Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (53) அத்தியாயம்: அர்ரூம்
وَمَاۤ اَنْتَ بِهٰدِ الْعُمْیِ عَنْ ضَلٰلَتِهِمْ ؕ— اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ یُّؤْمِنُ بِاٰیٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ۟۠
30.53. நேரான வழியை விட்டும் நெறிபிறழ்ந்துவிட்டவர்களுக்கு உம்மால் நேர்வழியில் செல்ல பாக்கியம் அளிக்க முடியாது. நம்முடைய வசனங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே உம்மால் பயனுள்ள வகையில் செவியேற்கச் செய்ய முடியும். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் நீர் கூறுவதைக்கொண்டு பயனடைவார்கள். அவர்கள் நம்முடைய கட்டளைக்கு அடிபணிந்து அதற்குக் கட்டுப்பட்டவர்கள்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• يأس الكافرين من رحمة الله عند نزول البلاء.
1. சோதனை இறங்கும் போது அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராகரிப்பாளர்கள் நிராசையடைதல்.

• هداية التوفيق بيد الله، وليست بيد الرسول صلى الله عليه وسلم.
2. நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது. அது தூதரின் கைவசம் இல்லை.

• مراحل العمر عبرة لمن يعتبر.
3. வாழ்நாளின் கட்டங்கள் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினையாகும்.

• الختم على القلوب سببه الذنوب.
4. பாவங்கள் உள்ளங்களில் முத்திரையிடப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (53) அத்தியாயம்: அர்ரூம்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக