Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (163) அத்தியாயம்: அல்அஃராப்
وَسْـَٔلْهُمْ عَنِ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ ۘ— اِذْ یَعْدُوْنَ فِی السَّبْتِ اِذْ تَاْتِیْهِمْ حِیْتَانُهُمْ یَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّیَوْمَ لَا یَسْبِتُوْنَ ۙ— لَا تَاْتِیْهِمْ ۛۚ— كَذٰلِكَ ۛۚ— نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
7.163. தூதரே! சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பின் மீன் பிடித்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய தமது முன்னோர்களை அல்லாஹ் தண்டித்ததை நினைவுபடுத்தும் விதமாக யூதர்களிடம் கேட்பீராக: மீன் பிடிப்பதற்கு தடுக்கப்பட்ட தினமான சனிக் கிழமையில் மீன்கள் கடலுக்கு மேல் மட்டத்தில் வரும் அதே வேளை ஏனைய நாட்களில் வராமலிருக்கச் செய்வதன் மூலம் அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் பாவங்கள் புரிந்ததனால்தான் அவன் அவர்களை இவ்வாறு சோதித்தான். தந்திரமாக அவர்கள் சனிக் கிழமைக்கு முன்னரே வலையை வீசி கிடங்குகளைத் தோண்டி வைத்தார்கள். சனிக்கிழமை மீன்கள் அதில் மாட்டிக் கொண்டன. ஞாயிற்றுக்கிழமை அவற்றை எடுத்து உண்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• الجحود والكفران سبب في الحرمان من النعم.
1. மறுத்தலும் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்ளுதலும் அருட்கொடைகள் தடையாவதற்குக் காரணமாக அமைகின்றன.

• من أسباب حلول العقاب ونزول العذاب التحايل على الشرع؛ لأنه ظلم وتجاوز لحدود الله.
2. மார்க்கத்தில் தந்திரம் செய்வது தண்டனை இறங்குவதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஏனெனில் அவ்வாறு செய்வது அநியாயமாகும், அல்லாஹ்வின் வரம்பை மீறுவதாகும்.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (163) அத்தியாயம்: அல்அஃராப்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக