Check out the new design

Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. * - Vertimų turinys


Reikšmių vertimas Sūra: Al-Bakara   Aja (Korano eilutė):
سَیَقُوْلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰىهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِیْ كَانُوْا عَلَیْهَا ؕ— قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ؕ— یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
2.142. யூதர்களில் அறிவீனர்களும் அவர்களைப் போன்று இருக்கும் நயவஞ்சகர்களும், ஏற்கனவே முஸ்லிம்கள் முன்னோக்கிக்கொண்டிருந்த பைதுல் மக்திஸ் திசையை விட்டுத் திருப்பியது எது? என்று கேட்பார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக, கிழக்கு, மேற்கு மற்றும் மற்ற திசைகள் அனைத்தின் ஆட்சியதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அவன் தான் நாடிய அடியார்களை தான் விரும்பிய திசையின் பக்கம் செலுத்துகிறான். தான் நாடிய அடியார்களுக்கு கோணலற்ற நேரான வழியைக் காட்டுகிறான்.
Tafsyrai arabų kalba:
وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ وَیَكُوْنَ الرَّسُوْلُ عَلَیْكُمْ شَهِیْدًا ؕ— وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِیْ كُنْتَ عَلَیْهَاۤ اِلَّا لِنَعْلَمَ مَنْ یَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ یَّنْقَلِبُ عَلٰی عَقِبَیْهِ ؕ— وَاِنْ كَانَتْ لَكَبِیْرَةً اِلَّا عَلَی الَّذِیْنَ هَدَی اللّٰهُ ؕ— وَمَا كَانَ اللّٰهُ لِیُضِیْعَ اِیْمَانَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
2.143. உங்களுக்காக நாம் விரும்பிய முன்னோக்கு திசையை (கிப்லா) ஆக்கியது போலவே உங்களையும் சிறந்த, நீதியுள்ள சமூகமாக, கொள்கைகள், வணக்க வழிபாடுகள், பொதுவிவகாரங்கள் ஆகிய விஷயங்களில் நடுநிலையான சமூகமாக ஆக்கியுள்ளோம். இது, தமது சமூகங்களுக்கு எடுத்துரைக்குமாறு தனது தூதர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டதை அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள் என்று மறுமைநாளில் அவர்களுக்காக நீங்கள் சாட்சியாளர்களாய் திகழ வேண்டும் என்பதற்காகவும் முஹம்மது நபி அவருக்கு கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் என்று உங்கள்மீது அவர் சாட்சியாளராக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான். யார் அல்லாஹ் விதித்த கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவனுக்குக் கட்டுப்படுகிறார்கள் என்பதையும் யார் தம் மனஇச்சையைப் பின்பற்றி மார்க்கத்தை விட்டு திரும்பிச் செல்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்வதற்காகத்தான், நீர் முன்னோக்கியிருந்த கிப்லாவான பைதுல் முகத்தஸை நாம் மாற்றினோம். அல்லாஹ்வையும் அவன் தன் அடியார்களுக்கு விதித்த சட்டங்கள் யாவும் உயர்ந்த மதிநுட்பமிக்கவை என்பதையும் நம்பிக்கைக்கொள்வதற்கு அல்லாஹ் அருள்புரிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு, முதல் கிப்லா மாற்றப்பட்ட சம்பவம் மிகவும் கடினமானதாக இருந்தது. அல்லாஹ்வின் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கையை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான். கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னால் நீங்கள் தொழுத தொழுகைகளும் அந்த நம்பிக்கையைச் சார்ந்ததே. நிச்சயமாக அவன் மக்களின் விஷயத்தில் மிகுந்த பரிவுடையவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். அவன் அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்த மாட்டான்; அவர்கள் செய்த செயல்களின் கூலியை வீணாக்க மாட்டான்.
Tafsyrai arabų kalba:
قَدْ نَرٰی تَقَلُّبَ وَجْهِكَ فِی السَّمَآءِ ۚ— فَلَنُوَلِّیَنَّكَ قِبْلَةً تَرْضٰىهَا ۪— فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَحَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ؕ— وَاِنَّ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا یَعْمَلُوْنَ ۟
2.144. தூதரே! நீர் விரும்பும் திசைக்கு கிப்லா மாற்றப்படும் வஹி இறங்குவதை எதிர்பார்த்தவராக உமது முகமும், பார்வையும் வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே நீர் இப்போது முன்னோக்கும் பைதுல் மக்திஸ் கிப்லாவிற்குப் பதிலாக நீர் விரும்பும் கிப்லாவான கஅபாவின் பக்கம் உம்மைத் திருப்பியே தீருவோம். எனவே உமது முகத்தை மக்காவில் அமைந்துள்ள கஅபாவின் பக்கம் திருப்புவீராக. நம்பிக்கையாளர்களே, நீங்கள் எங்கிருந்தாலும் தொழும்போது அதன் திசையை முன்னோக்கிக் கொள்ளுங்கள். வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் கிருஸ்தவர்களும் கிப்லா மாற்றம் அவர்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட உண்மையே என்பதை அவர்களின் வேதத்தின் மூலம் நன்கறிவார்கள். சத்தியத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. அவன் அவற்றை நன்கறிவான். அதற்கு அவர்களுக்கு கூலியும் வழங்குவான்.
Tafsyrai arabų kalba:
وَلَىِٕنْ اَتَیْتَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰیَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ ۚ— وَمَاۤ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ— وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟ۘ
2.145. தூதரே! வேதம் வழங்கப்பட்ட யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் கிப்லா மாற்றம் உண்மையானது என்று கூறும் அனைத்துவிதமான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டுவந்தாலும் கர்வத்தினாலும் பிடிவாதத்தினாலும் உமது கிப்லாவை முன்னோக்க மாட்டார்கள். அல்லாஹ் உம்மை அவர்களின் கிப்லாவை விட்டும் திருப்பிய பிறகு நீரும் அதனை முன்னோக்கக்கூடியவர் அல்ல. அவர்களில் சிலர் வேறு சிலரின் கிப்லாவை முன்னோக்கக்கூடியவர்களும் அல்ல. ஏனெனில் அவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவினரை நிராகரிப்பாளர்களாகக் கருதுகின்றார்கள். சந்தேகமற்ற சரியான ஞானம் உம்மிடம் வந்தபிறகு கிப்லாவின் விஷயத்திலும் சட்டதிட்டங்களிலும் நீர் அவர்களின் மனவிருப்பங்களை பின்பற்றினால் - நேர்வழியை விட்டுவிட்டு மனஇச்சையை பின்பற்றியதனால் நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். நபியவர்களை விளித்து கூறப்பட்ட இந்த விஷயம் அந்த மக்களைப் பின்பற்றுவதன் விபரீதத்தை எடுத்துரைப்பதற்காகத்தான். இல்லாவிட்டால் அல்லாஹ் தன் தூதரை அவ்வாறு பின்பற்றுவதிலிருந்து பாதுகாத்துள்ளான். இது நபியவர்களுக்குப் பின் அவர்களின் சமூகத்தை எச்சரிப்பதற்காகத்தான்.
Tafsyrai arabų kalba:
Šiame puslapyje pateiktų ajų nauda:
• أن الاعتراض على أحكام الله وشرعه والتغافل عن مقاصدها دليل على السَّفَه وقلَّة العقل.
1. அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு மறுப்புத்தெரிவிப்பது அவற்றின் நோக்கங்களை விட்டு அலட்சியமாக இருப்பது அறிவீனத்தின் அடையாளமாகும்.

• فضلُ هذه الأمة وشرفها، حيث أثنى عليها الله ووصفها بالوسطية بين سائر الأمم.
2. அனைத்து சமூகங்களைவிடவும் இந்த சமூகம் நடுநிலையாகத் திகழ்வதே இதற்கு வழங்கப்பட்ட சிறப்பாகும். சமூகத்தின் இந்த பண்பையே அல்லாஹ் புகழ்ந்து கூறியுள்ளான்.

• التحذير من متابعة أهل الكتاب في أهوائهم؛ لأنهم أعرضوا عن الحق بعد معرفته.
3. வேதக்காரர்களின் மனவிருப்பங்களைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சத்தியத்தை அறிந்தபிறகும் அதனைப் புறக்கணித்தார்கள்.

• جواز نَسْخِ الأحكام الشرعية في الإسلام زمن نزول الوحي، حيث نُسِخَ التوجه إلى بيت المقدس، وصار إلى المسجد الحرام.
4. வஹி இறங்கும் காலத்தில் இஸ்லாத்தின் சில சட்டதிட்டங்கள் நீக்கப்படுவது ஆகுமானதே. ஆரம்பத்தில் பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவாக இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு முஸ்லிம்கள் கஅபாவை முன்னோக்கினார்கள்.

 
Reikšmių vertimas Sūra: Al-Bakara
Sūrų turinys Puslapio numeris
 
Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. - Vertimų turinys

Išleido Korano studijų interpretavimo centras.

Uždaryti