Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន * - មាតិកានៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: ហ្វូសស៊ីឡាត់   វាក្យខណ្ឌ:
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنَّكَ تَرَی الْاَرْضَ خَاشِعَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَیْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ ؕ— اِنَّ الَّذِیْۤ اَحْیَاهَا لَمُحْیِ الْمَوْتٰی ؕ— اِنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
41.39. அவனுடைய கண்ணியத்தையும் வல்லமையையும் அவன் ஒருவனே என்பதையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதையும் அறிவிக்கும் சான்றுகளில் ஒன்று, தாவரங்களற்ற பூமியை நீர் காணுவதாகும். நாம் அதன்மீது மழை நீரை இறக்கியவுடன் மறைந்திருந்த விதைகள் வெளிப்பட்டு செழித்து உயர்ந்து வளர்கிறது. நிச்சயமாக இந்த இறந்த பூமியை தாவரங்களைக் கொண்டு உயிர்ப்பித்தவன் இறந்தவர்களை விசாரணைக்காகவும், கூலி வழங்கவும் உயிர்ப்பிக்கக்கூடியவன். நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். வறண்ட பூமியை உயிர்பெறச் செய்வதும் அடக்கஸ்த்தளத்திலிருந்து இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு இயலாத ஒன்றல்ல.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّ الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اٰیٰتِنَا لَا یَخْفَوْنَ عَلَیْنَا ؕ— اَفَمَنْ یُّلْقٰی فِی النَّارِ خَیْرٌ اَمْ مَّنْ یَّاْتِیْۤ اٰمِنًا یَّوْمَ الْقِیٰمَةِ ؕ— اِعْمَلُوْا مَا شِئْتُمْ ۙ— اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
41.40. நிச்சயமாக அல்லாஹ்வின் வசனங்களில் தவறிழைப்பவர்கள் அவற்றை நிராகரிப்பவர்கள், பொய்ப்பிப்பவர்கள் அவற்றிற்கு தவறான பொருள் கற்பிக்கின்றவர்கள் நம்மைவிட்டும் மறைவாக இல்லை. நாம் அவர்களை நன்கறிவோம். நரகத்தில் வீசி எறியப்படுபவர் சிறந்தவரா? அல்லது வேதனையிலிருந்து பாதுகாவல் பெற்றவராக மறுமை நாளில் வருபவர் சிறந்தவரா? -மக்களே!- நீங்கள் விரும்பியபடி நன்மையையோ, தீமையையோ செய்யுங்கள். ஏனெனில் நாம் உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தெளிவுபடுத்தி விட்டோம். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் அவற்றில் எதனைச் செய்கிறீர்கள் என்பதைப் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِالذِّكْرِ لَمَّا جَآءَهُمْ ۚ— وَاِنَّهٗ لَكِتٰبٌ عَزِیْزٌ ۟ۙ
41.41. நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து தங்களிடம் வந்த குர்ஆனை நிராகரிப்பவர்கள் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
لَّا یَاْتِیْهِ الْبَاطِلُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَلَا مِنْ خَلْفِهٖ ؕ— تَنْزِیْلٌ مِّنْ حَكِیْمٍ حَمِیْدٍ ۟
41.42. அதனை யாராலும் திரிக்கவோ மாற்றவோ முடியாது. கூட்டியோ குறைத்தோ திரித்தோ மாற்றியோ எவ்விதமான அசத்தியமும் அதன் முன்னாலிருந்தோ பின்னாலிருந்தோ வர முடியாது. அது படைப்பிலும் நிர்ணயத்திலும் சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்க, எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
مَا یُقَالُ لَكَ اِلَّا مَا قَدْ قِیْلَ لِلرُّسُلِ مِنْ قَبْلِكَ ؕ— اِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ وَّذُوْ عِقَابٍ اَلِیْمٍ ۟
41.43. வேதத்தை மறுப்பவர்களின் நிலையைக் குறிப்பிட்ட பிறகு, தனது தூதர் முஹம்மதுக்கு முன்னால் வந்துசென்ற அவரது சகோதரர்களான முந்தைய தூதர்கள் எதிர்கொண்ட நிராகரிப்பு, பரிகாசம், அவதூறு ஆகிவற்றை எடுத்துக்கூறி அவருக்கு ஆறுதல் அளிக்கிறான். அவன் கூறுகிறான்: -தூதரே!- உமக்கு முன்னர் தூதர்களுக்கு கூறப்பட்டது போன்ற நிராகரிப்பே உமக்கும் கூறப்படுகிறது. ஆகவே நீர் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. நிச்சயமாக உம் இறைவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் பாவமன்னிப்புக் கோராமல் பாவங்களில் நிலைத்திருப்பவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِیًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰیٰتُهٗ ؕ— ءَاَؔعْجَمِیٌّ وَّعَرَبِیٌّ ؕ— قُلْ هُوَ لِلَّذِیْنَ اٰمَنُوْا هُدًی وَّشِفَآءٌ ؕ— وَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ فِیْۤ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَیْهِمْ عَمًی ؕ— اُولٰٓىِٕكَ یُنَادَوْنَ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟۠
41.44. நாம் இந்த குர்ஆனை அரபி அல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால் அவர்களில் நிராகரிப்பாளர்கள், “நாங்கள் புரிந்துகொள்வதற்காக இதன் வசனங்கள் தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டாமா? என்றும் கொண்டுவந்தவர் அரபியாக இருக்கும் நிலையில் வேதமோ வேறு மொழியில் இருக்கலாமா?! என்றும் கூறியிருப்பார்கள். -தூதரே!- இவர்களிடம் நீர் கூறுவீராக: “இந்த அல்குர்ஆன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர்களைப் உண்மைப்படுத்துவோருக்கு வழிகேட்டை விட்டும் நேர்வழிகாட்டக்கூடியதாகவும் உள்ளங்களிலுள்ள அறியாமை, அதனை தொடர்ந்து வரும் நோய்களுக்கு நிவாரணியாகவும் இருக்கின்றது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்களின் செவிகளில் அடைப்பு உள்ளது. அவர்(கண்)களில் குருட்டுத்தனமும் உள்ளது. அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். இந்த பண்புகளால் வர்ணிக்கப்படுபவர்கள் தூரமான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்களைப் போன்றவர்கள். எனவே எவ்வாறு அவர்களால் அழைப்பவரின் சத்தத்தை செவியுற முடியும்?
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ— وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
41.45. நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர் அதன்மீது நம்பிக்கைகொண்டார்கள். சிலர் அதனை நிராகரித்தார்கள். ‘மறுமை நாளில் அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளவற்றில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான்’ என்ற வாக்குறுதி இருக்காவிட்டால் அவன் தவ்ராத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்களிடையே தீர்ப்பளித்திருப்பான். சத்திய
வாதிகளையும் அசத்தியவாதிகளையும் தெளிவுபடுத்தி சத்தியவாதிகளைக் கண்ணியப்படுத்தி அசத்தியவாதிகளை இழிவுபடுத்தியிருப்பான். நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் குர்ஆனைக் குறித்து சந்தேகத்தில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ— وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؕ— وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟
41.46. யார் நற்செயல் புரிவாரோ அதனால் ஏற்படும் நன்மை அவரையே சாரும். எவருடைய நற்செயலினாலும் அல்லாஹ்வுக்கு எந்தப் பயனும் இல்லை. யார் தீயசெயல் புரிவாரோ அதனால் ஏற்படும் தீங்கு அவரையே சாரும். அவனுடைய படைப்பினங்களில் எவருடைய தீயசெயலினாலும் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை. அவன் ஒவ்வொருவருக்கும் தகுந்த கூலியை வழங்கிடுவான். -தூதரே!- உம் இறைவன் தன் அடியார்களின் மீது அநீதி இழைப்பவன் அல்ல. ஒரு போதும் அவர்களின் நன்மைகளை குறைத்துவிடவோ, தீமைகளை அதிகரித்துவிடவோ மாட்டான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
អំពី​អត្ថប្រយោជន៍​នៃវាក្យខណ្ឌទាំងនេះនៅលើទំព័រនេះ:
• حَفِظ الله القرآن من التبديل والتحريف، وتَكَفَّل سبحانه بهذا الحفظ، بخلاف الكتب السابقة له.
1. அல்லாஹ் குர்ஆனை திரிவுக்கும், மாற்றத்திற்கும் உள்ளாவதிலிருந்து பாதுகாத்துள்ளான். முந்தைய வேதங்களுக்கு மாறாக அதனை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான்.

• قطع الحجة على مشركي العرب بنزول القرآن بلغتهم.
2. குர்ஆன் இணைவைப்பாளர்களின் மொழியில் இறங்கியிருப்பதால் அரேபிய இணைவைப்பாளர்களுக்கு ஆதாரம் இல்லாமல் சென்றுவிட்டது.

• نفي الظلم عن الله، وإثبات العدل له.
3. அநீதி இழைக்கும் பண்பு அல்லாஹ்வுக்கு இல்லையென மறுத்துரைக்கப்பட்டு அவன் நீதியானவன் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: ហ្វូសស៊ីឡាត់
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន - មាតិកានៃការបកប្រែ

ត្រូវបានចេញដោយមជ្ឈមណ្ឌល តាហ្វសៀរនៃការសិក្សាគម្ពីគួរអាន

បិទ