Check out the new design

पवित्र कुरअानको अर्थको अनुवाद - पवित्र कुर्आनको संक्षिप्त व्याख्याको तमिल भाषामा अनुवाद । * - अनुवादहरूको सूची


अर्थको अनुवाद सूरः: न्नहल   श्लोक:
ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِیْنَ عَمِلُوا السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْۤا اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
16.119. பின்பு -தூதரே!- எவர்கள் விளைவைக் குறித்து அறியாமையினால் பாவங்கள் செய்து - அவர்கள் வேண்டுமென்றே செய்திருந்தாலும் - பின்னர் அல்லாஹ்வின்பால் மீண்டு மன்னிப்புக்கோரி தங்களின் தீய செயல்களைச் சீர்படுத்திக் கொண்டவர்களை, நிச்சயமாக உம் இறைவன் அவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
अरबी व्याख्याहरू:
اِنَّ اِبْرٰهِیْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِیْفًا ؕ— وَلَمْ یَكُ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۙ
16.120. நிச்சயமாக இப்ராஹீம் நன்மையான பண்புகளை ஒருசேரப் பெற்றவராகவும் தம் இறைவனுக்கு தொடராக அடிபணியக்கூடியவராகவும் எல்லா மார்க்கங்களையும் விட்டுவிட்டு இஸ்லாத்தின்பால் முழுமையாக சாய்ந்தவராகவும் இருந்தார். அவர் ஒருபோதும் இணைவைப்பாளராக இருந்ததில்லை.
अरबी व्याख्याहरू:
شَاكِرًا لِّاَنْعُمِهٖ ؕ— اِجْتَبٰىهُ وَهَدٰىهُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
16.121. அவர் அல்லாஹ் அவர் மீது அருளிய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடியவராகவும் இருந்தார். அவன் அவரை தன் தூதுப் பணிக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இஸ்லாம் என்னும் நேரான மார்க்கத்தின்பால் அவன் அவருக்கு வழிகாட்டினான்.
अरबी व्याख्याहरू:
وَاٰتَیْنٰهُ فِی الدُّنْیَا حَسَنَةً ؕ— وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟ؕ
16.122. நாம் அவருக்கு இவ்வுலகில் தூதுத்துவத்தையும் நல்ல பெயரையும் நல்ல மகனையும் வழங்கினோம். நிச்சயமாக அவர் மறுமையில் சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட்ட நல்லவர்களில் ஒருவராக இருப்பார்.
अरबी व्याख्याहरू:
ثُمَّ اَوْحَیْنَاۤ اِلَیْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
16.123. பின்னர் -தூதரே!- ஏகத்துவத்திலும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகிக்கொள்வதிலும் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அவனது மார்க்கத்தின் படி செயற்படுவதிலும் இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக என்று உமக்கு வஹி அறிவித்தோம். எல்லா மார்க்கங்களையும் விட்டு விலகி இஸ்லாத்தின்பால் முற்றிலும் சாய்ந்தவராக அதனைப் பின்பற்றுவீராக. இணைவைப்பாளர்கள் கூறுவதுபோல அவர் ஒருபோதும் இணைவைப்பாளராக இருந்ததில்லை. மாறாக அல்லாஹ் ஒருவனையே வணங்கக்கூடியவராக இருந்தார்.
अरबी व्याख्याहरू:
اِنَّمَا جُعِلَ السَّبْتُ عَلَی الَّذِیْنَ اخْتَلَفُوْا فِیْهِ ؕ— وَاِنَّ رَبَّكَ لَیَحْكُمُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
16.124. சனிக்கிழமையைக் கண்ணியப்படுத்துவது அதில் கருத்து வேறுபட்ட யூதர்கள் மீதே கடமையாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தமது தொழில்களில் இருந்து ஒதுங்கி வணக்கவழிபாடுகளில் ஈடுபடுமாறு ஏவப்பட்டிருந்த வெள்ளிக் கிழமையை அவர்கள் தவறவிட்டதனால் சனிக்கிழமையில் தமது தொழில்களை விட்டுவிட்டு வணக்கவழிபாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதற்கே அது கடமையாக்கப்பட்டது. -தூதரே!- நிச்சயமாக மறுமை நாளில் உம் இறைவன் கருத்து வேறுபட்டவர்களிடையே, அவர்கள் எதில் கருத்து வேறுபட்டார்களோ அவற்றில் அவன் தீர்ப்பளிப்பான். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்குவான்.
अरबी व्याख्याहरू:
اُدْعُ اِلٰی سَبِیْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ ؕ— اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
16.125. -தூதரே!- நீரும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களும் இஸ்லாம் என்னும் மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுக்கப்படுபவரின் புரிதல், கட்டுப்படுதல் மற்றும் சூழ்நிலைக்கேற்பவும், அச்சமூட்டுதல், ஆர்வமூட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுரையைக்கொண்டும் மக்களை அழையுங்கள். அவர்களுடன் அழகிய வார்த்தை, சிந்தனை, ஒழுக்கம் உடைய முறையில் விவாதம் செய்யுங்கள். மக்களை நேர்வழியில் செலுத்துவது உமது பணியல்ல. அவர்களுக்கு எடுத்துரைப்பதே உம்மீதுள்ள பணியாகும். நிச்சயமாக இஸ்லாம் என்னும் மார்க்கத்தை விட்டு வழிதவறியவர்களையும் நேர்வழியில் உள்ளவர்களையும் உம் இறைவன் நன்கறிவான். அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்.
अरबी व्याख्याहरू:
وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا بِمِثْلِ مَا عُوْقِبْتُمْ بِهٖ ؕ— وَلَىِٕنْ صَبَرْتُمْ لَهُوَ خَیْرٌ لِّلصّٰبِرِیْنَ ۟
16.126. நீங்கள் உங்கள் எதிரிகளைத் தண்டிக்க விரும்பினால் அவர்களை உங்களுளுக்கு இழைக்கப்பட்ட நோவினையின் அளவுக்கே அதிகரிப்பின்றி தண்டியுங்கள். நீங்கள் அவர்களைத் தண்டிக்க சக்தி பெற்றிருந்தும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால், நிச்சயமாக அது உங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு தண்டித்து நீதி பெறுவதை விட சிறந்ததாகும்.
अरबी व्याख्याहरू:
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَلَا تَكُ فِیْ ضَیْقٍ مِّمَّا یَمْكُرُوْنَ ۟
16.127. -தூதரே!- அவர்கள் தரும் தொல்லைகளை பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. அல்லாஹ்வே உமக்கு பொறுமையை மேற்கொள்வதற்கான பாக்கியம் அளிக்க முடியும். நிராகரிப்பாளர்கள் உம்மைப் புறக்கணிப்பதைக் கண்டு நீர் கவலை கொள்ளாதீர். அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளால் உமது உள்ளம் நெருக்கடிக்குள்ளாகிவிட வேண்டாம்.
अरबी व्याख्याहरू:
اِنَّ اللّٰهَ مَعَ الَّذِیْنَ اتَّقَوْا وَّالَّذِیْنَ هُمْ مُّحْسِنُوْنَ ۟۠
16.128. நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு தவிர்ந்து அவனை அஞ்சுவோருடனும் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி நற்செயல் புரிபவர்களுடனும் இருக்கின்றான். அவர்களை உறுதிப்படுத்தி உதவி செய்வதன் மூலம் அவன் அவர்களோடு இருக்கின்றான்.
अरबी व्याख्याहरू:
यस पृष्ठको अायतहरूका लाभहरूमध्येबाट:
• اقتضت رحمة الله أن يقبل توبة عباده الذين يعملون السوء من الكفر والمعاصي، ثم يتوبون ويصلحون أعمالهم، فيغفر الله لهم.
1. நிராகரிப்பு, பாவங்கள் ஆகிய தீமைகளைச் செய்துவிட்டு திருந்தி தமது செயல்களை சீர்திருத்திக்கொள்ளும் தனது அடியார்களின் பாவமன்னிப்பை ஏற்று அவர்களை மன்னிப்பது அல்லாஹ்வின் அருளின் வெளிப்பாடாகும்.

• يحسن بالمسلم أن يتخذ إبراهيم عليه السلام قدوة له.
2. இப்ராஹீம் அலை அவர்களை முஸ்லிம் தனது முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதே சிறந்ததாகும்.

• على الدعاة إلى دين الله اتباع هذه الطرق الثلاث: الحكمة، والموعظة الحسنة، والمجادلة بالتي هي أحسن.
3. அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைப்போர் பின்வரும் மூன்று வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு நடத்தல், அழகிய உபதேசம், அழகிய முறையில் விவாதம் செய்தல்.

• العقاب يكون بالمِثْل دون زيادة، فالمظلوم منهي عن الزيادة في عقوبة الظالم.
4. தண்டனை குற்றத்துக்கு சமமாகவே இருக்க வேண்டும். அதிகரிக்கக் கூடாது. அநீதி இழைக்கப்பட்டவன் அநீதியிழைத்தவனை கூடுதலாகத் தண்டிப்பது தடுக்கப்பட்டதாகும்.

 
अर्थको अनुवाद सूरः: न्नहल
अध्यायहरूको (सूरःहरूको) सूची رقم الصفحة
 
पवित्र कुरअानको अर्थको अनुवाद - पवित्र कुर्आनको संक्षिप्त व्याख्याको तमिल भाषामा अनुवाद । - अनुवादहरूको सूची

मर्क्ज तफ्सीर लिद्दिरासात अल-कुर्आनियह द्वारा प्रकाशित ।

बन्द गर्नुस्