Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន * - មាតិកានៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អាក់រ៉ហ្វ   វាក្យខណ្ឌ:
قَالَ ادْخُلُوْا فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ فِی النَّارِ ؕ— كُلَّمَا دَخَلَتْ اُمَّةٌ لَّعَنَتْ اُخْتَهَا ؕ— حَتّٰۤی اِذَا ادَّارَكُوْا فِیْهَا جَمِیْعًا ۙ— قَالَتْ اُخْرٰىهُمْ لِاُوْلٰىهُمْ رَبَّنَا هٰۤؤُلَآءِ اَضَلُّوْنَا فَاٰتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ ؕ۬— قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَّلٰكِنْ لَّا تَعْلَمُوْنَ ۟
7.38. வானவர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: “இணைவைப்பாளர்களே! உங்களுக்கு முன் வழிகெட்ட, நிராகரித்த மனித, ஜின் இனத்தாருடன் சேர்ந்து நரகத்தில் நுழைந்துவிடுங்கள்.” அந்த சமூகங்களில் ஏதேனும் ஒரு சமூகம் நுழையும் போதெல்லாம் தமக்கு முன் நரகத்தில் இருக்கும் தம் சகோதர சமூகத்தை சபிக்கும். அவையனைத்தும் ஒன்று சேர்ந்தவுடன் இறுதியாக நுழைந்த சமூகமான கீழ்மட்டத்தினர்களும் பின்பற்றியோரும், முதலாவதாக நுழைந்த சமூகமான பெரியவர்களையும் தலைவர்களையும் பார்த்துக் கூறும்: “எங்கள் இறைவா! இந்த தலைவர்கள் தாம் எங்களை நேர்வழியை விட்டும் வழிகெடுத்துவிட்டார்கள். அவர்கள் எங்களுக்கு வழிகேட்டை அலங்கரித்துக் காட்டியதற்காக அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக.” அதற்கு அல்லாஹ் மறுத்து கூறுவான்: “உங்களில் ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் வேதனையில் இரு மடங்கு பங்கு உண்டு. ஆயினும் நீங்கள் அவற்றை அறிந்து கொள்ளாமலும் புரியாமலும் உள்ளீர்கள்.”
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَقَالَتْ اُوْلٰىهُمْ لِاُخْرٰىهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟۠
7.39. பின்பற்றப்பட்ட தலைவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களிடம் கூறுவார்கள்: “வேதனை குறைக்கப்படும் அளவுக்கு எங்களை விட உங்களுக்கு எந்த சிறப்பும் இல்லை. நீங்கள் செய்த செயல்களே கவனத்தில் கொள்ளப்படும். அசத்தியத்தைப் பின்பற்றியதில் நீங்கள் எந்தச் சாக்குப் போக்கும் கூறமுடியாது. நாம் அனுபவிப்பதைப் போலவே, நீங்கள் செய்து கொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் பாவங்களினால் வேதனையை அனுபவியுங்கள்.”
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا یَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتّٰی یَلِجَ الْجَمَلُ فِیْ سَمِّ الْخِیَاطِ ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الْمُجْرِمِیْنَ ۟
7.40. நம்முடைய தெளிவான வசனங்களைப் பொய்யெனக் கூறி அவற்றுக்கு அடிபணியாமல் கர்வம் கொண்டவர்கள் எல்லா நன்மைகளை விட்டும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அவர்கள் இறந்த பிறகு அவர்களின் நிராகரிப்பினால், அவர்களது செயல்களுக்கும் ஆன்மாக்களுக்கும் வானத்தின் கதவுகள் திறக்கப்படாது. பெரும் மிருகங்களில் ஒன்றாகிய ஒட்டகம் மிகவும் சிறிய பொருட்களில் ஒன்றாகிய ஊசியின் துவாரத்தின் வழியே நுழையும் வரை அவர்கள் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். இது எவ்வாறு சாத்தியமற்றதோ அது போல் அவர்கள் சுவனம் நுழைவதும் சாத்தியமற்றதே. இவ்வாறே பெரும் பாவிகளுக்கு அல்லாஹ் கூலி வழங்குகின்றான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟
7.41. கர்வம் கொண்ட இந்த நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தில் படுக்கை விரிப்புகள் உண்டு. அவர்களுக்கு மேலே நெருப்பிலான போர்வைகள் போர்த்தப்பட்டிருக்கும். அல்லாஹ்வை நிராகரித்து புறக்கணித்து அவனது வரம்புகளை மீறியவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குகிறோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۤ ؗ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
7.42. தங்களின் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு தங்களால் இயன்ற அளவு - அல்லாஹ் ஒருவர் மீது செய்ய முடிந்த அளவுக்கே பொறுப்பு சாட்டுகிறான் - நற்செயல் புரிந்தவர்கள்தாம் சொர்க்க வாசிகளாவர். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ ۚ— وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ هَدٰىنَا لِهٰذَا ۫— وَمَا كُنَّا لِنَهْتَدِیَ لَوْلَاۤ اَنْ هَدٰىنَا اللّٰهُ ۚ— لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ؕ— وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
7.43. சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பரிபூரணமான அருட்கொடைகளில் ஒன்று, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் இருக்கும் பகைமையையும் குரோதத்தையும் நீக்கிவிடுவதும், அவர்களுக்குக் கீழே ஆறுகளை ஓடச் செய்வதுமாகும். அல்லாஹ் தங்களின் மீது பொழிந்த அருட்கொடைகளை ஒத்துக் கொண்டவர்களாக அவர்கள் கூறுவார்கள்: “இந்த உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தந்த நற்செயலைப் புரிவதற்கு பாக்கியம் அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் எங்களுக்குப் பாக்கியம் அளிக்கவில்லையென்றால் நாங்களாகவே இதனைப் பெற்றிருக்க முடியாது. எங்களின் தூதர்கள் சந்தேகமற்ற சத்தியத்தையும் வாக்குறுதியிலும் எச்சரிக்கையிலும் உண்மையையே எங்களிடம் கொண்டு வந்தார்கள்.” அப்பொழுது ஒரு அழைப்பாளர் அவர்களை நோக்கி கூறுவார்: “இதுதான் உலகில் எனது தூதர்கள் உங்களுக்குக் கூறிய சுவர்க்கமாகும். தனது திருப்பொருத்தத்தை நாடி நீங்கள் செய்த நற்செயல்களின் காரணமாக உங்களுக்கு அவன் அதனை வழங்கியுள்ளான்”.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
អំពី​អត្ថប្រយោជន៍​នៃវាក្យខណ្ឌទាំងនេះនៅលើទំព័រនេះ:
• المودة التي كانت بين المكذبين في الدنيا تنقلب يوم القيامة عداوة وملاعنة.
1. இவ்வுலகில் நிராகரிப்பாளர்களிடையே காணப்படும் நட்பு மறுமை நாளில் பகைமையாகவும் சாபமாகவும் ஆகிவிடும்.

• أرواح المؤمنين تفتح لها أبواب السماء حتى تَعْرُج إلى الله، وتبتهج بالقرب من ربها والحظوة برضوانه.
2. நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்கள் அல்லாஹ்விடம் செல்வதற்காக அவைகளுக்கு வானத்தின் கதவுகள் திறக்கப்படும். இறை நெருக்கத்தையும் திருப்தியையும் பெற்று அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

• أرواح المكذبين المعرضين لا تفتح لها أبواب السماء، وإذا ماتوا وصعدت فهي تستأذن فلا يؤذن لها، فهي كما لم تصعد في الدنيا بالإيمان بالله ومعرفته ومحبته، فكذلك لا تصعد بعد الموت، فإن الجزاء من جنس العمل.
3. அல்லாஹ்வை நிராகரித்த ஆன்மாக்களுக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படாது. அவை இறந்தபிறகு வானத்தின்பால் சென்று அனுமதி கேட்டாலும் அவற்றிற்கு அனுமதியளிக்கப்படாது. இவ்வுலகில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை அறிந்து அவனை நேசம் கொண்டு மேலே செல்லாதது போல் இறந்த பிறகும் அவ்வாறு மேலே செல்லாது. ஏனெனில் கூலி செயல்களுக்கேற்பவே கிடைக்கும்.

• أهل الجنة نجوا من النار بعفو الله، وأدخلوا الجنة برحمة الله، واقتسموا المنازل وورثوها بالأعمال الصالحة وهي من رحمته، بل من أعلى أنواع رحمته.
4. சுவனவாசிகள் அல்லாஹ்வின் மன்னிப்பினால் நரகத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு அவன் அருளால் சுவனத்தில் நுழைக்கப்படுவார்கள். அவன் அருளால் அவர்கள் செய்த நற்செயல்களால் உயர்ந்த அந்தஸ்தையும் சுவனத்தையும் அவர்கள் பெறுவார்கள். அதுவே அவனது மிகப் பெரும் அருள்களில் ஒன்றாகும்.

 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អាក់រ៉ហ្វ
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន - មាតិកានៃការបកប្រែ

ត្រូវបានចេញដោយមជ្ឈមណ្ឌល តាហ្វសៀរនៃការសិក្សាគម្ពីគួរអាន

បិទ