Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - មាតិកានៃការបកប្រែ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់កមើរ   វាក្យខណ្ឌ:
وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ بَیْنَهُمْ ۚ— كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ ۟
நிச்சயமாக தண்ணீர் (ஒட்டகம் நீர் குடிக்காத நாளில்) அவர்களுக்கு மத்தியில் (சமமான) பங்காகும் என்று அவர்களுக்கு அறிவிப்பீராக! தண்ணீர் குடிக்கப்படுகின்ற எல்லா நேரங்களிலும் (அந்த அந்த நேரத்திற்குரியவர்கள் மட்டும்) ஆஜராக வேண்டும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰی فَعَقَرَ ۟
(அந்த ஒட்டகத்தைக் கொல்வதற்காக) அவர்கள் தங்கள் தோழரை அழைத்தனர். அவன் (தனது கரத்தால் அதைப்) பிடித்து, அறுத்தான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ صَیْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِیْمِ الْمُحْتَظِرِ ۟
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு சப்தத்தை அனுப்பினோம். அவர்கள் தொழுவத்தின் தீணிகளைப் போல் ஆகிவிட்டனர்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
كَذَّبَتْ قَوْمُ لُوْطٍۭ بِالنُّذُرِ ۟
லூத்துடைய மக்களும் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ— نَجَّیْنٰهُمْ بِسَحَرٍ ۟ۙ
நிச்சயமாக அவர்கள் மீது நாம் கல் மழையை அனுப்பினோம், லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர. அவர்களை நாம் அதிகாலையில் பாதுகாத்தோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
نِّعْمَةً مِّنْ عِنْدِنَا ؕ— كَذٰلِكَ نَجْزِیْ مَنْ شَكَرَ ۟
நம்மிடமிருந்து (அவர்கள் மீது) அருட்கொடையாக (நாம் அவர்களை பாதுகாத்தோம்). இவ்வாறுதான் நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ ۟
திட்டவட்டமாக நமது தண்டனையை அவர் அவர்களுக்கு எச்சரித்தார். அவர்கள் அந்த எச்சரிக்கையை சந்தேகித்தனர்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَیْفِهٖ فَطَمَسْنَاۤ اَعْیُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
திட்டவட்டமாக அவர்கள் அவரிடம் அவரது விருந்தினர்களை வேண்டி (விருந்தினர்களிடம் தங்கள் ஆசையை தனித்துக் கொள்ள) அடம்பிடித்தனர். நாம் அவர்களின் கண்களை (அழித்து முகத்தோடு முகமாக) சமமாக்கி விட்டோம். ஆகவே, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ ۟ۚ
அதிகாலை சூரியன் விடிவதற்கு முன் (நரகம் வரை தொடர்ந்து) நிலைத்திருக்கக்கூடிய வேதனை காலையில் அவர்களை திட்டவட்டமாக வந்தடைந்தது.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
ஆக, என் வேதனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்!
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَقَدْ جَآءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُ ۟ۚ
திட்டவட்டமாக ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு (நமது) எச்சரிக்கை வந்தன.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
كَذَّبُوْا بِاٰیٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِیْزٍ مُّقْتَدِرٍ ۟
அவர்கள் நமது அத்தாட்சிகளை எல்லாம் பொய்ப்பித்தனர். ஆகவே, மிக்க மிகைத்தவன், மகா வல்லமை உடையவனின் தண்டனையால் அவர்களை தண்டித்தோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اَكُفَّارُكُمْ خَیْرٌ مِّنْ اُولٰٓىِٕكُمْ اَمْ لَكُمْ بَرَآءَةٌ فِی الزُّبُرِ ۟ۚ
உங்களுடைய (இக்கால) நிராகரிப்பாளர்கள் (முந்திய நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை விட சிறந்தவர்களா? (நீங்கள் திருந்தவில்லை என்றால், அவர்களுக்கு வந்த வேதனை உங்களுக்கும் வரும்.) அல்லது (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாப்பிற்குரிய) விடுதலை பத்திரம் (முந்திய) வேதங்களில் உங்களுக்கு இருக்கிறதா?
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اَمْ یَقُوْلُوْنَ نَحْنُ جَمِیْعٌ مُّنْتَصِرٌ ۟
அல்லது, நாங்கள் (எங்களை பிரிக்க நினைப்பவர்களிடம்) பழிதீர்த்துக் கொள்கின்ற கூட்டம் ஆவோம் என்று அவர்கள் கூறுகின்றார்களா?
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
سَیُهْزَمُ الْجَمْعُ وَیُوَلُّوْنَ الدُّبُرَ ۟
விரைவில் இந்த கூட்டங்கள் தோற்கடிக்கப்படுவார்கள். புறமுதுகு காட்டுவார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰی وَاَمَرُّ ۟
மாறாக, மறுமைதான் இவர்களின் (முழுமையான தண்டனைக்கு) வாக்களிக்கப்பட்ட நேரமாகும். மறுமை மிக பயங்கரமானதும் மிக கசப்பானதுமாகும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟ۘ
நிச்சயமாக குற்றவாளிகள் வழிகேட்டிலும் (இணைவைப்பின்) மிகப் பெரிய சிரமத்திலும் இருக்கின்றனர்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
یَوْمَ یُسْحَبُوْنَ فِی النَّارِ عَلٰی وُجُوْهِهِمْ ؕ— ذُوْقُوْا مَسَّ سَقَرَ ۟
நரகத்தில் அவர்களின் முகங்கள் மீது அவர்கள் இழுக்கப்படும் நாளில், “ஸகர் நரகத்தின் கடுமையை சுவையுங்கள்!” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّا كُلَّ شَیْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ ۟
நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியின் தாய் புத்தகத்தில் நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់កមើរ
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - មាតិកានៃការបកប្រែ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

បិទ