Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន * - មាតិកានៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាស្ហ់ស្ហ៊ូរ៉   វាក្យខណ្ឌ:
وَمِنْ اٰیٰتِهِ الْجَوَارِ فِی الْبَحْرِ كَالْاَعْلَامِ ۟ؕ
42.32. அவன் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவைதான், கடலில் செல்லும் மலைகளைப் போன்ற மலைகளைப் போன்ற உயர்ந்த கப்பல்களாகும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنْ یَّشَاْ یُسْكِنِ الرِّیْحَ فَیَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰی ظَهْرِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟ۙ
42.33. அவன் அவற்றை இழுத்துச் செல்லும் காற்றை நிறுத்த நாடியிருந்தால் நிறுத்தியிருப்பான். அவை அசையாதவாறு கடலில் ஸ்தம்பித்துவிடும். நிச்சயமாக இவ்வாறு குறிப்பிடப்பட்ட கப்பல்களை படைத்திருப்பதிலும் காற்றுகளை வசப்படுத்தித் தந்திருப்பதிலும் துன்பங்களை பொறுமையாக எதிர்கொள்ளக்கூடிய, அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடிய ஒவ்வொருவருக்கும் தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اَوْ یُوْبِقْهُنَّ بِمَا كَسَبُوْا وَیَعْفُ عَنْ كَثِیْرٍ ۟ۙ
42.34. அல்லது புயல்காற்றை அனுப்பி இந்த கப்பல்களை அழிக்க நாடினால் மனிதர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவற்றை அழித்திருப்பான். அவன் தன் அடியார்களின் அதிகமான பாவங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடியவன். எனவேதான் அவற்றுக்காக அவன் அவர்களைத் தண்டிப்பதில்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَّیَعْلَمَ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِنَا ؕ— مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟
42.35. புயல்காற்றை அனுப்பி நாம் கப்பல்களை மூழ்கடிக்கும்போது அல்லாஹ்வின் வசனங்களில் அதை பொய்யாக்குவதற்காக தர்க்கம் புரிபவர்கள் அழிவிலிருந்து தாங்கள் எங்கும் தப்பிச் செல்ல முடியாது என்பதை அறிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வையே அழைப்பார்கள். மற்றவர்களை விட்டுவிடுவார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَمَاۤ اُوْتِیْتُمْ مِّنْ شَیْءٍ فَمَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ وَّاَبْقٰی لِلَّذِیْنَ اٰمَنُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚ
42.36. -மனிதர்களே!- உங்களுக்கு வழங்கப்பட்ட செல்வங்கள், குழந்தைகள், பதவிகள் இன்னபிற விஷயங்கள் அனைத்தும் உலக வாழ்வின் இன்பங்கள்தாம். அவை அழிபவையே, துண்டிக்கப்படுபவையே. தன்மீதும் தன் தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள சுவனத்தின் இன்பமே நிலையான இன்பமாகும். அவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் தங்கள் இறைவனை மட்டுமே சார்ந்திருப்பார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَالَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ وَاِذَا مَا غَضِبُوْا هُمْ یَغْفِرُوْنَ ۟ۚ
42.37. அவர்கள் பெரும் பாவங்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் தூரமாகியிருக்கிறார்கள். தங்களுக்கு சொல்லாலும் செயலாலும் தீங்கிழைத்தவர்கள் மீது கோபம் கொண்டால் அவர்களின் தவறுகளை மன்னித்துவிடுவார்கள். அதற்காக பழிவாங்கமாட்டார்கள். அவர்களை மன்னிப்பதில் நலவு, நன்மையிருப்பின் இவ்வாறு மன்னிப்பது அவர்கள் செய்யும் பேருபகாரமாகும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَالَّذِیْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ ۪— وَاَمْرُهُمْ شُوْرٰی بَیْنَهُمْ ۪— وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ۚ
42.38. அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனுக்குப் பதிலளிக்கிறார்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள். முக்கியமான விஷயங்களில் தங்களிடையே ஆலோசனை செய்துகொள்வார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நம் திருப்தியை நாடி செலவும் செய்வார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَالَّذِیْنَ اِذَاۤ اَصَابَهُمُ الْبَغْیُ هُمْ یَنْتَصِرُوْنَ ۟
42.39. தங்கள்மீது அநீதி இழைக்கப்பட்டால் அநியாயக்காரன் மன்னிப்பிற்குத் தகுதியானவன் இல்லையெனில் தங்களின் கண்ணியத்தைக் காக்கும்பொருட்டு பழிவாங்குவார்கள். இவ்வாறு பழிவாங்குவது அவர்களின் உரிமையாகும். குறிப்பாக மன்னிப்பதில் எந்த நலவும் இல்லையெனில்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَجَزٰٓؤُا سَیِّئَةٍ سَیِّئَةٌ مِّثْلُهَا ۚ— فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ— اِنَّهٗ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟
42.40. தன் உரிமையைப் பெற விரும்புபவர் அதனை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் எவ்வித அதிகரிப்பு, வரம்புமீறலுமின்றி சரிக்கு சமமான அளவே அவர் பழிவாங்க வேண்டும். யார் தனக்குத் தீங்கிழைத்தவரைத் தண்டிக்காமல் மன்னித்துவிடுவாரோ, தனக்கும் தன் சகோதரனுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்திக் கொண்டாரோ அவருடைய கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அல்லாஹ் மக்களின் செல்வங்களிலோ, உயிர்களிலோ, மானத்திலோ அநியாயம் இழைக்கும் அநியாயக்காரர்களை விரும்புவதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهٖ فَاُولٰٓىِٕكَ مَا عَلَیْهِمْ مِّنْ سَبِیْلٍ ۟ؕ
42.41. யார் தமக்காக பழிவாங்குகிறார்களோ அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. பழிவாங்குவதனால் அவர்கள் தங்களின் உரிமையைத்தான் பெறுகிறார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّمَا السَّبِیْلُ عَلَی الَّذِیْنَ یَظْلِمُوْنَ النَّاسَ وَیَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
42.42. நிச்சயமாக மக்களின் மீது அநீதி இழைத்து பூமியில் பாவங்கள் புரிபவர்களுக்குத்தான் குற்றம் சுமத்த வழி இருக்கிறது. அவர்களுக்கு மறுமையில் வேதனைமிக்க தண்டனை இருக்கின்றது.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟۠
42.43. யார் மற்றவர்கள் தமக்கு அளித்த தீங்குகளை பொறுமையாக சகித்து, கண்டுகொள்ளாமல் மன்னித்து விட்டுவிட்டாரோ அது அவருக்கும் சமூகத்திற்கும் நன்மைதரக்கூடியதாகும். இது புகழுக்குரிய விஷயமாகும். பெரும் பாக்கியம் பெற்றவர்களே இதற்கு வழிகாட்டப்படுவார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ وَّلِیٍّ مِّنْ بَعْدِهٖ ؕ— وَتَرَی الظّٰلِمِیْنَ لَمَّا رَاَوُا الْعَذَابَ یَقُوْلُوْنَ هَلْ اِلٰی مَرَدٍّ مِّنْ سَبِیْلٍ ۟ۚ
42.44. யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டாமல் சத்தியத்தைவிட்டு அவரை வழிகெடுத்துவிடுவானோ அவனுக்கு அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுடைய காரியத்தை பொறுப்பெடுக்கும் எந்த பொறுப்பாளனும் இல்லை. நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்கள் வேதனையைக் காணும் போது “நாங்கள் உலகிற்கு திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவதற்கு ஏதேனும் வழி உண்டா?” என்று அவர்கள் ஆசைப்பட்டு கூறுவதை நீர் காண்பீர்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
អំពី​អត្ថប្រយោជន៍​នៃវាក្យខណ្ឌទាំងនេះនៅលើទំព័រនេះ:
• الصبر والشكر سببان للتوفيق للاعتبار بآيات الله.
1. பொறுமையும் நன்றிசெலுத்துவதும் அல்லாஹ்வின் சான்றுகளைக் கொண்டு படிப்பினைபெறும் பாக்கியத்தைப் பெற்றுத்தரும் இரு காரணிகளாக இருக்கின்றன.

• مكانة الشورى في الإسلام عظيمة.
2. இஸ்லாத்தில் கலந்தாலோசனை செய்வதின் முக்கியத்துவம் மகத்தானதாகும்.

• جواز مؤاخذة الظالم بمثل ظلمه، والعفو خير من ذلك.
3. அநியாயக்காரனின் அநியாயத்திற்கு ஏற்ப தண்டிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அதனை விட மன்னிப்பே சிறந்ததாகும்.

 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាស្ហ់ស្ហ៊ូរ៉
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន - មាតិកានៃការបកប្រែ

ត្រូវបានចេញដោយមជ្ឈមណ្ឌល តាហ្វសៀរនៃការសិក្សាគម្ពីគួរអាន

បិទ