Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: സ്സുഖ്റുഫ്   ആയത്ത്:
وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِ ؕ— هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
43.61. உலக முடிவின் இறுதியில் ஈஸா இறங்கும் போது நிச்சயமாக அவர் மறுமையின் பெரிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கின்றார். நிச்சயமாக மறுமை நிகழும் என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். அல்லாஹ்விடமிருந்து நான் கொண்டுவந்துள்ளவற்றில் என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களிடம் கொண்டுவந்துள்ளது எவ்வித கோணலுமற்ற நேரான வழியாகும்.
അറബി തഫ്സീറുകൾ:
وَلَا یَصُدَّنَّكُمُ الشَّیْطٰنُ ۚ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
43.62. ஷைத்தான் உங்களை வழிகெடுத்து, ஏமாற்றி நேரான வழியைவிட்டும் உங்களை திசைதிருப்பிவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான்.
അറബി തഫ്സീറുകൾ:
وَلَمَّا جَآءَ عِیْسٰی بِالْبَیِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَیِّنَ لَكُمْ بَعْضَ الَّذِیْ تَخْتَلِفُوْنَ فِیْهِ ۚ— فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟
43.63. ஈஸா தம் சமூகத்திடம் நிச்சயமாக தான் தூதர் என்பதற்கான தெளிவான ஆதாரங்களைக் கொண்டுவந்தபோது அவர்களிடம் கூறினார்: “நான் அல்லாஹ்விடமிருந்து உங்களிடம் ஞானத்தைக் கொண்டுவந்துள்ளேன். நீங்கள் கருத்துவேறுபாடு கொண்ட உங்களின் உலக விவகாரங்களில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றேன். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடும் மற்றும் உங்களைத் தடுக்கும் விஷயத்தில் எனக்குக் கட்டுப்படுங்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
اِنَّ اللّٰهَ هُوَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ— هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
43.64. நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். அவனைத் தவிர எங்களுக்கு வேறு இறைவன் இல்லை. எனவே வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே உரித்தாக்குங்கள். இந்த ஏகத்துவமே எவ்வித கோணலுமற்ற நேரான வழியாகும்.
അറബി തഫ്സീറുകൾ:
فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَیْنِهِمْ ۚ— فَوَیْلٌ لِّلَّذِیْنَ ظَلَمُوْا مِنْ عَذَابِ یَوْمٍ اَلِیْمٍ ۟
43.65. கிறிஸ்தவப் பிரிவினர் ஈஸாவின் விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் “அவர்தான் இறைவன்” என்று கூறினார்கள். இன்னும் சிலர் ”இறைவனின் குமாரன்” என்றார்கள். இன்னும் சிலர் “அவரும் அவரது அன்னையும் இரு கடவுள்கள்” என்று கூறினார்கள். ஈஸாவை இறைவன் என்றோ இறைவனின் மகன் என்றோ மூவரில் மூன்றாமவர் என்றோ கூறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு மறுமை நாளில் காத்திருக்கும் நோவினை தரும் வேதனையின் கேடு உண்டு.
അറബി തഫ്സീറുകൾ:
هَلْ یَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِیَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
43.66.ஈஸாவின் விஷயத்தில் கருத்துவேறுபாடுகொண்ட இந்த கூட்டத்தினர்கள் தாங்களே உணராதவிதத்தில் திடீரென மறுமை நாள் தங்களிடம் வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அவர்கள் நிராகரித்த நிலையிலேயே அது அவர்களிடம் வந்துவிட்டால், வேதனைமிக்க தண்டனையே அவர்களின் இருப்பிடமாகும்.
അറബി തഫ്സീറുകൾ:
اَلْاَخِلَّآءُ یَوْمَىِٕذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِیْنَ ۟ؕ۠
43.67. நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் மறுமைநாளில் ஒருவருக்கொருவர் எதிரிகளாகி விடுவார்கள். ஆயினும் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களைத்தவிர. அவர்களின் நட்பு என்றென்றும் துண்டிக்கப்படாமல் நிலைத்திருக்கக்கூடியது.
അറബി തഫ്സീറുകൾ:
یٰعِبَادِ لَا خَوْفٌ عَلَیْكُمُ الْیَوْمَ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ ۟ۚ
43.68. அல்லாஹ் அவர்களிடம் கூறுவான்: “என் அடியார்களே! உங்களுக்கு எதிர்காலத்தில் நிகழக்கூடியதை எண்ணி இன்று எந்த அச்சமும் இல்லை. உங்களுக்குத் தவறிய உலக பாக்கியங்களுக்காக நீங்கள் கவலைப்படவும்மாட்டீர்கள்.”
അറബി തഫ്സീറുകൾ:
اَلَّذِیْنَ اٰمَنُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا مُسْلِمِیْنَ ۟ۚ
43.69. அவர்கள் தங்களின் தூதர் மீது இறக்கப்பட்ட குர்ஆனை ஈமான் கொண்டார்கள். குர்ஆனுக்குக் கட்டுப்பட்டு அதனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அது தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருப்பவர்களாக இருந்தார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ ۟
43.70. நீங்களும் உங்களைப் போன்று நம்பிக்கை கொண்டவர்களும் உங்களுக்குக் கிடைக்கும், என்றும் முடிவடையாத நிலையான இன்பத்தினால் மகிழ்வுற்றவர்களாக சுவனத்தில் நுழைந்துவிடுங்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
یُطَافُ عَلَیْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ ۚ— وَفِیْهَا مَا تَشْتَهِیْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْیُنُ ۚ— وَاَنْتُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟ۚ
43.71. அங்கு பணிவிடையாளர்கள் தங்கப் பாத்திரங்களையும், கிண்ணங்களையும் கொண்டு சுற்றிவருவார்கள். சுவனத்தில் உங்கள் மனம் விரும்பும், பார்ப்பதால் கண்களுக்குக் குளிர்ச்சி ஏற்படும் அனைத்தும் உண்டு. நீங்கள் அங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள். அங்கிருந்து ஒருபோதும் வெளியேறமாட்டீர்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَتِلْكَ الْجَنَّةُ الَّتِیْۤ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
43.72. உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட அந்த சுவனத்தைத்தான் உங்களின் செயல்களுக்காக அல்லாஹ் உங்களுக்கு அவனது பேருபகாரத்தினால் சொந்தமாக்குவான்.
അറബി തഫ്സീറുകൾ:
لَكُمْ فِیْهَا فَاكِهَةٌ كَثِیْرَةٌ مِّنْهَا تَاْكُلُوْنَ ۟
43.73. அங்கு உங்களுக்கு என்றும் முடிவடையாத ஏராளமான பழங்கள் உண்டு. அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• نزول عيسى من علامات الساعة الكبرى.
1. ஈஸாவின் மீள்வருகை மறுமை நாளின் பெரிய அடையாளங்களில் ஒன்றாகும்.

• انقطاع خُلَّة الفساق يوم القيامة، ودوام خُلَّة المتقين.
2. மறுமையில் பாவிகளின் நட்பு அறுந்துவிடும். இறையச்சமுடையோரின் நட்பு நீடிக்கும்.

• بشارة الله للمؤمنين وتطمينه لهم عما خلفوا وراءهم من الدنيا وعما يستقبلونه في الآخرة.
3.நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் உலகில் விட்டுச்சென்றவை பற்றியும் மறுமையில் எதிர்நோக்க இருப்பவை பற்றியும் அல்லாஹ் நன்மாராயமும் ஆறதலும் கூறுகின்றான்.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: സ്സുഖ്റുഫ്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അവസാനിപ്പിക്കുക