Check out the new design

د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - د ژباړو فهرست (لړلیک)

XML CSV Excel API
Please review the Terms and Policies

د معناګانو ژباړه سورت: مؤمنون   آیت:
فَاِذَا اسْتَوَیْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَی الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ نَجّٰىنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
நீரும் உன்னுடன் இருப்பவரும் கப்பலில் ஏறிவிட்டால் கூறுவீராக! எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவன் அநியாயக்கார மக்களிடமிருந்து எங்களை பாதுகாத்தான்.
عربي تفسیرونه:
وَقُلْ رَّبِّ اَنْزِلْنِیْ مُنْزَلًا مُّبٰرَكًا وَّاَنْتَ خَیْرُ الْمُنْزِلِیْنَ ۟
இன்னும் கூறுவீராக! “என் இறைவா! (உன்) அருள் நிறைந்த ஓர் இடத்தில் என்னை தங்க வைப்பாயாக! நீ தங்க வைப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”
عربي تفسیرونه:
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ وَّاِنْ كُنَّا لَمُبْتَلِیْنَ ۟
நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. நிச்சயமாக நாம் (அவர்களை) சோதிப்பவர்களாகவே இருந்தோம்.
عربي تفسیرونه:
ثُمَّ اَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِیْنَ ۟ۚ
பிறகு, அவர்களுக்குப் பின்னர் வேறு ஒரு தலைமுறையினரை நாம் உருவாக்கினோம்.
عربي تفسیرونه:
فَاَرْسَلْنَا فِیْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— اَفَلَا تَتَّقُوْنَ ۟۠
அவர்களில் ஒரு தூதரை அவர்களில் இருந்தே நாம் அனுப்பினோம். (அவர் கூறினார்) அல்லாஹ்வை வணங்குங்கள். அவனையன்றி வணங்கத் தகுதியான (வேறு) கடவுள் யாரும் உங்களுக்கு இல்லை. (அவனது தண்டனையை) நீங்கள் அஞ்ச வேண்டாமா?
عربي تفسیرونه:
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهِ الَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِلِقَآءِ الْاٰخِرَةِ وَاَتْرَفْنٰهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۙ— مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ— یَاْكُلُ مِمَّا تَاْكُلُوْنَ مِنْهُ وَیَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ ۟ۙ
அவருடைய மக்களில் நிராகரித்து மறுமையின் சந்திப்பை பொய்யாக்கிய தலைவர்கள் கூறினர். - அவர்களுக்கு நாம் உலக வாழ்வில் செல்வத்தை வழங்கியிருந்தோம். - இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறு இல்லை. நீங்கள் சாப்பிடுவதிலிருந்து அவர் சாப்பிடுகிறார் இன்னும் நீங்கள் குடிப்பதிலிருந்து அவர் குடிக்கிறார்.
عربي تفسیرونه:
وَلَىِٕنْ اَطَعْتُمْ بَشَرًا مِّثْلَكُمْ ۙ— اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟ۙ
“நீங்கள் உங்களைப் போன்ற மனிதருக்கு கீழ்ப்படிந்து நடந்தால் நிச்சயமாக நீங்கள் அப்போது நஷ்டவாளிகள்தான்.”
عربي تفسیرونه:
اَیَعِدُكُمْ اَنَّكُمْ اِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَّعِظَامًا اَنَّكُمْ مُّخْرَجُوْنَ ۟
“நீங்கள் மரணித்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால் (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் (கப்ருகளிலிருந்து உயிருடன்) வெளியேற்றப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி கூறுகிறாரா?”
عربي تفسیرونه:
هَیْهَاتَ هَیْهَاتَ لِمَا تُوْعَدُوْنَ ۟
நீங்கள் வாக்களிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்! (அது நடக்கவே நடக்காது என்றும் அவர்கள் கூறினர்).
عربي تفسیرونه:
اِنْ هِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنْیَا نَمُوْتُ وَنَحْیَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِیْنَ ۟
இது (-இந்த வாழ்க்கை) நமது உலக வாழ்க்கையைத் தவிர (வேறு) இல்லை. (மரணத்திற்குப் பின் ஒரு புதிய வாழ்க்கை இல்லை) நாம் இறந்து விடுகிறோம். நாம் வாழ்கிறோம். (நம்மில் சிலர் இறந்துவிட புதிதாக சிலர் பிறந்து வாழ்கின்றனர்.) நாம் (மறுமையில்) எழுப்பப்படுபவர்கள் அல்லர்.
عربي تفسیرونه:
اِنْ هُوَ اِلَّا رَجُلُ ١فْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا وَّمَا نَحْنُ لَهٗ بِمُؤْمِنِیْنَ ۟
அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டிய ஒரு மனிதரே தவிர (தூதர்) இல்லை. அவரை நம்பிக்கை கொண்டவர்களாக (-உண்மைப்படுத்தியவர்களாக) நாங்கள் இல்லை.
عربي تفسیرونه:
قَالَ رَبِّ انْصُرْنِیْ بِمَا كَذَّبُوْنِ ۟
அவர் கூறினார்: என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால் (அவர்களுக்கு எதிராக) நீ எனக்கு உதவுவாயாக!
عربي تفسیرونه:
قَالَ عَمَّا قَلِیْلٍ لَّیُصْبِحُنَّ نٰدِمِیْنَ ۟ۚ
(அல்லாஹ்) கூறினான்: விரைவில் அவர்கள் கைசேதப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.
عربي تفسیرونه:
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ بِالْحَقِّ فَجَعَلْنٰهُمْ غُثَآءً ۚ— فَبُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
உண்மையில் அவர்களை பெரிய சப்தம் பிடித்துக் கொண்டது. அவர்களை (எதற்கும் பயனற்ற) நுரைகளாக (அதைப் போன்று) மாற்றி விடுவோம். அநியாயக்கார கூட்டம் தொலைந்து போகட்டும்.
عربي تفسیرونه:
ثُمَّ اَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قُرُوْنًا اٰخَرِیْنَ ۟ؕ
பிறகு, அவர்களுக்குப் பின்னர் வேறு (புதிய பல) தலைமுறைகளை நாம் உருவாக்கினோம்.
عربي تفسیرونه:
 
د معناګانو ژباړه سورت: مؤمنون
د سورتونو فهرست (لړلیک) د مخ شمېره
 
د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - د ژباړو فهرست (لړلیک)

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

تړل