Check out the new design

पवित्र कुरआनको अर्थको अनुवाद - तमिल अनुवाद : उमर शरीफ * - अनुवादहरूको सूची

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

अर्थको अनुवाद सूरह: हज्ज   आयत:
یٰۤاَیُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ— اِنَّ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ یَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ ؕ— وَاِنْ یَّسْلُبْهُمُ الذُّبَابُ شَیْـًٔا لَّا یَسْتَنْقِذُوْهُ مِنْهُ ؕ— ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ ۟
மக்களே! ஓர் உதாரணம் (உங்களுக்கு) விவரிக்கப்படுகிறது. ஆக, அதை செவிமடுத்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவை ஓர் ஈயையும் அறவே படைக்க மாட்டார்கள், அவர்கள் (எல்லோரும்) அதற்கு ஒன்று சேர்ந்தாலும் சரி. இன்னும், அவர்களிடமிருந்து அந்த ஈ எதையும் பறித்தாலும் அதை அதனிடமிருந்து அவர்கள் பாதுகாத்து பிடுங்கவும் மாட்டார்கள். (அவர்களின்) கடவுள்களும் (அவற்றால்) தேடப்படுகின்றதும் (-ஈயும்) பலவீனமானவர்களே!
अरबी व्याख्याहरू:
مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ؕ— اِنَّ اللّٰهَ لَقَوِیٌّ عَزِیْزٌ ۟
அவர்கள் அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்குத் தக்கவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா வலிமையுடையவன் மிகைத்தவன் ஆவான்.
अरबी व्याख्याहरू:
اَللّٰهُ یَصْطَفِیْ مِنَ الْمَلٰٓىِٕكَةِ رُسُلًا وَّمِنَ النَّاسِ ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟ۚ
அல்லாஹ் வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்வு செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
अरबी व्याख्याहरू:
یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟
அவன், அவர்களுக்கு முன்னர் இருந்தவற்றையும் அவர்களுக்கு பின்னர் இருப்பவற்றையும் நன்கறிவான். இன்னும், அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் திருப்பப்படுகின்றன.
अरबी व्याख्याहरू:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَاعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَیْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
நம்பிக்கையாளர்களே! (தொழுகையில்) குனியுங்கள்! இன்னும், சிரம்பணியுங்கள்! இன்னும், உங்கள் இறைவனை வணங்குங்கள்! இன்னும், நன்மை செய்யுங்கள்! நீங்கள் (அவற்றின் மூலம்) வெற்றி அடைவதற்காக.
अरबी व्याख्याहरू:
وَجَاهِدُوْا فِی اللّٰهِ حَقَّ جِهَادِهٖ ؕ— هُوَ اجْتَبٰىكُمْ وَمَا جَعَلَ عَلَیْكُمْ فِی الدِّیْنِ مِنْ حَرَجٍ ؕ— مِلَّةَ اَبِیْكُمْ اِبْرٰهِیْمَ ؕ— هُوَ سَمّٰىكُمُ الْمُسْلِمِیْنَ ۙ۬— مِنْ قَبْلُ وَفِیْ هٰذَا لِیَكُوْنَ الرَّسُوْلُ شَهِیْدًا عَلَیْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ ۖۚ— فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِ ؕ— هُوَ مَوْلٰىكُمْ ۚ— فَنِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟۠
அல்லாஹ்வின் பாதையில் (இணை வைப்பவர்களிடம்) முழுமையாக போரிடுங்கள். அவன்தான் உங்களைத் தேர்ந்தெடுத்தான். இன்னும், உங்கள் மீது (உங்கள்) மார்க்கத்தில் எவ்வித நெருக்கடியையும் அவன் வைக்கவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பற்றிப் பிடியுங்கள். அவன் இதற்கு முன்னரும் (-முந்தைய வேதங்களிலும்) இதிலும் (-குர்ஆனிலும்) உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என்று பெயர் வைத்தான். காரணம், தூதர் (-முஹம்மத்) உங்கள் மீது சாட்சியாளராக இருப்பதற்காகவும் நீங்கள் மக்கள் மீது சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும் (அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்து, முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்). ஆக, தொழுகையை நிலைநிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தைக் கொடுங்கள்! இன்னும், அல்லாஹ்வை உறுதியாக பற்றிப்பிடியுங்கள்! அவன்தான் உங்கள் பொறுப்பாளன் ஆவான். ஆக, அவனே சிறந்த பொறுப்பாளன். இன்னும், அவனே சிறந்த உதவியாளன் ஆவான்.
अरबी व्याख्याहरू:
 
अर्थको अनुवाद सूरह: हज्ज
सूरहरूको सूची पृष्ठ संख्या
 
पवित्र कुरआनको अर्थको अनुवाद - तमिल अनुवाद : उमर शरीफ - अनुवादहरूको सूची

यसलाई शेख उमर शरीफ बिन अब्दुस्सलामले अनुवाद गरेका हुन् ।

बन्द गर्नुहोस्