Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ് * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

പരിഭാഷ അദ്ധ്യായം: അഅ്റാഫ്   ആയത്ത്:
فَاِذَا جَآءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَنَا هٰذِهٖ ۚ— وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّطَّیَّرُوْا بِمُوْسٰی وَمَنْ مَّعَهٗ ؕ— اَلَاۤ اِنَّمَا طٰٓىِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
ஆக, அவர்களுக்கு இன்பம் வந்தால் இது எங்களுக்கு (வரவேண்டியதுதான்) என்று கூறுவார்கள். ஒரு துன்பம் அவர்களை அடைந்தால் “மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் துர்ச்சகுணமாக எண்ணுவார்கள்” அறிந்து கொள்ளுங்கள்! “அவர்களுடைய துர்ச்சகுணமெல்லாம் அல்லாஹ்விடம்தான் உள்ளது. (நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்துதான் நடக்கிறது.) எனினும், அவர்களில் அதிகமானவர்கள் (எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடக்கிறது என்பதை) அறியமாட்டார்கள்.”
അറബി തഫ്സീറുകൾ:
وَقَالُوْا مَهْمَا تَاْتِنَا بِهٖ مِنْ اٰیَةٍ لِّتَسْحَرَنَا بِهَا ۙ— فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟
(ஃபிர்அவ்னின் சமுதாயத்தினர் மூஸாவை நோக்கி) கூறினார்கள்: “நீர் எந்த அத்தாட்சியை எங்களிடம் கொண்டு வந்தாலும், - அதன் மூலம் எங்களை ஏமாற்றுவதற்காக - நாங்கள் உம்மை நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.”
അറബി തഫ്സീറുകൾ:
فَاَرْسَلْنَا عَلَیْهِمُ الطُّوْفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰیٰتٍ مُّفَصَّلٰتٍ ۫— فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
ஆகவே, அவர்கள் மீது புயல் காற்றை, வெட்டுக்கிளிகளை, பேன்களை, தவளைகளை, இரத்தத்தை தெளிவான அத்தாட்சிகளாக அனுப்பினோம். ஆக, அவர்கள் பெருமையடித்(து புறக்கணித்)தனர். இன்னும், குற்றம் புரிகின்ற மக்களாக இருந்தனர்.
അറബി തഫ്സീറുകൾ:
وَلَمَّا وَقَعَ عَلَیْهِمُ الرِّجْزُ قَالُوْا یٰمُوْسَی ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ ۚ— لَىِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ
அவர்கள் மீது தண்டனை நிகழ்ந்தபோது, அவர்கள் கூறினார்கள்: “மூஸாவே! உம் இறைவனிடம் -அவன் உம்மிடம் வாக்குறுதி கொடுத்த பிரகாரம் (அதை நிறைவேற்றக் கோரி) - எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக. எங்களை விட்டு தண்டனையை நீர் நீக்கினால் உம்மை நிச்சயம் நம்பிக்கை கொள்வோம்; இன்னும், இஸ்ரவேலர்களை உம்முடன் நிச்சயம் அனுப்புவோம்.”
അറബി തഫ്സീറുകൾ:
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ اِلٰۤی اَجَلٍ هُمْ بٰلِغُوْهُ اِذَا هُمْ یَنْكُثُوْنَ ۟
ஆக, ஒரு தவணை(க்குப் பின் மறு தவணை) வரை நாம் அவர்களை விட்டு தண்டனையை நீக்கி, அதை (-அத்தவணையின் இறுதியை) அவர்கள் அடையும்போது அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) முறித்து விடுகிறார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
فَانْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ فِی الْیَمِّ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟
ஆகவே, நிச்சயமாக அவர்கள் நம் அத்தாட்சிகளை பொய்ப்பித்ததாலும் அவற்றில் கவனமற்றவர்களாக இருந்ததாலும் அவர்களை பழிவாங்கினோம். ஆக, அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம்.
അറബി തഫ്സീറുകൾ:
وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِیْنَ كَانُوْا یُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ— وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰی عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬— بِمَا صَبَرُوْا ؕ— وَدَمَّرْنَا مَا كَانَ یَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا یَعْرِشُوْنَ ۟
இன்னும், பலவீனமாகக் கருதப்பட்டுக் கொண்டிருந்த சமுதாயத்தை நாம் அபிவிருத்தி செய்த (ஷாம் தேச) பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும், மேற்குப் பகுதிகளுக்கும் வாரிசாக்கினோம். ஆகவே, இஸ்ரவேலர்கள் மீது, - அவர்கள் பொறுமையாக இருந்ததால் - உம் இறைவனின் மிக அழகிய வாக்கு முழுமையடைந்தது. ஃபிர்அவ்னும் அவனுடைய சமுதாயமும் செய்து கொண்டிருந்ததையும் (-விவசாயங்களையும்) அவர்கள் உயரமாக கட்டிக் கொண்டிருந்ததையும் (-மாளிகைகளையும் தரைமட்டமாக) அழித்தோம்.
അറബി തഫ്സീറുകൾ:
 
പരിഭാഷ അദ്ധ്യായം: അഅ്റാഫ്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ് - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

ശൈഖ് ഉമർ ശരീഫ് ബിൻ അബ്ദുസ്സലാം വിവർത്തനം.

അവസാനിപ്പിക്കുക