை வணங்குபவர்களாக இருந்தார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَلُوْطًا اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّیْنٰهُ مِنَ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓىِٕثَ ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِیْنَ ۟ۙ
இன்னும் லூத்தை நினைவு கூர்வீராக! (மக்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கின்ற ஆற்றலையும் கல்வி ஞானத்தையும் நாம் அவருக்கு கொடுத்தோம். அசிங்கங்களை செய்துகொண்டு இருந்த ஊரிலிருந்து நாம் அவரை பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் கெட்ட மக்களாக, பாவிகளாக இருந்தார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَاَدْخَلْنٰهُ فِیْ رَحْمَتِنَا ؕ— اِنَّهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟۠
இன்னும் அவரை நமது அருளில் நாம் நுழைத்தோம். நிச்சயமாக அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
அரபு விரிவுரைகள்:
وَنُوْحًا اِذْ نَادٰی مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
இன்னும் நூஹையும் நினைவு கூர்வீராக! அவர் இதற்கு முன்னர் (தன் இறைவனை) அழைத்தபோது, நாம் அவருக்கு பதிலளித்து அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பெரிய தண்டனையிலிருந்து பாதுகாத்தோம்.
அரபு விரிவுரைகள்:
وَنَصَرْنٰهُ مِنَ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِیْنَ ۟
நமது அத்தாட்சிகளை பொய்ப்பித்த மக்களிடமிருந்து அவருக்கு நாம் உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் கெட்ட மக்களாக இருந்தனர். ஆகவே, அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
அரபு விரிவுரைகள்:
وَدَاوٗدَ وَسُلَیْمٰنَ اِذْ یَحْكُمٰنِ فِی الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِیْهِ غَنَمُ الْقَوْمِ ۚ— وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِیْنَ ۟ۙ
தாவூது இன்னும் ஸுலைமானை நினைவு கூர்வீராக! அவ்விருவரும் விவசாயத்தின் விளைச்சலில் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக! அதில் மக்களுடைய ஆடுகள் (இரவில்) நுழைந்த போது அவர்களின் (தாவூது, ஸுலைமான் மற்றும் அந்தக் கூட்டத்தார்களின்) தீர்ப்பை நாம் அறிந்தவர்களாக இருந்தோம்.
அரபு விரிவுரைகள்:
فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ— وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ— وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ— وَكُنَّا فٰعِلِیْنَ ۟
அதை (அந்த பிரச்சனையை) நாம் ஸுலைமானுக்கு புரிய வைத்தோம். (இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து கூறப்பட்ட தூதர்கள்) எல்லோருக்கும் ஞானத்தையும் (-நபித்துவத்தையும் இறை சட்டங்களைப் பற்றிய) கல்வியையும் நாம் கொடுத்தோம். தாவூதுடன் மலைகளையும் பறவைகளையும் (அவை அவருடன் நம்மை) துதிக்கின்றவையாக வசப்படுத்தினோம். (இதை விதியில் முன்பே) நாம் முடிவு செய்தவர்களாக இருந்தோம்.
அரபு விரிவுரைகள்:
وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْ بَاْسِكُمْ ۚ— فَهَلْ اَنْتُمْ شٰكِرُوْنَ ۟
உங்களை உங்கள் போரில் பாதுகாப்பதற்காக உங்களுக்காக ஆயுதங்களை செய்வதை நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவீர்களா?
அரபு விரிவுரைகள்:
وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ عَاصِفَةً تَجْرِیْ بِاَمْرِهٖۤ اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ— وَكُنَّا بِكُلِّ شَیْءٍ عٰلِمِیْنَ ۟
கடுமையாக வீசக்கூடிய காற்றை ஸுலைமானுக்கு (நாம் வசப்படுத்தினோம்) அவருடைய (-ஸுலைமானுடைய) கட்டளையின்படி அது நாம் அருள்வளம் புரிந்த பூமியின் பக்கம் (ஸுலைமானையும் அவருடைய படையையும் சுமந்து) செல்லும். எல்லாவற்றையும் அறிந்தவர்களாக நாம் இருந்தோம்.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு சூரா: அல்அன்பியா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - மொழிபெயர்ப்பு அட்டவணை

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

மூடுக