Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: ഖസസ്   ആയത്ത്:
وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟ؕ
28.51. இணைவைப்பாளர்களுக்கும் யூதர்களுக்கும் இஸ்ரேவேலர்களின் மக்களான முந்தைய சமூகங்களின் சம்பவங்களை கூறியும், தமது தூதர்களை நிராகரித்த போது அவர்களுக்கு இறக்கிய வேதனையையும் நாம் சென்றடையச் செய்தோம். அதன் மூலம் அவர்கள் படிப்பினை பெற்று, நம்பிக்கைகொண்டு முன்னோர்களுக்கு நேர்ந்தது போல் அவர்களுக்கும் நேர்ந்துவிடுவதைத் தவிர்ப்பதற்காகத்தான்.
അറബി തഫ്സീറുകൾ:
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ یُؤْمِنُوْنَ ۟
28.52. அல்குர்ஆன் இறங்குவதற்கு முன்னரே தவ்ராத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்தவர்கள்தாம் தங்களின் வேதங்களில் குர்ஆனின் செய்திகளை, பண்புகளைக் குறித்து காண்பதால் குர்ஆனின்மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَاِذَا یُتْلٰی عَلَیْهِمْ قَالُوْۤا اٰمَنَّا بِهٖۤ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّنَاۤ اِنَّا كُنَّا مِنْ قَبْلِهٖ مُسْلِمِیْنَ ۟
28.53. அவர்களிடம் இந்தக் குர்ஆன் எடுத்துரைக்கப்பட்டால் கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் அதனை நம்பிக்கைகொண்டோம். இது எங்கள் இறைவனிடமிருந்து இறங்கிய சந்தேகமற்ற உண்மையாகும். நாங்கள் இந்தக் குர்ஆனுக்கு முன்னரே அவருக்கு முன்னர் தூதர்கள் கொண்டுவந்ததன் மீது நம்பிக்கைகொண்டு முஸ்லிம்களாக -கட்டுப்பட்டவர்களாக- இருந்தோம்.
അറബി തഫ്സീറുകൾ:
اُولٰٓىِٕكَ یُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَیْنِ بِمَا صَبَرُوْا وَیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟
28.54. மேற்கூறப்பட்ட பண்புகளை உடையவர்கள் தங்களின் வேதத்தின் மீது நம்பிக்கைகொண்டு பொறுமையாக இருந்ததனாலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதும் அவரை நம்பிக்கைகொண்டதனாலும் அவர்களின் செயல்களுக்கு அல்லாஹ் இருதடவை அவர்களுக்கு கூலியை வழங்குவான். அவர்கள் தாங்கள் செய்யும் நற்செயல்களின் நன்மைகளால் தாங்கள் சம்பாதித்த பாவங்களை அழிக்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நன்மையான விஷயங்களில் செலவும் செய்கிறார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ؗ— سَلٰمٌ عَلَیْكُمْ ؗ— لَا نَبْتَغِی الْجٰهِلِیْنَ ۟
28.55. நம்பிக்கைகொண்ட இந்த வேதக்காரர்கள் வீணான வார்த்தைகளைச் செவியுற்றால் அவற்றைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிடுகிறார்கள். அவர்கள் அவ்வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்களிடம் கூறுகிறார்கள்: “நாங்கள் செய்த செயல்களுக்கான கூலி எங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் செய்த செயல்களுக்கான கூலி உங்களுக்குக் கிடைக்கும். நாங்கள் உங்களை ஏசவோ, துன்புறுத்தவோ மாட்டோம். மார்க்கத்துக்கும் உலகுக்கும் பாதிப்பு, தீங்கு ஏற்படும் என்பதால் மூடர்களுடன் நட்பு கொள்வதை நாங்கள் விரும்புவதில்லை.
അറബി തഫ്സീറുകൾ:
اِنَّكَ لَا تَهْدِیْ مَنْ اَحْبَبْتَ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ۚ— وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
28.56. -தூதரே!- அபூ தாலிப் போன்ற நீர் விரும்பியவர்களுக்கு நிச்சயமாக உம்மால் ஈமானின்பால் நேர்வழியை அடையவைக்க முடியாது. ஆனால் அல்லாஹ் மட்டுமே தான் நாடியோருக்கு நேர்வழியை அடையவைக்கிறான். நேரானபாதையின் பால் நேர்வழிபெற்றவர்கள் என தனது அறிவில் ஏற்கனவே முடிவாகியுள்ளவர்களைப் பற்றி அவன் நன்கறிந்தவன்.
അറബി തഫ്സീറുകൾ:
وَقَالُوْۤا اِنْ نَّتَّبِعِ الْهُدٰی مَعَكَ نُتَخَطَّفْ مِنْ اَرْضِنَا ؕ— اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا یُّجْبٰۤی اِلَیْهِ ثَمَرٰتُ كُلِّ شَیْءٍ رِّزْقًا مِّنْ لَّدُنَّا وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
28.57. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் நம்பிக்கைகொள்ளாமல், இஸ்லாத்தை பின்பற்றாமல் இருப்பதற்கு பின்வருமாறு சாக்குப்போக்குக் கூறுகிறார்கள்: “நாங்கள் நீர் கொண்டுவந்த இஸ்லாத்தைப் பின்பற்றினால் எங்களின் நாட்டிலிருந்து எதிரிகள் எம்மை விரைவாக தூக்கிஎறிந்து விடுவார்கள்.” இந்த இணைவைப்பாளர்களுக்கு பாதுகாப்பான பூமியை நாம் வழங்கவில்லையா? அங்கு அநியாயம் செய்வதோ இரத்தம் ஓட்டுவதோ தடுக்கப்பட்டுள்ளது. ஏனையவர்கள் அவர்களைத் தாக்குவார்கள் என்ற பயமின்றி உள்ளார்கள். நம்மிடமிருந்துள்ள வாழ்வாதாரமாக எல்லாவற்றின் விளைச்சல்களையும் அங்கு நாம் கொண்டு வரவில்லையா? அவர்களில் பெரும்பாலானோர் அவனுக்கு நன்றி செலுத்துவதற்கு அல்லாஹ் அவர்களின் மீது பொழிந்த அருட்கொடைகளை அறியாமல் இருக்கிறார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَكَمْ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ بَطِرَتْ مَعِیْشَتَهَا ۚ— فَتِلْكَ مَسٰكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِّنْ بَعْدِهِمْ اِلَّا قَلِیْلًا ؕ— وَكُنَّا نَحْنُ الْوٰرِثِیْنَ ۟
28.58. அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிகெட்டத்தனமாக நடந்துகொண்டு வரம்புமீறி பாவங்களில் ஈடுபட்ட எத்தனையோ ஊர்கள் உள்ளன. அதன் மீது வேதனையை அனுப்பி அதனை அழித்துவிட்டோம். அவை அவர்களின் பாழடைந்த வசிப்பிடங்கள். அவர்களுக்குப் பிறகு அதனை கடந்து செல்லக்கூடியவர்களைத் தவிர அதில் யாரும் பெரிதாக வசிக்கவில்லை. நாமே வானங்கள் பூமி அவற்றில் உள்ளவர்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றோம்.
അറബി തഫ്സീറുകൾ:
وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرٰی حَتّٰی یَبْعَثَ فِیْۤ اُمِّهَا رَسُوْلًا یَّتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِنَا ۚ— وَمَا كُنَّا مُهْلِكِی الْقُرٰۤی اِلَّا وَاَهْلُهَا ظٰلِمُوْنَ ۟
28.59. -தூதரே!- உம் இறைவன் ஊர்களை அதன் பெரிய ஊர்களுக்கு சாக்குபோக்கு சொல்லாமல் இருப்பதற்காகவேண்டி ஒரு தூதரை, உம்மை மக்காவில் அனுப்பியது போன்று, அனுப்பாதவரை அழிக்கக்கூடியவனாக இல்லை. அங்குள்ளவர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கும் வரை நாம் அவர்களை அழிக்க மாட்டோம். நிச்சயமாக நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களின் மூலம் அநியாயம் செய்யக்கூடியவர்களைத்தான் அழிக்கின்றோம்.
അറബി തഫ്സീറുകൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• فضل من آمن من أهل الكتاب بالنبي محمد صلى الله عليه وسلم، وأن له أجرين.
1. வேதக்காரர்களில் நபியவர்களின் மீது நம்பிக்கைகொண்டவர்களின் சிறப்பு தெளிவாகிறது. இவர்களுக்கு இரு கூலிகள் உண்டு.

• هداية التوفيق بيد الله لا بيد غيره من الرسل وغيرهم.
2. நேர்வழி அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. தூதர்களிடமோ மற்றவர்களிடமோ அல்ல.

• اتباع الحق وسيلة للأمن لا مَبْعث على الخوف كما يدعي المشركون.
3. சத்தியத்தை பின்பற்றுவதால் அமைதி கிடைக்கிறது. இணைவைப்பாளர்கள் வாதிடுவது போல அது பயத்தை உண்டாக்கக்கூடியது அல்ல.

• خطر الترف على الفرد والمجتمع.
4. உல்லாச வாழ்வினால் தனிமனிதன் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் பாரதூரமான விளைவு.

• من رحمة الله أنه لا يهلك الناس إلا بعد الإعذار إليهم بإرسال الرسل.
5. அல்லாஹ்வுடைய கருணையின் வெளிப்பாடு, நிச்சயமாக அவன் காரணம் சொல்லாமல் இருப்பதற்காக தூதர்களை அனுப்பாமல் மக்களை அழிப்பதில்லை.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: ഖസസ്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അവസാനിപ്പിക്കുക