Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - មាតិកានៃការបកប្រែ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់កះហ្វុី   វាក្យខណ្ឌ:
فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰىهُ اٰتِنَا غَدَآءَنَا ؗ— لَقَدْ لَقِیْنَا مِنْ سَفَرِنَا هٰذَا نَصَبًا ۟
(தாங்கள் தேடிச் சென்ற இடத்தை அறியாது அதை) அவ்விருவரும் கடந்த போது (மூஸா) தன் வாலிபரை நோக்கி “நம் உணவை நம்மிடம் கொண்டுவா. திட்டவட்டமாக இந்த நம் பயணத்தில் களைப்பைச் சந்தித்தோம்” என்று கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالَ اَرَءَیْتَ اِذْ اَوَیْنَاۤ اِلَی الصَّخْرَةِ فَاِنِّیْ نَسِیْتُ الْحُوْتَ ؗ— وَمَاۤ اَنْسٰىنِیْهُ اِلَّا الشَّیْطٰنُ اَنْ اَذْكُرَهٗ ۚ— وَاتَّخَذَ سَبِیْلَهٗ فِی الْبَحْرِ ۖۗ— عَجَبًا ۟
(அந்த வாலிபர் மூஸாவை நோக்கி) “அந்த கற்பாறை” அருகில் நாம் ஒதுங்கி (அங்கு தங்கி)ய போது (நடந்த அதிசயத்தை) நீர் பார்த்தீரா? நிச்சயமாக நான் (அப்போது அந்த) மீனை(ப் பற்றிக் கூற) மறந்தேன். அதை நான் கூறுவதை ஷைத்தானைத் தவிர (வேறு எவரும்) எனக்கு மறக்கடிக்கவில்லை. (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தன் வழியை ஆக்கிக் கொண்டது” என்று கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالَ ذٰلِكَ مَا كُنَّا نَبْغِ ۖۗ— فَارْتَدَّا عَلٰۤی اٰثَارِهِمَا قَصَصًا ۟ۙ
(மூஸா) “நாம் தேடிக்கொண்டிருந்த (இடமான)து அதுதான்” என்று கூறி அவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் (காலடி) சுவடுகள் மீதே (அவற்றை) பின்பற்றி, (வந்த வழியே) திரும்பினார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَاۤ اٰتَیْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّا عِلْمًا ۟
(அவ்விருவரும் அங்கு வந்தபோது அவ்விடத்தில்) நம் அடியார்களில் ஓர் அடியாரை அவ்விருவரும் கண்டார்கள். நம்மிடமிருந்து அவருக்கு (சிறப்பான) கருணையை நாம் கொடுத்திருந்தோம். இன்னும் நம் புறத்திலிருந்து அவருக்கு ஞானத்தையும் நாம் கற்பித்திருந்தோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالَ لَهٗ مُوْسٰی هَلْ اَتَّبِعُكَ عَلٰۤی اَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا ۟
மூஸா அவரை நோக்கி “நீர் கற்பிக்கப்பட்டதிலிருந்து (சில) நல்லறிவை எனக்கு நீர் கற்பிப்பதற்காக (என்ற நிபந்தனையின் மீது) நான் உம்மைப் பின்தொடரலாமா?” என்று கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالَ اِنَّكَ لَنْ تَسْتَطِیْعَ مَعِیَ صَبْرًا ۟
“என்னுடன் பொறுத்திருக்க நிச்சயமாக நீர் இயலவே மாட்டீர்.” என்று கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَكَیْفَ تَصْبِرُ عَلٰی مَا لَمْ تُحِطْ بِهٖ خُبْرًا ۟
எதை நீர் ஆழமாக சூழ்ந்தறியவில்லையோ (அதை நான் செய்யும்போது) அதன் மீது எப்படி நீர் பொறு(த்திரு)ப்பீர்”என்று கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالَ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ صَابِرًا وَّلَاۤ اَعْصِیْ لَكَ اَمْرًا ۟
“அல்லாஹ் நாடினால் பொறுமையாளனாக என்னைக் காண்பீர். எந்த ஒரு காரியத்திலும் உமக்கு மாறுசெய்ய மாட்டேன்” என்று (மூஸா) கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالَ فَاِنِ اتَّبَعْتَنِیْ فَلَا تَسْـَٔلْنِیْ عَنْ شَیْءٍ حَتّٰۤی اُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ۟۠
“நீர் என்னைப் பின்தொடர்ந்தால் (நான் செய்யும்) எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் என்னிடம் கேட்காதீர் (அது குறித்த) விளக்கத்தை நான் (கூற) ஆரம்பிக்கும் வரை” என்று கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَانْطَلَقَا ۫— حَتّٰۤی اِذَا رَكِبَا فِی السَّفِیْنَةِ خَرَقَهَا ؕ— قَالَ اَخَرَقْتَهَا لِتُغْرِقَ اَهْلَهَا ۚ— لَقَدْ جِئْتَ شَیْـًٔا اِمْرًا ۟
ஆகவே, இருவரும் சென்றனர். இறுதியாக, கப்பலில் இருவரும் பயணித்த போது, அவர் அதை ஓட்டையாக்கினார். “இதில் உள்ளவர்களை மூழ்கடிக்க அதை ஓட்டையாக்கினீரா? திட்டவட்டமாக மிக (அபாயகரமான) கெட்ட காரியத்தைச் செய்தீர்” என்று (மூஸா) கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالَ اَلَمْ اَقُلْ اِنَّكَ لَنْ تَسْتَطِیْعَ مَعِیَ صَبْرًا ۟
(அவர் மூஸாவை நோக்கி) “என்னுடன் பொறு(மையாக இரு)ப்பதற்கு நிச்சயமாக நீர் இயலவே மாட்டீர் என்று நான் கூறவில்லையா?” என்று கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالَ لَا تُؤَاخِذْنِیْ بِمَا نَسِیْتُ وَلَا تُرْهِقْنِیْ مِنْ اَمْرِیْ عُسْرًا ۟
(மூஸா) “நான் மறந்ததினால் என்னைக் குற்றம் பிடிக்காதீர். இன்னும் என் காரியத்தில் சிரமத்திற்கு என்னை கட்டாயப்படுத்தாதீர்” என்று கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَانْطَلَقَا ۫— حَتّٰۤی اِذَا لَقِیَا غُلٰمًا فَقَتَلَهٗ ۙ— قَالَ اَقَتَلْتَ نَفْسًا زَكِیَّةً بِغَیْرِ نَفْسٍ ؕ— لَقَدْ جِئْتَ شَیْـًٔا نُّكْرًا ۟
ஆகவே. இருவரும் சென்றனர். இறுதியாக, (வழியில்) இருவரும் ஒரு சிறுவனைச் சந்தித்தபோது (அவர்) அவனைக் கொன்றார். “ஓர் உயிரைக் கொன்ற குற்றமின்றி ஒரு பரிசுத்தமான உயிரைக் கொன்றீரா? திட்டவட்டமாக நீர் ஒரு மகா கொடிய செயலை செய்தீர்” என்று (மூஸா) கூறினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់កះហ្វុី
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - មាតិកានៃការបកប្រែ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

បិទ