Check out the new design

ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಉಮರ್ ಶರೀಫ್ * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಲುಕ್ಮಾನ್   ಶ್ಲೋಕ:
وَلَقَدْ اٰتَیْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِ ؕ— وَمَنْ یَّشْكُرْ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ حَمِیْدٌ ۟
திட்டவட்டமாக நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கினோம். அதாவது: நீர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவீராக! யார் நன்றி செலுத்துவாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தன் நன்மைக்காகத்தான். எவர் நிராகரிப்பாரோ (அவரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன், மிகுந்த புகழாளன்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاِذْ قَالَ لُقْمٰنُ لِابْنِهٖ وَهُوَ یَعِظُهٗ یٰبُنَیَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ— اِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِیْمٌ ۟
இன்னும், லுக்மான் தனது மகனாருக்கு - அவர் அவருக்கு உபதேசித்தவராக - கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! என் மகனே! அல்லாஹ்விற்கு இணை வைக்காதே! நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ ۚ— حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰی وَهْنٍ وَّفِصٰلُهٗ فِیْ عَامَیْنِ اَنِ اشْكُرْ لِیْ وَلِوَالِدَیْكَ ؕ— اِلَیَّ الْمَصِیْرُ ۟
இன்னும், மனிதனுக்கு - அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி - நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை பலவீனத்துக்கு மேல் பலவீனத்துடன் (-சிரமத்திற்கு மேல் சிரமத்துடன்) சுமந்தாள். அவனுக்கு பால்குடி மறக்க வைப்பது இரண்டு ஆண்டுகளில் ஆகும். அதாவது, நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து! என் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاِنْ جٰهَدٰكَ عَلٰۤی اَنْ تُشْرِكَ بِیْ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِی الدُّنْیَا مَعْرُوْفًا ؗ— وَّاتَّبِعْ سَبِیْلَ مَنْ اَنَابَ اِلَیَّ ۚ— ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
இன்னும், உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு நீ இணையாக்குவதற்கு அவர்கள் உன்னை கட்டாயப்படுத்தினால் அவ்விருவருக்கும் நீ கீழ்ப்படியாதே! (ஆனால்) உலக (விஷய)த்தில் அவ்விருவருடன் நல்ல முறையில் பழகுவாயாக! என் பக்கம் திரும்பிய (நல்ல)வர்களின் பாதையை நீ பின்பற்று! பிறகு, என் பக்கம்தான் உங்கள் (அனைவருடைய) மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் செய்துகொண்டிருந்ததை நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
یٰبُنَیَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِیْ صَخْرَةٍ اَوْ فِی السَّمٰوٰتِ اَوْ فِی الْاَرْضِ یَاْتِ بِهَا اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ لَطِیْفٌ خَبِیْرٌ ۟
என் மகனே! நிச்சயமாக (நீ செய்கிற) அ(ந்த நன்மை அல்லது; தீமையான)து எள்ளின் விதை அளவு இருந்தாலும், அது ஒரு பாறையில் இருந்தாலும், அல்லது; வானங்களில் இருந்தாலும்; அல்லது, பூமியில் இருந்தாலும் அல்லாஹ் அதைக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் மிக நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
یٰبُنَیَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰی مَاۤ اَصَابَكَ ؕ— اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟ۚ
என் மகனே! தொழுகையை நிலைநிறுத்து! (மக்களுக்கு) நன்மையை ஏவு! தீமையை விட்டும் (மக்களைத்) தடு! உனக்கு ஏற்பட்ட சோதனையில் பொறுமையாக இரு! நிச்சயமாக இவைதான் உறுதிமிக்க (உயர்வான) காரியங்களில் உள்ளவை ஆகும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ ۟ۚ
இன்னும், மக்க(ள் உன்னிடம் பேசும்போது அவர்க)ளை விட்டும் உனது கன்னத்தை திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமை பிடித்தவனாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவர்கள் தற்பெருமை பேசுபவர்கள் எவரையும் விரும்ப மாட்டான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاقْصِدْ فِیْ مَشْیِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ؕ— اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِیْرِ ۟۠
இன்னும், (விரைந்து செல்லாமலும் ஊர்ந்து செல்லாமலும்) உனது நடையில் நடுநிலைப் பேணு! (நிதானமாக நட!) இன்னும், (நீ பேசும்போது) உனது குரலை தாழ்த்து! நிச்சயமாக குரல்களில் மிக அருவருப்பானது கழுதைகளின் குரலாகும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಲುಕ್ಮಾನ್
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಉಮರ್ ಶರೀಫ್ - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

ಅನುವಾದ - ಶೈಖ್ ಉಮರ್ ಶರೀಫ್ ಬಿನ್ ಅಬ್ದುಸ್ಸಲಾಂ

ಮುಚ್ಚಿ