Check out the new design

Tradução dos significados do Nobre Qur’an. - Tradução tâmil de interpretação abreviada do Nobre Alcorão. * - Índice de tradução


Tradução dos significados Surah: As-Sajda   Versículo:
وَلَنُذِیْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰی دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
32.21. தங்கள் இறைவனுக்குக் கட்டுப்படாமல் பொய்ப்பிப்பவர்கள் அல்லாஹ்வை வழிப்படுவதன் பக்கம் திரும்பிவிடும் பொருட்டு மறுமையில் அவர்களுக்காக தயார்செய்யப்பட்டுள்ள பெரும் வேதனைக்கு முன்னர் இவ்வுலகில் சோதனைகளையும் துன்பங்களையும் அவர்களுக்கு சுவைக்கச் செய்வோம்.
Os Tafssir em língua árabe:
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰیٰتِ رَبِّهٖ ثُمَّ اَعْرَضَ عَنْهَا ؕ— اِنَّا مِنَ الْمُجْرِمِیْنَ مُنْتَقِمُوْنَ ۟۠
32.22. அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு அறிவுரை கூறப்பட்டும் அறிவுரை பெறாது, அவற்றைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் வேறு யாருமில்லை. -நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்கள் புரிந்து அல்லாஹ்வின் வசனங்களை புறக்கணிக்கும்- குற்றவாளிகளை நாம் சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக தண்டித்தே தீருவோம்.
Os Tafssir em língua árabe:
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَلَا تَكُنْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآىِٕهٖ وَجَعَلْنٰهُ هُدًی لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ
32.23. நாம் திட்டமாக மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். -தூதரே!- நீர் விண்ணுலகிற்குச் சென்ற இரவில் - மிஃராஜ் உடைய இரவில் மூஸாவை சந்தித்தது குறித்து சந்தேகம் கொள்ளாதீர். நாம் மூஸாவின் மீது இறக்கிய வேதத்தை இஸ்ராயீலின் மக்களுக்கு வழிகேட்டிலிருந்து நேர்வழிகாட்டடியாக ஆக்கினோம்.
Os Tafssir em língua árabe:
وَجَعَلْنَا مِنْهُمْ اَىِٕمَّةً یَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْا ؕ۫— وَكَانُوْا بِاٰیٰتِنَا یُوْقِنُوْنَ ۟
32.24. நாம் இஸ்ரவேலர்களிலிருந்து மக்கள் பின்பற்றத்தக்க நமது அனுமதி மற்றும் நாம் வழங்கிய ஆற்றல்களைக்கொண்டு சத்தியத்துக்கு வழிகாட்டும் தலைவர்களை ஏற்படுத்தினோம். அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றுதல், அவனது விலக்கல்களைத் தவிரந்துகொள்ளுதல், அழைப்புப் பணியில் ஏற்படும் நோவினை என்பவற்றில் அவர்கள் பொறுமையைக் கடைபிடித்த போது இது நிகழ்ந்தது. அவர்கள் தங்களின் தூதர் மீது இறக்கப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களை உறுதியாக நம்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.
Os Tafssir em língua árabe:
اِنَّ رَبَّكَ هُوَ یَفْصِلُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
32.25. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் உலகில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவற்றில் மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். சத்தியவாதிகளையும் அசத்தியவாதிகளையும் தெளிவுபடுத்துவான். ஒவ்வொருவருக்கும் தகுந்த கூலியை வழங்கிடுவான்.
Os Tafssir em língua árabe:
اَوَلَمْ یَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنَ الْقُرُوْنِ یَمْشُوْنَ فِیْ مَسٰكِنِهِمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ ؕ— اَفَلَا یَسْمَعُوْنَ ۟
32.26. நாம் இவர்களுக்கு முன்னால் எத்தனையோ சமூகங்களை அழித்துள்ளோம் என்பது இவர்களுக்குத் தெளிவாகவில்லையா? இவர்கள் குருடாகி விட்டார்களா என்ன? இவர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களின் வழியேதான் கடந்து செல்கிறார்கள். அவர்களது நிலமையைக்கொண்டு இவர்கள் படிப்பினை பெறவில்லையா? நிச்சயமாக அந்தச் சமூகங்களுக்கு அவர்களின் நிராகரிப்பினாலும் பாவங்களினாலும் நிகழ்ந்த அழிவில், அவர்களிடம் வந்த இறைத் தூதர்கள் உண்மையாளர்களே என்பதைத் தெரிவிக்கும் படிப்பினைகள் இருக்கின்றன. அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிக்கும் இவர்கள் ஏற்றுக்கொண்டு அறிவுரை பெறும் நோக்கில் செவியேற்கமாட்டார்களா என்ன?
Os Tafssir em língua árabe:
اَوَلَمْ یَرَوْا اَنَّا نَسُوْقُ الْمَآءَ اِلَی الْاَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهٖ زَرْعًا تَاْكُلُ مِنْهُ اَنْعَامُهُمْ وَاَنْفُسُهُمْ ؕ— اَفَلَا یُبْصِرُوْنَ ۟
32.27. நாம் மழை நீரை செடிகொடிகளற்ற வறண்ட பூமியை நோக்கி அனுப்பி அதன் மூலம் அவர்களும் அவர்களின் ஒட்டகம், மாடு, ஆடு என்பன உண்ணக்கூடிய பயிர்களை நாம் வெளிப்படுத்துகின்றோம் என்பதை மறுமையில் எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இவர்கள் பார்க்க வேண்டாமா? அவர்கள் அதனைப் பார்த்து, வறண்ட பூமியில் செடிகொடிகளை முளைக்கச் செய்தவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா?
Os Tafssir em língua árabe:
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْفَتْحُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
32.28. வேதனையை அவசரமாக வேண்டி மறுமையில் மீண்டும் எழுப்பப்படுவதை பொய்ப்பிப்போர் கேட்கிறார்கள்: “நிச்சயமாக மறுமை நாளில் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே தீர்ப்பளிக்கப்பட்டு நாங்கள் நரகத்திற்கு செல்வோம் நீங்கள் சுவனத்திற்கு செல்வீர்கள் என்று நீங்கள் எண்ணும் அந்தத் தீர்ப்பு எப்போது நிகழும்?
Os Tafssir em língua árabe:
قُلْ یَوْمَ الْفَتْحِ لَا یَنْفَعُ الَّذِیْنَ كَفَرُوْۤا اِیْمَانُهُمْ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
32.29. -தூதரே!- நீர் கூறுவீராக: “அது மறுமை நாளில் நிறைவேறக்கூடிய வாக்குறுதியாகும். நிச்சயமாக அது அடியார்களிடையே தீர்ப்பு வழங்கப்படும் நாளாகும். அச்சமயத்தில் உலகில் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் மறுமை நாளை கண்டபிறகு நம்பிக்கைகொள்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. தங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதற்கு அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.
Os Tafssir em língua árabe:
فَاَعْرِضْ عَنْهُمْ وَانْتَظِرْ اِنَّهُمْ مُّنْتَظِرُوْنَ ۟۠
32.30. -தூதரே!- தொடர்ந்தும் வழிகேட்டில் இருக்கும் இவர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்கள் மீது இறங்கப்போவதை எதிர்பார்ப்பீராக. நிச்சயமாக நீர் அவர்களுக்கு வாக்களித்த வேதனையை எதிர்பார்க்கிறார்கள்.
Os Tafssir em língua árabe:
Das notas do versículo nesta página:
• عذاب الكافر في الدنيا وسيلة لتوبته.
1. நிராகரிப்பாளனுக்கு உலகில் வழங்கப்படும் தண்டனை பாவமன்னிப்புக் கோருவதற்கு அவனுக்கு வழங்கப்படும் வாய்ப்பாகும்.

• ثبوت اللقاء بين نبينا صلى الله عليه وسلم وموسى عليه السلام ليلة الإسراء والمعراج.
2. நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் மூஸா(அலை) அவர்களுக்கும் மத்தியில் இஸ்ரா, மிஃராஜ் உடைய இரவில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பது உறுதியாகிறது.

• الصبر واليقين صفتا أهل الإمامة في الدين.
3. பொறுமையும் உறுதியான நம்பிக்கையும் மார்க்கத் தலைமைகளின் இரு பண்புகளாகும்.

 
Tradução dos significados Surah: As-Sajda
Índice de capítulos Número de página
 
Tradução dos significados do Nobre Qur’an. - Tradução tâmil de interpretação abreviada do Nobre Alcorão. - Índice de tradução

Emitido pelo Centro de Tafssir para Estudos do Alcorão.

Fechar