Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - មាតិកានៃការបកប្រែ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អ៊ីសរ៉ក   វាក្យខណ្ឌ:
مَنْ كَانَ یُرِیْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِیْهَا مَا نَشَآءُ لِمَنْ نُّرِیْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَ ۚ— یَصْلٰىهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا ۟
எவர், (அவசரமான) இம்மை (வாழ்க்கை)யை (மட்டும்) நாடுகின்றவராக இருப்பாரோ (அப்படிப்பட்டவர்களில்) நாம் நாடுபவருக்கு நாம் நாடுவதை (மட்டும்) அதில் முற்படுத்திக் கொடுப்போம். பிறகு, அவருக்கு நரகத்தை (தங்குமிடமாக) ஆக்குவோம். அவர் இகழப்பட்டவராக, (நம் அருளைவிட்டு) தூரமாக்கப்பட்டவராக (கேவலமாக தள்ளப்பட்டு) அதில் எரிந்து பொசுங்குவார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰی لَهَا سَعْیَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ كَانَ سَعْیُهُمْ مَّشْكُوْرًا ۟
எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து, மறுமையை நாடி அதற்குரிய முயற்சி செய்வார்களோ, அவர்களுடைய முயற்சி நன்றி செலுத்தப்பட்(டு நற்கூலி கொடுக்கப்பட்)டதாக இருக்கும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
كُلًّا نُّمِدُّ هٰۤؤُلَآءِ وَهٰۤؤُلَآءِ مِنْ عَطَآءِ رَبِّكَ ؕ— وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُوْرًا ۟
(உலகை விரும்புகிற) இவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் கொடுத்துதவுவோம். உம் இறைவனின் கொடை (இவ்வுலகில் எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இருக்கவில்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اُنْظُرْ كَیْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ ؕ— وَلَلْاٰخِرَةُ اَكْبَرُ دَرَجٰتٍ وَّاَكْبَرُ تَفْضِیْلًا ۟
(நபியே!) அவர்களில் சிலரை சிலரை விட (பொருளாதாரத்தில்) எப்படி மேன்மையாக்கினோம் என்பதை கவனிப்பீராக! மறுமை (வாழ்வு)தான் பதவிகளாலும் மிகப் பெரியது; மேன்மையாலும் மிகப் பெரியது.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا ۟۠
(நபியே!) அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) இகழப்பட்டவராக, கைவிடப்பட்டவராக, (முடங்கி) அமர்ந்து விடுவீர்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَقَضٰی رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِیَّاهُ وَبِالْوَالِدَیْنِ اِحْسَانًا ؕ— اِمَّا یَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِیْمًا ۟
(நபியே!) உம் இறைவன், கட்டளையிட்டு இருக்கின்றான்: “அவனைத் தவிர (மற்ற எவரையும்) நீங்கள் வணங்காதீர்கள்; பெற்றோருக்கு நன்மை புரியுங்கள்!” (மனிதனே!) உன்னிடம் அவ்விருவர்களில் ஒருவர் அல்லது அவர்கள் இருவரும் முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் (உதாசினப்படுத்தி) ‘சீ’ என்று சொல்லாதே; அவ்விருவரையும் வெருட்டாதே; அவ்விருவருக்கும் மரியாதையான சொல்லைச் சொல்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّیٰنِیْ صَغِیْرًا ۟ؕ
கருணையுடன் பணிவின் இறக்கையை அவர்களுக்கு முன் தாழ்த்து! (மிக்க அன்புடன் பணிந்து நட,) “என் இறைவா! என்னை நான் சிறியவனாக இருக்கும் போது அவர்கள் வளர்த்தவாறே நீயும் அவ்விருவருக்கும் கருணை புரி!” என்று கூறு!
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
رَبُّكُمْ اَعْلَمُ بِمَا فِیْ نُفُوْسِكُمْ ؕ— اِنْ تَكُوْنُوْا صٰلِحِیْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِیْنَ غَفُوْرًا ۟
உங்கள் மனங்களில் உள்ளதை உங்கள் இறைவன் மிக அறிந்தவன். நீங்கள் நல்லவர்களாக இருந்தால் நிச்சயமாக அவன், (தன் தவறுகளை விட்டு திருந்தி நன்மையின் பக்கம்) முற்றிலுமாக மீளுகிறவர்களுக்கு மகா மன்னிப்பாளனாக இருக்கின்றான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاٰتِ ذَا الْقُرْبٰی حَقَّهٗ وَالْمِسْكِیْنَ وَابْنَ السَّبِیْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِیْرًا ۟
உறவினருக்கு அவருடைய உரிமையைக் கொடு! ஏழைக்கும் வழிப்போக்கருக்கும் (அவ்வாறே) கொடு! மிதமிஞ்சி (வீணாக) செலவழிக்காதே!
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّ الْمُبَذِّرِیْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّیٰطِیْنِ ؕ— وَكَانَ الشَّیْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا ۟
மிதமிஞ்சி செலவழிப்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தான் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អ៊ីសរ៉ក
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - មាតិកានៃការបកប្រែ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

បិទ