Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: ഇസ്റാഅ്   ആയത്ത്:
وَمَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ۚ— وَمَنْ یُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِیَآءَ مِنْ دُوْنِهٖ ؕ— وَنَحْشُرُهُمْ یَوْمَ الْقِیٰمَةِ عَلٰی وُجُوْهِهِمْ عُمْیًا وَّبُكْمًا وَّصُمًّا ؕ— مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ— كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِیْرًا ۟
17.97. யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டினானோ அவரே உண்மையில் நேர்வழி பெற்றவர். -தூதரே!- யாரை அல்லாஹ் கைவிட்டு, வழிகெடுத்துவிடுவானோ அவர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டும், அவர்களை விட்டும் தீங்கினை அகற்றும், அவர்களுக்கு நன்மையளிக்கும் எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர். நாம் மறுமை நாளில் அவர்களை ஒன்றுதிரட்டுவோம். அவர்கள் முகங்குப்புற இழுத்து வரப்படுவார்கள். அவர்களால் பார்க்கவோ பேசவோ கேட்கவோ முடியாது. அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அதன் நெருப்பு தணியும் போதெல்லாம் அதனை இன்னும் கொழுந்துவிட்டு எரியச் செய்வோம்.
അറബി തഫ്സീറുകൾ:
ذٰلِكَ جَزَآؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰیٰتِنَا وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِیْدًا ۟
17.98. அவர்கள் அனுபவிக்கும் இந்த வேதனை, நம்முடைய தூதர் மீது இறக்கப்பட்ட வசனங்களை நிராகரித்ததனாலும் “நாம் இறந்து எலும்புகளாக, மண்ணோடு மண்ணாக துண்டு துண்டாக மக்கிப் போய்விட்டாலும் மீண்டும் புதிய படைப்பாக உயிர்கொடுத்து எழுப்பப்டுவோமோ?” என்று கூறியதனாலும் நாம் அவர்களுக்கு வழங்கும் தண்டனையாகும்.
അറബി തഫ്സീറുകൾ:
اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ قَادِرٌ عَلٰۤی اَنْ یَّخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ اَجَلًا لَّا رَیْبَ فِیْهِ ؕ— فَاَبَی الظّٰلِمُوْنَ اِلَّا كُفُوْرًا ۟
17.99. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவர்கள், பிரமாண்டமான வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் இவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை அறியவில்லையா? மிகப் பெரும் படைப்புகளைப் படைக்க சக்திபெற்றவன் அவற்றைவிட சிறிய படைப்புகளைப் படைப்பதற்கு சக்தியுள்ளவனே. அல்லாஹ் இவ்வுலகில் அவர்களுக்கு குறிப்பிட்ட தவணையை ஏற்படுத்தியுள்ளான். அந்த தவணை வந்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை முடிவடைந்துவிடும். அவன் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் ஒரு தவணையை ஏற்படுத்தியுள்ளான். அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. மீண்டும் எழுப்பப்படுவதற்குரிய தெளிவான ஆதாரங்கள் இருந்தும் இணைவைப்பாளர்கள் மறுக்கிறார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
قُلْ لَّوْ اَنْتُمْ تَمْلِكُوْنَ خَزَآىِٕنَ رَحْمَةِ رَبِّیْۤ اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْیَةَ الْاِنْفَاقِ ؕ— وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا ۟۠
17.100. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நீங்கள் என்றும் முடிவடையாத என் இறைவனின் அருட்களஞ்சியங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தால் அது காலியாகிவிடும் என்ற பயத்தால் நீங்கள் ஏழைகளாகிவிடக் கூடாது என்பதற்காக அதிலிருந்து செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்வீர்கள். நிச்சயமாக மனிதன் கஞ்சத்தனம் செய்பவனாகவே இருக்கின்றான். நம்பிக்கையாளனைத் தவிர. ஏனெனில் அவன் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து செலவு செய்கின்றான்.
അറബി തഫ്സീറുകൾ:
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی تِسْعَ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ فَسْـَٔلْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ اِذْ جَآءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّیْ لَاَظُنُّكَ یٰمُوْسٰی مَسْحُوْرًا ۟
17.101. நாம் மூஸாவுக்கு அவருக்காக சாட்சி கூறக்கூடிய ஒன்பது தெளிவான சான்றுகளை வழங்கினோம். அவை: கைத்தடி, கை, பஞ்சம், விளைச்சல்களில் குறைபாடு, வெள்ளம், வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் (என்பவையாகும்). -தூதரே!- யூதர்களிடம், அவர்களின் முன்னோர்களிடம் மூஸா கொண்டுவந்த அச்சான்றுகளைக் குறித்து கேட்பீராக. ஃபிர்அவ்ன் அவரிடம் கூறினான்: “-மூசாவே!- நீர் அபூர்வமான விஷயங்களைக் கொண்டு வருவதனால் நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று எண்ணுகிறேன்.”
അറബി തഫ്സീറുകൾ:
قَالَ لَقَدْ عَلِمْتَ مَاۤ اَنْزَلَ هٰۤؤُلَآءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ بَصَآىِٕرَ ۚ— وَاِنِّیْ لَاَظُنُّكَ یٰفِرْعَوْنُ مَثْبُوْرًا ۟
17.102. மூஸா அவனிடம் பதிலளித்தவராக கூறினார்: “-ஃபிர்அவ்னே!- இந்த சான்றுகளை எல்லாம் வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே தன் வல்லமையையும் தன் தூதரின் நம்பகத்தன்மையையும் அறிவிப்பதற்காக இறக்கியுள்ளான் என்பதை நீ உறுதியாக அறிவாய். ஆயினும் நீ மறுக்கிறாய். -ஃபிர்அவ்னே!- நிச்சயமாக நீ அழியக்கூடியவன் என்பதை நிச்சயமாக நான் அறிவேன்.
അറബി തഫ്സീറുകൾ:
فَاَرَادَ اَنْ یَّسْتَفِزَّهُمْ مِّنَ الْاَرْضِ فَاَغْرَقْنٰهُ وَمَنْ مَّعَهٗ جَمِیْعًا ۟ۙ
17.103. ஃபிர்அவ்ன் மூஸாவையும் அவருடைய சமூகத்தினரையும் எகிப்தைவிட்டு வெளியேற்றி தண்டிக்க நாடினான். நாம் அவனையும் அவனுடனிருந்த அவனது படையினர் அனைவரையும் மூழ்கடித்து அழித்துவிட்டோம்.
അറബി തഫ്സീറുകൾ:
وَّقُلْنَا مِنْ بَعْدِهٖ لِبَنِیْۤ اِسْرَآءِیْلَ اسْكُنُوا الْاَرْضَ فَاِذَا جَآءَ وَعْدُ الْاٰخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِیْفًا ۟ؕ
17.104. ஃபிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் நாம் அழித்த பிறகு இஸ்ராயீலின் மக்களிடம் கூறினோம்: “ஷாம் தேசத்தில் குடியிருங்கள். மறுமை நாள் வந்துவிட்டால் உங்கள் அனைவரையும் விசாரணைக்காக நாம் மஹ்ஷர் பெருவெளியில் கொண்டுவருவோம்.
അറബി തഫ്സീറുകൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• الله تعالى هو المنفرد بالهداية والإضلال، فمن يهده فهو المهتدي على الحقيقة، ومن يضلله ويخذله فلا هادي له.
1. நேர்வழி அளிக்கும் அதிகாரமும் வழிகெடுக்கும் அதிகாரமும் அல்லாஹ்விடமே உள்ளது. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே உண்மையில் நேர்வழி பெற்றவர். அவன் யாரைக் கைவிட்டு வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு யாராலும் நேர்வழி காட்ட முடியாது.

• مأوى الكفار ومستقرهم ومقامهم جهنم، كلما سكنت نارها زادها الله نارًا تلتهب.
2. நிராகரிப்பாளர்களின் தங்குமிடம் நரகமாகும். அதன் நெருப்பு தணியும் போதெல்லாம் இறைவன் அதனை இன்னும் கொழுந்துவிட்டு எரியச் செய்வான்.

• وجوب الاعتصام بالله عند تهديد الطغاة والمُسْتَبدين.
3. வரம்புமீறுவோரும் சர்வதிகாரிகளும் மிரட்டும்போது அல்லாஹ்வையே உறுதியாக பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

• الطغاة والمُسْتَبدون يلجؤون إلى استخدام السلطة والقوة عندما يواجهون أهل الحق؛ لأنهم لا يستطيعون مواجهتهم بالحجة والبيان.
4. வரம்புமீறுவோரும் சர்வதிகாரிகளும் சத்தியவாதிகளை எதிர்கொள்ளும்போது அதிகாரத்தையும் பலத்தையும் பயன்படுத்துவதற்கே விழைகின்றனர். ஏனெனில் நிச்சயமாக அவர்களால் ஆதாரங்களை, தெளிவுகளை கொண்டு சத்தியவாதிகளை எதிர்கொள்ள முடியாது.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: ഇസ്റാഅ്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അവസാനിപ്പിക്കുക