Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន * - មាតិកានៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាស់ហ្សារីយ៉ាត   វាក្យខណ្ឌ:
وَالسَّمَآءِ ذَاتِ الْحُبُكِ ۟ۙ
51.7. வழிகளையுடைய அழகிய படைப்பான வானத்தைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّكُمْ لَفِیْ قَوْلٍ مُّخْتَلِفٍ ۟ۙ
51.8. -மக்காவாசிகளே!- நிச்சயமாக நீங்கள் முரண்பட்ட தடுமாற்றம்மிக்க வார்த்தைகளைக் கூறுகிறீர்கள். சில சமயங்களில் “குர்ஆன் ஒரு சூனியமாகும்” என்றும் சில சமயங்களில் “அது ஒரு கவிதை” என்றும் சில சமயங்களில் “முஹம்மது ஒரு சூனியக்காரர்” என்றும் சில சமயங்களில் “அவர் ஒரு கவிஞர்” என்றும் கூறுகிறீர்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
یُّؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَ ۟ؕ
51.9. குர்ஆனின்மீதும் தூதரின்மீதும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் என்று நிச்சயமாக அல்லாஹ் முன்னரே அறிந்தவர்கள்தான் நம்பிக்கைகொள்வதை விட்டும் திருப்பிவிடப்படுகிறான். எனவே அவன் நேர்வழிபெற வாய்ப்புக் கிடைக்காது.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قُتِلَ الْخَرّٰصُوْنَ ۟ۙ
51.10. குர்ஆனைக் குறித்தும் தங்களின் நபியைக் குறித்தும் இவ்வாறு கூறிய பொய்யர்கள் சபிக்கப்பட்டு விட்டார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
الَّذِیْنَ هُمْ فِیْ غَمْرَةٍ سَاهُوْنَ ۟ۙ
51.11. அவர்கள் அறியாமையில் மறுமையின் வீட்டை விட்டும் அலட்சியமாக இருக்கின்றார்கள். அதனைப் பொருட்படுத்துவதில்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
یَسْـَٔلُوْنَ اَیَّانَ یَوْمُ الدِّیْنِ ۟ؕ
51.12. கூலி வழங்கப்படும் நாள் எப்போது? என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக செயற்படுவதில்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
یَوْمَ هُمْ عَلَی النَّارِ یُفْتَنُوْنَ ۟
51.13. அல்லாஹ் அவர்களின் கேள்விக்குப் பதிலளிக்கிறான். அது அவர்கள் நரகத்தில் வேதனை செய்யப்படும் நாளாகும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
ذُوْقُوْا فِتْنَتَكُمْ ؕ— هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟
51.14. அவர்களிடம் கூறப்படும்: “உங்களின் வேதனையைச் சுவையுங்கள். இதைக் குறித்துதான் எச்சரிக்கப்படும்போது பரிகாசம் செய்யும் விதத்தில் விரைவாகக் கொண்டுவரும்படி வேண்டிக்கொண்டிருந்தீர்கள்.”
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
51.15. நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் மறுமை நாளில் தோட்டங்களிலும் ஓடக்கூடிய நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اٰخِذِیْنَ مَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ؕ— اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِیْنَ ۟ؕ
51.16. அவர்கள் அங்கு தங்கள் இறைவன் வழங்கிய கண்ணியமான கூலியைப் பெற்றவர்களாக இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் கண்ணியமான இந்த கூலி வழங்கப்படுவதற்கு முன்னர் உலகில் நன்மை செய்வோராக இருந்தார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
كَانُوْا قَلِیْلًا مِّنَ الَّیْلِ مَا یَهْجَعُوْنَ ۟
51.17. அவர்கள் இரவில் தொழக்கூடியவர்களாவும் குறைவான நேரமே தூங்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَبِالْاَسْحَارِ هُمْ یَسْتَغْفِرُوْنَ ۟
51.18. (ஸஹர்) பின்னிரவு நேரங்களில் தங்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரக்கூடியவர்களாக இருந்தார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَفِیْۤ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآىِٕلِ وَالْمَحْرُوْمِ ۟
51.19. அவர்களின் செல்வங்களில் யாசிக்கக்கூடியவர்களுக்கும் ஏதேனும் ஒரு காரணத்தினால் வாழ்வாதாரமில்லாவிட்டாலும் வெட்கத்தின் காரணமாக யாசிக்காதவர்களுக்கும் உரிமை இருந்தது.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَفِی الْاَرْضِ اٰیٰتٌ لِّلْمُوْقِنِیْنَ ۟ۙ
51.20. பூமியிலும் அல்லாஹ் அதில் ஏற்படுத்தியுள்ள மலைகள், கடல்கள், ஆறுகள், மரங்கள், செடிகொடிகள், விலங்குகள் ஆகிவற்றில் நிச்சயமாக அல்லாஹ்வே படைத்து வடிவம் கொடுப்பவன் என்பதை உறுதியாக நம்பக்கூடிய மக்களுக்கு அவனுடைய வல்லமையை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَفِیْۤ اَنْفُسِكُمْ ؕ— اَفَلَا تُبْصِرُوْنَ ۟
51.21. -மனிதர்களே!- உங்களுக்குள்ளும் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் படிப்பினை பெறும்பொருட்டு பார்க்கமாட்டீர்களா?
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَفِی السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ ۟
51.22. வானத்தில்தான் உங்களின் உலக, மத வாழ்வாதாரம் இருக்கின்றது. உங்களுக்கு வாக்களிக்கப்படும் நன்மையும் தீமையும் அங்குதான் இருக்கின்றன.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ ۟۠
51.23. வானம் மற்றும் பூமியின் இறைவனின்மீது ஆணையாக, நிச்சயமாக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது நிகழ்ந்தே தீரும். நீங்கள் பேசும் போது உங்கள் பேச்சில் எவ்வாறு சந்தேகம் இல்லையோ அது போன்றே அதிலும் எத்தகைய சந்தேகமும் இல்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
هَلْ اَتٰىكَ حَدِیْثُ ضَیْفِ اِبْرٰهِیْمَ الْمُكْرَمِیْنَ ۟ۘ
51.24. -தூதரே!- இப்ராஹீம் கௌரவப்படுத்திய வானவர்களான அவரின் விருந்தாளிகளின் செய்தி உம்மிடம் வந்ததா?
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ— قَالَ سَلٰمٌ ۚ— قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
51.25. அவர்கள் அவரிடம் வந்தபோது (சலாம்) சாந்தி உண்டாகட்டும் என்று கூறினார்கள். அதற்கு இப்ராஹீமும் “சாந்தி உண்டாகட்டும்” என்று பதில் கூறினார். “இவர்கள் நாம் அறியாத மக்களாக இருக்கிறார்களே” என்று அவர் தம் மனதிற்குள் கூறிக் கொண்டார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَرَاغَ اِلٰۤی اَهْلِهٖ فَجَآءَ بِعِجْلٍ سَمِیْنٍ ۟ۙ
51.26. அவர் தம் குடும்பத்தாரிடம் இரகசியமாகச் சென்று வந்துள்ளவர்களை மனிதர்கள் என்று நினைத்து ஒரு கொழுத்த முழுமையான காளைக்கன்றைக் கொண்டு வந்தார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَقَرَّبَهٗۤ اِلَیْهِمْ قَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ؗ
51.27. அதனை அவர்களுக்கு அருகில் வைத்து “உங்களுக்கு வழங்கப்பட்ட உணவை உண்ணமாட்டீர்களா” என்று மென்மையாக உரையாடினார்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ— قَالُوْا لَا تَخَفْ ؕ— وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟
51.28. அவர்கள் உண்ணாததால் அவர் மனதில் அவர்களால் ஏற்பட்ட அச்சத்தை மறைத்துக்கொண்டார். அதனை உணர்ந்துகொண்ட அவர்கள் அவரை அமைதிப்படுத்தியவர்களாகக் கூறினார்கள்: “பயப்படாதீர். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்களாவோம்.” அவருக்கு அதிக கல்வியறிவு கொண்ட ஒரு மகன் பிறப்பான் என்று நற்செய்தி கூறினார்கள். இஸ்ஹாக் (அலை) அவர்களே அவ்வாறு நற்செய்தி கூறப்பட்டவர்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِیْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِیْمٌ ۟
51.29. அவருடைய மனைவி இந்த நற்செய்தியை செவியுற்றவுடன் மகிழ்ச்சியால் சப்தமிட்டாள். தம் முகத்தில் அடித்துக் கொண்டாள். வியப்புடன் கூறினாள்: “அடிப்படையில் மலடியான ஒரு கிழவி குழந்தை பெறுவாளா?!”
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالُوْا كَذٰلِكِ ۙ— قَالَ رَبُّكِ ؕ— اِنَّهٗ هُوَ الْحَكِیْمُ الْعَلِیْمُ ۟
51.30. வானவர்கள் அவளிடம் கூறினார்கள்: “உம் இறைவன் கூறியதைத்தான் நாம் உமக்கு அறிவிக்கின்றோம். அவன் கூறியதை யாரும் மறுக்க முடியாது. நிச்சயமாக அவன் தன் படைப்பிலும், நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன். தன் படைப்புகளைக் குறித்தும் அவர்களுக்கு அவசியமானது குறித்தும் நன்கறிந்தவன்.”
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
អំពី​អត្ថប្រយោជន៍​នៃវាក្យខណ្ឌទាំងនេះនៅលើទំព័រនេះ:
• إحسان العمل وإخلاصه لله سبب لدخول الجنة.
1. ஒரு செயலை நல்ல முறையில் செய்வதும் அதனை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்காகவே செய்வதும் சுவனத்தின் நுழைவதற்குக் காரணமாகும்.

• فضل قيام الليل وأنه من أفضل القربات.
2. இரவுத் தொழுகையின் சிறப்பு. நிச்சயமாக அது மிகச் சிறந்த வணக்கங்களில் உள்ளதாகும்.

• من آداب الضيافة: رد التحية بأحسن منها، وتحضير المائدة خفية، والاستعداد للضيوف قبل نزولهم، وعدم استثناء شيء من المائدة، والإشراف على تحضيرها، والإسراع بها، وتقريبها للضيوف، وخطابهم برفق.
3. விருந்தின் ஒழுக்கங்களில் சில: அழகிய முறையில் முகமனுக்குப் பதிலளித்தல், உணவுத் தட்டை மறைமுகமாகக் கொண்டுவருதல், விருந்தினர்கள் வருவதற்கு முன்னரே அவர்களுக்காக தயார்படுத்தி வைத்தல், உணவு தட்டிலிருந்து எதையும் தவிர்க்காமல் இருத்தல், அதனைத் தயாரிப்பதை கண்காணித்தல், அதனை விரைவுபடுத்தல், அதனை அவர்களுக்கு அருகில் வைத்தல், அவர்களுடன் மென்மையாக உரையாடுதல்.

 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាស់ហ្សារីយ៉ាត
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន - មាតិកានៃការបកប្រែ

ត្រូវបានចេញដោយមជ្ឈមណ្ឌល តាហ្វសៀរនៃការសិក្សាគម្ពីគួរអាន

បិទ