Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ് * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

പരിഭാഷ അദ്ധ്യായം: ബഖറഃ   ആയത്ത്:
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِیْعًا ۚ— فَاِمَّا یَاْتِیَنَّكُمْ مِّنِّیْ هُدًی فَمَنْ تَبِعَ هُدَایَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். ஆக, என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும். ஆக, எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் மீது அச்சமில்லை. இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
இன்னும், எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.”
അറബി തഫ്സീറുകൾ:
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِیْۤ اُوْفِ بِعَهْدِكُمْ ۚ— وَاِیَّایَ فَارْهَبُوْنِ ۟
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள் மீது நான் அருள் புரிந்த என் அருளை நினைவு கூருங்கள். இன்னும், எனது உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். நான் உங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுவேன். இன்னும், என்னையே நீங்கள் பயப்படுங்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَاٰمِنُوْا بِمَاۤ اَنْزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُوْنُوْۤا اَوَّلَ كَافِرٍ بِهٖ ۪— وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؗ— وَّاِیَّایَ فَاتَّقُوْنِ ۟
இன்னும், உங்களிடமுள்ளதை உண்மைப்படுத்தக்கூடியதாக நான் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும் இதை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! இன்னும், என் வசனங்களுக்குப் பகரமாக (அவற்றில் கூறப்பட்ட சட்டங்களை மறைப்பதற்காக அல்லது, மாற்றுவதற்காக) சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள்! இன்னும், நீங்கள் என்னையே அஞ்சுங்கள்!
അറബി തഫ്സീറുകൾ:
وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
இன்னும், உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்! இன்னும், நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில் உண்மையை மறைக்காதீர்கள்!
അറബി തഫ്സീറുകൾ:
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِیْنَ ۟
இன்னும், (இஸ்லாமை ஏற்று முஸ்லிம்களுடன்) தொழுகையை நிலைநிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள்! இன்னும், (தொழுகையில்) குனி(ந்து பணி)பவர்களுடன் (சேர்ந்து) குனி(ந்து பணி)யுங்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
நீங்களோ வேதத்தை ஓதுபவர்களாக இருக்கும் நிலையில் உங்களை நீங்கள் மறந்துவிட்டு, மக்களுக்கு (மட்டும்) நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
അറബി തഫ്സീറുകൾ:
وَاسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ— وَاِنَّهَا لَكَبِیْرَةٌ اِلَّا عَلَی الْخٰشِعِیْنَ ۟ۙ
இன்னும், நீங்கள் பொறுமையாக இருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். இன்னும், நிச்சயமாக அது (-தொழுகை) பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர.
അറബി തഫ്സീറുകൾ:
الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟۠
(உள்ளச்சமுடைய) அவர்கள் “நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்பார்கள் என்றும் அவனிடமே நிச்சயமாக அவர்கள் திரும்புவார்கள்” என்றும் நம்புவார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
இஸ்ராயீலின் சந்ததிகளே! நான் உங்கள் மீது அருள்புரிந்த என் அருளையும் நிச்சயமாக நான் உலகத்தார்களைவிட உங்களை மேன்மைப்படுத்தியதையும் நீங்கள் நினைவு கூருங்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا یُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்! (அதில்) ஓர் ஆன்மா (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் பலனளிக்காது. இன்னும் அதனிடமிருந்து பரிந்துரை ஏற்கப்படாது. இன்னும் அதனிடமிருந்து மீட்புத் தொகை வாங்கப்படாது. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
 
പരിഭാഷ അദ്ധ്യായം: ബഖറഃ
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ് - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

ശൈഖ് ഉമർ ശരീഫ് ബിൻ അബ്ദുസ്സലാം വിവർത്തനം.

അവസാനിപ്പിക്കുക