Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - மொழிபெயர்ப்பு அட்டவணை

XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு சூரா: ஹூத்   வசனம்:
فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهَا حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۙ۬— مَّنْضُوْدٍ ۟ۙ
ஆக, (லூத்துடைய சமுதாயத்தை அழிக்க) நம் கட்டளை வந்தபோது, அதன் மேல்புறத்தை அதன் கீழ்ப்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம். இன்னும், அதன் மீது (நன்கு) இறுக்கமாக்கப்பட்ட சுடப்பட்ட களிமண்ணினால் ஆன கற்களை மழையாகப் பொழிந்தோம்.
அரபு விரிவுரைகள்:
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ ؕ— وَمَا هِیَ مِنَ الظّٰلِمِیْنَ بِبَعِیْدٍ ۟۠
(அந்த கற்கள்) உம் இறைவனிடம் அடையாளமிடப்பட்டவையாகும். (நாம் இறக்கிய) அ(ந்த தண்டனையான)து அக்கிரமக்காரர்களிலிருந்து தூரமாக இல்லை.
அரபு விரிவுரைகள்:
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ— قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— وَلَا تَنْقُصُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ اِنِّیْۤ اَرٰىكُمْ بِخَیْرٍ وَّاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ مُّحِیْطٍ ۟
‘மத்யன்’ க்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (தூதராக அனுப்பினோம்). “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனை அன்றி (வேறு) வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு அறவே இல்லை. அளவையிலும் நிறுவையிலும் (பொருள்களை) குறைக்காதீர்கள். நிச்சயமாக நான் உங்களை நல்லதொரு வசதியில் காண்கிறேன். நிச்சயமாக நான் சூழ்ந்து விடக்கூடிய ஒரு நாளின் வேதனையை உங்கள் மீது பயப்படுகிறேன்” என்று கூறினார்.
அரபு விரிவுரைகள்:
وَیٰقَوْمِ اَوْفُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
என் மக்களே! அளவையிலும் நிறுவையிலும் நீதமாக (பொருள்களை) முழுமைப்படுத்துங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைக்காதீர்கள். பூமியில் விஷமிகளாக இருந்து கலகம் செய்யாதீர்கள்.
அரபு விரிவுரைகள்:
بَقِیَّتُ اللّٰهِ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۚ۬— وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِحَفِیْظٍ ۟
நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் மீதப்படுத்தியதே உங்களுக்கு மிக மேலானதாகும். நான் உங்கள் மீது கண்காணிப்பாளன் அல்ல”(என்று கூறினார்).
அரபு விரிவுரைகள்:
قَالُوْا یٰشُعَیْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّفْعَلَ فِیْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا ؕ— اِنَّكَ لَاَنْتَ الْحَلِیْمُ الرَّشِیْدُ ۟
“ஷுஐபே! எங்கள் மூதாதைகள் வணங்கியவற்றை நாங்கள் விடுவதற்கும், அல்லது எங்கள் செல்வங்களில் நாங்கள் நாடுகின்றபடி நாங்கள் (செலவு) செய்வதை நாங்கள் விடுவதற்கும் உம் தொழுகையா உம்மைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர்தான் மகா சகிப்பாளர், நல்லறிவாளர்” என்று (கேலியாகக்) கூறினார்கள்.
அரபு விரிவுரைகள்:
قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَرَزَقَنِیْ مِنْهُ رِزْقًا حَسَنًا ؕ— وَمَاۤ اُرِیْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰی مَاۤ اَنْهٰىكُمْ عَنْهُ ؕ— اِنْ اُرِیْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُ ؕ— وَمَا تَوْفِیْقِیْۤ اِلَّا بِاللّٰهِ ؕ— عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ اُنِیْبُ ۟
என் மக்களே! அறிவியுங்கள்! என் இறைவனின் ஒரு தெளிவான அத்தாட்சியில் நான் இருப்பதால், அவன் தன்னிடமிருந்து எனக்கு நல்ல உணவை வழங்கி இருப்பதால் (நான் அவனுடைய தூது செய்தியில் மோசடி செய்வது தகுமா?)... நான் உங்களைத் தடுப்பதில் உங்களுக்கு முரண்படுவதற்கு நாடமாட்டேன். நான் இயன்றவரை சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நாடமாட்டேன். அல்லாஹ்வைக் கொண்டே தவிர என் நற்பாக்கியம் இல்லை. அவன் மீதே நம்பிக்கை வைத்தேன்; அவன் பக்கமே திரும்புகிறேன்.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு சூரா: ஹூத்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - மொழிபெயர்ப்பு அட்டவணை

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

மூடுக