Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - មាតិកានៃការបកប្រែ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ហុិជរ៍   វាក្យខណ្ឌ:
وَلَقَدْ جَعَلْنَا فِی السَّمَآءِ بُرُوْجًا وَّزَیَّنّٰهَا لِلنّٰظِرِیْنَ ۟ۙ
திட்டவட்டமாக வானத்தில் பெரிய நட்சத்திரங்களை அமைத்து, பார்ப்பவர்களுக்கு அவற்றை அலங்காரமாக்கினோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ
விரட்டப்பட்ட எல்லா ஷைத்தான்களை விட்டு அதைப் பாதுகாத்தோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَتْبَعَهٗ شِهَابٌ مُّبِیْنٌ ۟
எனினும், எவன் ஒட்டுக் கேட்பானோ, அவனை தெளிவானதோர் எரி நட்சத்திரம் பின் தொடரும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ شَیْءٍ مَّوْزُوْنٍ ۟
பூமியை நாம் விரித்தோம்; அதில் அசையாத மலைகளை நிறுவினோம்; அதில் (நிறுவையில்) நிறுக்கப்படும் எல்லாவற்றையும் முளைக்க வைத்தோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَجَعَلْنَا لَكُمْ فِیْهَا مَعَایِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرٰزِقِیْنَ ۟
அதில் உங்களுக்கும், நீங்கள் உணவளிப்பவர்களாக இல்லாதவர்களுக்கும் (நாம்தான்) வாழ்வாதாரங்களை அமைத்தோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاِنْ مِّنْ شَیْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآىِٕنُهٗ ؗ— وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ ۟
எப்பொருளும் இல்லை அதன் பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தே தவிர. குறிப்பிடப்பட்டதோர் அளவிலே தவிர அதை இறக்க மாட்டோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاَرْسَلْنَا الرِّیٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَیْنٰكُمُوْهُ ۚ— وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِیْنَ ۟
(மேகத்தை) கருக்கொள்ள வைக்கக்கூடிய காற்றுகளை அனுப்புகிறோம். அம்மேகத்திலிருந்து மழை நீரை இறக்கி, அதை உங்களுக்குப் புகட்டுகிறோம். அதை நீங்கள் சேகரிப்பவர்களாக இல்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاِنَّا لَنَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَنَحْنُ الْوٰرِثُوْنَ ۟
நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; இன்னும் மரணிக்க வைக்கிறோம். நாமே (அனைத்திற்கும்) அனந்தரக்காரர்கள்!
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِیْنَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَاْخِرِیْنَ ۟
திட்டவட்டமாக உங்களில் முன் சென்றவர்களையும் அறிந்தோம்; (உங்களில்) பின் வருபவர்களையும் அறிந்தோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاِنَّ رَبَّكَ هُوَ یَحْشُرُهُمْ ؕ— اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟۠
(நபியே!) நிச்சயமாக உம் இறைவன்தான் இவர்களை (எல்லாம் மறுமையில்) ஒன்று திரட்டுவான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟ۚ
திட்டவட்டமாக பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَالْجَآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ ۟
(மனிதனைப் படைப்பதற்கு) முன்பே ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
“நிச்சயமாக நான், பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்கப்போகிறேன்” என்று உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَاِذَا سَوَّیْتُهٗ وَنَفَخْتُ فِیْهِ مِنْ رُّوْحِیْ فَقَعُوْا لَهٗ سٰجِدِیْنَ ۟
“நான் அவரை செம்மை செய்து, அவரி(ன் உடலி)ல் என் உயிரிலிருந்து ஊதினால் அவருக்கு (முன்) சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்” (என்று கட்டளையிட்டான்).
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَسَجَدَ الْمَلٰٓىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَ ۟ۙ
(அவ்வாறே) வானவர்கள் எல்லோரும், அனைவரும் சிரம் பணிந்தார்கள்;
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— اَبٰۤی اَنْ یَّكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதற்கு மறுத்து விட்டான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ហុិជរ៍
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - មាតិកានៃការបកប្រែ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

បិទ