Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் * - மொழிபெயர்ப்பு அட்டவணை

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்இஸ்ரா   வசனம்:
اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ ؕ— اِنَّ فَضْلَهٗ كَانَ عَلَیْكَ كَبِیْرًا ۟
ஆனால், உம் இறைவனுடைய அருள் (காரணமாக அவ்வாறு அவன் செய்யவில்லை). நிச்சயமாக உம்மீது அவனுடைய அருள் மிகப் பெரிதாக இருக்கிறது.
அரபு விரிவுரைகள்:
قُلْ لَّىِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰۤی اَنْ یَّاْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا یَاْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِیْرًا ۟
(நபியே!) கூறுவீராக! மனிதர்களும் ஜின்களும் இந்த குர்ஆன் போன்ற (ஒரு வேதத்)தைக் கொண்டு வர ஒன்று சேர்ந்தாலும் இது போன்ற (வேதத்)தை அவர்கள் கொண்டு வர மாட்டார்கள், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே.
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِیْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ ؗ— فَاَبٰۤی اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا ۟
மேலும், திட்டவட்டமாக இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மக்களுக்கு விவரித்தோம். ஆனால், மக்களில் அதிகமானவர்கள் (நம்பிக்கை கொள்ள) மறுத்து, நிரகாரிக்கவே செய்தனர்.
அரபு விரிவுரைகள்:
وَقَالُوْا لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰی تَفْجُرَ لَنَا مِنَ الْاَرْضِ یَنْۢبُوْعًا ۟ۙ
மேலும், (நிராகரிப்பாளர்கள்) கூறினார்கள்: (நபியே!) “பூமியில் ஓர் ஊற்றை எங்களுக்காக நீர் பிளந்து (ஓட) விடும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்.”
அரபு விரிவுரைகள்:
اَوْ تَكُوْنَ لَكَ جَنَّةٌ مِّنْ نَّخِیْلٍ وَّعِنَبٍ فَتُفَجِّرَ الْاَنْهٰرَ خِلٰلَهَا تَفْجِیْرًا ۟ۙ
“அல்லது பேரிட்சை மரம்; இன்னும், திராட்சை செடியின் ஒரு தோட்டம் உமக்கு இருந்து, அதற்கு மத்தியில் (பல இடங்களில்) நதிகளை நீர் பிளந்தோடச் செய்கின்ற வரை (உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்).”
அரபு விரிவுரைகள்:
اَوْ تُسْقِطَ السَّمَآءَ كَمَا زَعَمْتَ عَلَیْنَا كِسَفًا اَوْ تَاْتِیَ بِاللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ قَبِیْلًا ۟ۙ
“அல்லது நீர் கூறியது போன்று (முறிக்கப்பட்ட) துண்டுகளாக வானத்தை எங்கள் மீது நீர் விழவைக்கின்ற வரை; அல்லது, அல்லாஹ்வையும் வானவர்களையும் கண்முன் நீர் கொண்டுவருகின்ற வரை (உம்மை நாம் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்).”
அரபு விரிவுரைகள்:
اَوْ یَكُوْنَ لَكَ بَیْتٌ مِّنْ زُخْرُفٍ اَوْ تَرْقٰی فِی السَّمَآءِ ؕ— وَلَنْ نُّؤْمِنَ لِرُقِیِّكَ حَتّٰی تُنَزِّلَ عَلَیْنَا كِتٰبًا نَّقْرَؤُهٗ ؕ— قُلْ سُبْحَانَ رَبِّیْ هَلْ كُنْتُ اِلَّا بَشَرًا رَّسُوْلًا ۟۠
“அல்லது, தங்கத்தினால் ஆன ஒரு வீடு உமக்கு இருக்கும் வரை; அல்லது, வானத்தில் நீர் ஏறும் வரை (உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்), (அப்படி நீர் ஏறிவிட்டாலும்) உமது ஏறுதலுக்காக (மட்டும்) நாம் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம், நாங்கள் படிக்கின்ற ஒரு வேதத்தை எங்கள் மீது நீர் இறக்கி வைக்கும் வரை. (நபியே) கூறுவீராக! “என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் ஒரு மனிதராக, தூதராக தவிர (இதெற்கெல்லாம் சுயமாக ஆற்றல் பெற்றவனாக) இருக்கின்றேனா?”
அரபு விரிவுரைகள்:
وَمَا مَنَعَ النَّاسَ اَنْ یُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰۤی اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوْلًا ۟
மனிதர்களுக்கு நேர்வழி வந்தபோது, “ஒரு மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?” என்று அவர்கள் கூறியதைத் தவிர (அந்த நேர்வழியை) அவர்கள் நம்பிக்கை கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கவில்லை.
அரபு விரிவுரைகள்:
قُلْ لَّوْ كَانَ فِی الْاَرْضِ مَلٰٓىِٕكَةٌ یَّمْشُوْنَ مُطْمَىِٕنِّیْنَ لَنَزَّلْنَا عَلَیْهِمْ مِّنَ السَّمَآءِ مَلَكًا رَّسُوْلًا ۟
(நபியே) கூறுவீராக! “பூமியில், நிம்மதியானவர்களாக நடந்து செல்கின்ற (வாழுகின்ற) வானவர்கள் இருந்திருந்தால் வானத்திலிருந்து வானவரையே ஒரு தூதராக அவர்களிடம் இறக்கியிருப்போம்.
அரபு விரிவுரைகள்:
قُلْ كَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ— اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِیْرًا بَصِیْرًا ۟
(நபியே) கூறுவீராக! “எனக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன். நிச்சயமாக அவன் தன் அடியார்களை ஆழ்ந்தறிந்தவனாக உற்றுநோக்கியவனாக இருக்கிறான்.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்இஸ்ரா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் உமர் ஷரீப் அப்துல் சலாம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மூடுக