Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - មាតិកានៃការបកប្រែ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាស់ស្ហាំ   វាក្យខណ្ឌ:

அஷ்ஷம்ஸ்

وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟
சூரியனின் மீது சத்தியமாக! அதன் பகலின் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்)
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَالْقَمَرِ اِذَا تَلٰىهَا ۟
சந்திரனின் மீது சத்தியமாக! அதைத் தொடரும்போது,
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَا ۟
பகலின் மீது சத்தியமாக! அதை வெளிப்படுத்தும்போது (வெளிச்சப்படுத்தும் போது),
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَالَّیْلِ اِذَا یَغْشٰىهَا ۟
இரவின் மீது சத்தியமாக! அது (-இரவு) அதை (-சூரியனை) மூடும்போது,
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَالسَّمَآءِ وَمَا بَنٰىهَا ۟
வானத்தின் மீது சத்தியமாக! அதை அமைத்தவன் மீது சத்தியமாக!
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَالْاَرْضِ وَمَا طَحٰىهَا ۟
பூமியின் மீது சத்தியமாக! அதை விரித்தவன் மீது சத்தியமாக!
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَا ۟
ஆன்மாவின் மீது சத்தியமாக! அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக!
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَا ۟
ஆக, அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا ۟
(இஸ்லாமைக் கொண்டு) அதைப் பரிசுத்தமாக்கியவர் திட்டமாக வெற்றி பெற்றார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَا ۟ؕ
அதை(ப் பாவத்தில்) மறைத்தவன் திட்டமாக நஷ்டமடைந்தான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَاۤ ۟
ஸமூது சமுதாயம் தன் அழிச்சாட்டியத்தால் (தூதரைப்) பொய்ப்பித்தது.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَا ۟
அதன் தீயவன் புறப்பட்டபோது,
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْیٰهَا ۟ؕ
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) “அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தையும் அது நீர் பருகுவதையும் (தடை செய்யாதீர்)” என்று அவர்களுக்குக் கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا— فَدَمْدَمَ عَلَیْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَا ۟
அவரைப் பொய்ப்பித்தார்கள்; அதைக் கொன்றார்கள். ஆகவே, அவர்களின் பாவத்தினால் அவர்களுடைய இறைவன் அவர்களின் மீது கடுமையான வேதனையை இறக்கினான். அதை (-அந்த சமுதாயத்தை) சமமாக்கினான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَا یَخَافُ عُقْبٰهَا ۟۠
(அவன்) அதன் முடிவைப் பயப்பட மாட்டான்
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាស់ស្ហាំ
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - មាតិកានៃការបកប្រែ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

បិទ