Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន * - មាតិកានៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ម៉ាអ៊ីដះ   វាក្យខណ្ឌ:
وَقَالَتِ الْیَهُوْدُ وَالنَّصٰرٰی نَحْنُ اَبْنٰٓؤُا اللّٰهِ وَاَحِبَّآؤُهٗ ؕ— قُلْ فَلِمَ یُعَذِّبُكُمْ بِذُنُوْبِكُمْ ؕ— بَلْ اَنْتُمْ بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ؕ— یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ— وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؗ— وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟
5.18. யூதர்களும் கிறிஸ்தவர்களும், ‘தாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், அவனுடைய நேசர்கள்’ என்று வாதிடுகின்றனர். தூதரே! நீர் கூறுவீராக: “அப்படியென்றால் நீங்கள் செய்த பாவங்களின் காரணமாக அவன் ஏன் உங்களைத் தண்டிக்கிறான்? நீங்கள் கூறியவாறு நீங்கள் அவனுடைய நேசர்களாக இருந்தால் இவ்வுலகில் கொலை, உருமாற்றுதல் ஆகிய வேதனைகளாலும் மறுமையில் நெருப்பினாலும் தண்டித்திருக்கமாட்டான். ஏனெனில் அவன் தான் நேசிப்பவர்களை தண்டிக்கமாட்டான். மாறாக மற்ற மனிதர்களைப் போல நீங்களும் மனிதர்கள்தாம். நன்மை செய்தோருக்கு அவன் சுவனத்தை கூலியாக வழங்குகிறான். தீமை செய்தோருக்கு அவன் நரகத்தை தண்டனையாக வழங்குகிறான். தான் நாடியவர்களைத் தன் அருளால் மன்னிக்கிறான்; தான் நாடியவர்களை தன் நீதியால் தண்டிக்கிறான். வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடைப்பட்டுள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் பக்கமே திரும்ப வேண்டும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ عَلٰی فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْ بَشِیْرٍ وَّلَا نَذِیْرٍ ؗ— فَقَدْ جَآءَكُمْ بَشِیْرٌ وَّنَذِیْرٌ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
5.19. வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களே! தூதர்கள் அற்ற ஒரு இடைவெளிக்குப் பிறகு, ஓரு தூதர் அனுப்பப்படுவதற்கான கடும் தேவை நிலவியதன் பின்னால் நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உங்களிடம் வந்துள்ளார். ஏனெனில், நன்மையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடிய தண்டனையைக் கொண்டு எச்சரிக்கை செய்யக்கூடிய எந்தத் தூதரும் எங்களிடம் வரவில்லை என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காகத்தான். உங்களிடம் நன்மையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியவராகவும் தண்டனையைக் கொண்டு எச்சரிக்கை செய்யக்கூடியவராகவும் முஹம்மது வந்துவிட்டார். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனைவிட்டுத் தப்பிவிட முடியாது. தூதர்களை அனுப்புவதும் தூதுத்துவத்தை முஹம்மதைக் கொண்டு நிறைவு செய்வதும் அவனது ஆற்றலில் உள்ளடங்கியவைதான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَعَلَ فِیْكُمْ اَنْۢبِیَآءَ وَجَعَلَكُمْ مُّلُوْكًا ۗ— وَّاٰتٰىكُمْ مَّا لَمْ یُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِیْنَ ۟
5.20. தூதரே! மூஸா இஸ்லாஈலின் சந்ததியான தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “என் சமூகமே! உங்கள் உள்ளத்தாலும் நாவாலும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். அவன் உங்களிடையே நேர்வழியின் பக்கம் அழைக்கும் தூதர்களை ஏற்படுத்தினான். நீங்கள் அடிமைப்பட்டு ஆளப்படுவோராக இருந்த பின்னர் உங்களை நீங்களே ஆளுவோராக ஆக்கினான். உங்களின் காலகட்டத்தில் யாருக்கும் வழங்காத அருட்கொடைகளையெல்லாம் உங்களுக்கு வழங்கினான்.”
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
یٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِیْ كَتَبَ اللّٰهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰۤی اَدْبَارِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِیْنَ ۟
5.21. மூஸா கூறினார்: “எனது கூட்டமே! புனித பூமியில் (பைத்துல் முகத்தசும் அதைச் சுற்றியுள்ள பகுதியில்) நுழையுங்கள். அங்கு நுழைவீர்கள், அங்கிருக்கும் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவீர்கள் என்பதையும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்துள்ளான். அநியாயக்காரர்களுக்கு முன்னால் புறங்காட்டி ஓடிவிடாதீர்கள். இல்லாவிட்டால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீங்கள் இழப்பையே சந்திப்பீர்கள்.”
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّ فِیْهَا قَوْمًا جَبَّارِیْنَ ۖۗ— وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰی یَخْرُجُوْا مِنْهَا ۚ— فَاِنْ یَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دٰخِلُوْنَ ۟
5.22. அவரது சமூகத்தார் கூறினார்கள்: “மூஸாவே! புனித பூமியில் பலம் பொருந்திய கடுமையாகப் போர் புரியும் ஒரு சமூகத்தார் இருக்கிறார்கள். இதனால் நாம் உள்ளே செல்ல முடியவில்லை. அவர்கள் அங்கிருக்கும் வரை நாங்கள் அங்கு நுழைய மாட்டோம். ஏனெனில் அவர்களுடன் போரிடுவதற்கு எங்களிடம் எந்தப் பலமும் இல்லை. அவர்கள் வெளியேறி விட்டால் நாங்கள் அங்கு நுழைவோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِیْنَ یَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمَا ادْخُلُوْا عَلَیْهِمُ الْبَابَ ۚ— فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ ۚ۬— وَعَلَی اللّٰهِ فَتَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
5.23. மூஸாவின் தோழர்களில் அல்லாஹ்வையும் அவனது தண்டனையையும் அஞ்சிய இரு மனிதர்கள் இருந்தார்கள் - அவர்கள் இருவருக்கும் அல்லாஹ் தனக்குக் கட்டுப்படும் பாக்கியத்தை அளித்து அருள்புரிந்திருந்தான் - அவர்கள் தங்கள் சமூகத்தாருக்கு மூஸா (அலை) அவர்களது ஏவலுக்குக் கட்டுப்படுமாறு ஆர்வமூட்டியவர்களாக கூறினார்கள், “நகரின் வாயிலில் அநியாயக்காரர்களுக்கு எதிராக நுழைந்துவிடுங்கள். நீங்கள் நுழைந்துவிட்டால் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு நீங்கள்தாம் வெற்றியடைவீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு வெளிப்படையான காரணிகளைக் கடைப்பிடிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதே இறைவன் அமைத்த நியதியாகும். நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வையுங்கள். அல்லாஹ்வை ஈமான் கொள்வது அவனை முழுமையாக நம்புவதை வேண்டிநிற்கின்றது.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
អំពី​អត្ថប្រយោជន៍​នៃវាក្យខណ្ឌទាំងនេះនៅលើទំព័រនេះ:
• تعذيب الله تعالى لكفرة بني إسرائيل بالمسخ وغيره يوجب إبطال دعواهم في كونهم أبناء الله وأحباءه.
1. இஸ்ராயீலின் மக்களிலுள்ள நிராகரிப்பாளர்களை அல்லாஹ் உருமாற்றுதல் மற்றும் இன்னபிற வேதனைகளைக் கொண்டு தண்டித்தது ‘நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், அவனது நேசர்கள்’ என்ற அவர்களின் வாதத்தை பொய்யெனக் காட்டுகிறது.

• التوكل على الله تعالى والثقة به سبب لاستنزال النصر.
2. அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பது அவனுடைய உதவியைப் பெற்றுத்தரும் முக்கிய காரணியாகும்.

• جاءت الآيات لتحذر من الأخلاق الرديئة التي كانت عند بني إسرائيل.
3. இஸ்ராயீலின் மக்களிடமிருந்த தீய குணங்களை எச்சரிக்கும் விதமாக இவ்வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

• الخوف من الله سبب لنزول النعم على العبد، ومن أعظمها نعمة طاعته سبحانه.
4. அல்லாஹ்வை அஞ்சுவது அடியானின் மீது அல்லாஹ்வின் அருள்கள் இறங்குவதற்குக் காரணமாகும். அவற்றில் மிகப் பிரதானமானது அவனுக்கு வழிப்படும் பாக்கியமாகும்.

 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ម៉ាអ៊ីដះ
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន - មាតិកានៃការបកប្រែ

ត្រូវបានចេញដោយមជ្ឈមណ្ឌល តាហ្វសៀរនៃការសិក្សាគម្ពីគួរអាន

បិទ