Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (13) அத்தியாயம்: முஹம்மத்
وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ هِیَ اَشَدُّ قُوَّةً مِّنْ قَرْیَتِكَ الَّتِیْۤ اَخْرَجَتْكَ ۚ— اَهْلَكْنٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ ۟
47.13. தூதரே! உம்மை வெளியேற்றிய இந்த மக்காவாசிகளைவிட முன்னர் வாழ்ந்த எத்தனையோ ஊர்மக்கள் அதிக செல்வங்களையும் பிள்ளைகளையும் பெற்றவர்களாகவும் பலம்மிக்கவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் தங்களின் தூதர்களை பொய்ப்பித்தபோது அழித்துவிட்டோம். அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வந்தபோது அதிலிருந்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்கு உதவிசெய்யக்கூடிய உதவியாளர்கள் யாரும் இருக்கவில்லை. எனவே நாம் மக்காவாசிகளை அழிக்க நாடினால் அது நமக்கு இயலாததல்ல.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• اقتصار همّ الكافر على التمتع في الدنيا بالمتع الزائلة.
1. அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதே நிராகரிப்பாளனின் குறுகிய நோக்கமாகும்.

• المقابلة بين جزاء المؤمنين وجزاء الكافرين تبيّن الفرق الشاسع بينهما؛ ليختار العاقل أن يكون مؤمنًا، ويختار الأحمق أن يكون كافرًا.
2. நம்பிக்கையாளர்களும் நிராகரிப்பாளர்களும் பெறும் கூலியை ஒப்பிடுவது இரண்டுக்கும் மத்தியில் உள்ள பாரிய இடைவெளியைத் தெளிவுபடுத்துகிறது. அறிவாளி தான் நம்பிக்கையாளனாக இருப்பதையும் மூடன் நிராகரிப்பாளனாக இருப்பதையும் தெரிவுசெய்வதற்காகவே இது தெளிவுபடுத்தபட்டுள்ளது.

• بيان سوء أدب المنافقين مع رسول الله صلى الله عليه وسلم.
3. நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் தூதருடன் ஒழுக்கயீனமாக நடந்துகொள்வதைத் தெளிவுபடுத்தல்.

• العلم قبل القول والعمل.
4. பேசுவதற்கும் செயல்படுவதற்கும் முன்னர் கற்றுக்கொள்ள வேண்டும்.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (13) அத்தியாயம்: முஹம்மத்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக