Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - දෙමළ පරිවර්තනය- උමර් ෂරීෆ් * - පරිවර්තන පටුන

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් බකරා   වාක්‍යය:
مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِی اسْتَوْقَدَ نَارًا ۚ— فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِیْ ظُلُمٰتٍ لَّا یُبْصِرُوْنَ ۟
அவர்களின் உதாரணம் நெருப்பை மூட்டியவர்களின் உதாரணத்தைப் போலாகும். அது, அவர்களைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியை போக்கிவிட்டான். இன்னும், அவன் அவர்களை இருள்களில் - அவர்கள் (எதையும்) பார்க்க முடியாதவர்களாக - விட்டுவிட்டான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
صُمٌّۢ بُكْمٌ عُمْیٌ فَهُمْ لَا یَرْجِعُوْنَ ۟ۙ
(அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள் ஆவார்கள். ஆகவே, அவர்கள் (நேர்வழிக்கு) திரும்ப மாட்டார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَوْ كَصَیِّبٍ مِّنَ السَّمَآءِ فِیْهِ ظُلُمٰتٌ وَّرَعْدٌ وَّبَرْقٌ ۚ— یَجْعَلُوْنَ اَصَابِعَهُمْ فِیْۤ اٰذَانِهِمْ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ ؕ— وَاللّٰهُ مُحِیْطٌ بِالْكٰفِرِیْنَ ۟
அல்லது, (அவர்களின் உதாரணம்) வானத்திலிருந்து பொழியும் மழையைப் போலாகும். அதில் இருள்களும் இடியும் மின்னலும் இருக்கின்றன. இடி முழக்கங்களால் மரணத்தைப் பயந்து அவர்கள் தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் ஆக்கிக் கொள்கிறார்கள். இன்னும், அல்லாஹ் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்திருக்கிறான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
یَكَادُ الْبَرْقُ یَخْطَفُ اَبْصَارَهُمْ ؕ— كُلَّمَاۤ اَضَآءَ لَهُمْ مَّشَوْا فِیْهِ ۙۗ— وَاِذَاۤ اَظْلَمَ عَلَیْهِمْ قَامُوْا ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. அது அவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அதில் அவர்கள் நடந்து செல்கிறார்கள். அவர்கள் மீது இருள் சூழ்ந்தால் நின்று விடுகிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களின் செவிப்புலனையும் அவர்களின் பார்வைகளையும் திட்டமாக போக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
یٰۤاَیُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ وَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ
மக்களே! நீங்கள் (உண்மையான) இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்கு உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً ۪— وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚ— فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். இன்னும், வானத்தி(ன் மேகத்தி)லிருந்து (மழை) நீரை இறக்கினான். ஆக, அதன் மூலம் உங்களுக்கு (பல விதமான) கனிகளிலிருந்து உணவை உற்பத்தி செய்(து கொடுத்)தான். ஆகவே, (இந்த உண்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில், அல்லாஹ்விற்கு நிகரானவர்களை (-பொய்யான இணை தெய்வங்களை) ஏற்படுத்தாதீர்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَاِنْ كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰی عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ ۪— وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
நாம் நம் அடிமை மீது இறக்கிய (வேதத்)தில் (அது இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது என்பதில்) நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ் அல்லாத உங்கள் ஆதரவாளர்களையும் (உங்கள் உதவிக்காக) நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதை செய்து காட்டுங்கள்).
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوا النَّارَ الَّتِیْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖۚ— اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَ ۟
ஆக, நீங்கள் (அப்படி ஒரு வேதத்தை) உருவாக்கவில்லையென்றால், - நீங்கள் (அப்படி) உருவாக்கவே முடியாது - (நரக) நெருப்பை அஞ்சுங்கள். மக்களும் கற்களும் அதன் எரிபொருள் ஆவார்கள். அது நிராகரிப்பாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් බකරා
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - දෙමළ පරිවර්තනය- උමර් ෂරීෆ් - පරිවර්තන පටුන

උමර් ෂරීෆ් බින් අබ්දුස්සලාම් විසින් මෙය පරිවර්තනය කරන ලදී.

වසන්න