Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន * - មាតិកានៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អាំពីយ៉ាក   វាក្យខណ្ឌ:
وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْیَةٍ كَانَتْ ظَالِمَةً وَّاَنْشَاْنَا بَعْدَهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟
21.11. நிராகரித்து, அநீதியிழைத்ததனால் எவ்வளவோ ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். அவர்களுக்குப் பின்னர் வேறொரு சமூகத்தை உருவாக்கினோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَلَمَّاۤ اَحَسُّوْا بَاْسَنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَرْكُضُوْنَ ۟ؕ
21.12. அழிக்கப்படுவோர் அடியோடு அழிக்கும் நம்முடைய வேதனையைக் கண்டபோது அழிவிலிருந்து தப்ப, தமது ஊரைவிட்டு விரைந்து ஓடினார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
لَا تَرْكُضُوْا وَارْجِعُوْۤا اِلٰی مَاۤ اُتْرِفْتُمْ فِیْهِ وَمَسٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـَٔلُوْنَ ۟
21.13. பரிகாசமாக அவர்கள் அழைக்கப்பட்டார்கள்: “ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த உல்லாச வாழ்வின் பக்கம், உங்கள் வசிப்பிடங்களின் பக்கம் திரும்புங்கள். உங்கள் உலகிலிருந்து நீங்கள் எதையேனும் கேட்கப்படலாம்.”
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
21.14. இந்த அநியாயக்காரர்கள் தங்கள் பாவங்களை ஒத்துக் கொண்டவர்களாகக் கூறினார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! எங்களுக்கு ஏற்பட்ட இழப்பே! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் அநியாயக்காரர்களாகத்தான் இருந்தோம்.”
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَمَا زَالَتْ تِّلْكَ دَعْوٰىهُمْ حَتّٰی جَعَلْنٰهُمْ حَصِیْدًا خٰمِدِیْنَ ۟
21.15. அவர்கள் தங்கள் பாவங்களை ஒத்துக் கொள்வதும் தங்களுக்கு எதிராக அழிவை வேண்டுவதுமே அவர்கள் திரும்பத் திரும்பச் செய்யும் பிரார்த்தனையாக இருந்தது. நாம் அவர்களை அறுவடை செய்யப்பட்ட பயிரைப்போன்று, உயிரற்ற ஜடங்களாக ஆக்கிவிடும் வரை அவ்வாறே கூறிக்கொண்டிருந்தார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟
21.16. வானத்தையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் நாம் வீணாகப் படைக்கவில்லை. மாறாக நம்முடைய வல்லமையை அறிவிப்பதற்காகவே நாம் அவற்றைப் படைத்துள்ளோம்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
لَوْ اَرَدْنَاۤ اَنْ نَّتَّخِذَ لَهْوًا لَّاتَّخَذْنٰهُ مِنْ لَّدُنَّاۤ ۖۗ— اِنْ كُنَّا فٰعِلِیْنَ ۟
21.17. நாம் மனைவியையோ மகனையோ ஏற்படுத்த நாடியிருந்தால் நம்மிடம் இருப்பவற்றிலிருந்து எடுத்திருப்போம். அதனை விட்டும் நாம் தூய்மையானவர்கள் என்பதனால் நாம் அதனைச் செய்பவர்களல்ல.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَی الْبَاطِلِ فَیَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ ؕ— وَلَكُمُ الْوَیْلُ مِمَّا تَصِفُوْنَ ۟
21.18. மாறாக நாம் நம் தூதருக்கு அறிவிக்கும் சத்தியத்தைக் கொண்டு நிராகரிப்பாளர்களின் அசத்தியத்தைத் தாக்குகின்றோம். அது அசத்தியத்தை அடித்து நொறுக்கி விடுகிறது. அசத்தியம் அழிந்துவிடுகிறது. -அல்லாஹ்வுக்கு மனைவியோ மகனோ உண்டு என்று கூறக்கூடியவர்களே!- அவனுக்குத் தகுதியில்லாததைக்கொண்டு நீங்கள் வர்ணிப்பதால் உங்களுக்கு அழிவுதான் உண்டாகும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَمَنْ عِنْدَهٗ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا یَسْتَحْسِرُوْنَ ۟ۚ
21.19. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனிடம் உள்ள வானவர்கள் அவனை கர்வத்தினால் வணங்காமலிருக்கவும் மாட்டார்கள். வணங்கியதால் களைப்படைந்துவிடவும் மாட்டார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
یُسَبِّحُوْنَ الَّیْلَ وَالنَّهَارَ لَا یَفْتُرُوْنَ ۟
21.20. எப்பொழுதும் அவனைப் புகழ்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் சோர்வடைவதில்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اَمِ اتَّخَذُوْۤا اٰلِهَةً مِّنَ الْاَرْضِ هُمْ یُنْشِرُوْنَ ۟
21.21. மாறாக இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவற்றால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது. அவ்வாறு செய்ய இயலாத தெய்வங்களை எவ்வாறு அவர்கள் வணங்குகிறார்கள்?!
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
لَوْ كَانَ فِیْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَفَسَدَتَا ۚ— فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟
21.22. வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் அல்லாத பல தெய்வங்கள் இருந்தால் அவைகளின் ஆட்சிக்கான போராட்டத்தினால் அவ்விரண்டும் சீர்கெட்டுப் போயிருக்கும். ஆனால் நடைமுறை அதற்கு மாற்றமாகவே உள்ளது. நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என இணைவைப்பாளர்கள் பொய்யாக கூறும் வர்ணனைகளை விட்டும் அர்ஷின்அதிபதியான அல்லாஹ் தூய்மையானவன்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
لَا یُسْـَٔلُ عَمَّا یَفْعَلُ وَهُمْ یُسْـَٔلُوْنَ ۟
21.23. ஆட்சியதிகாரத்திலும் விதியை நிர்ணயிப்பதிலும் அல்லாஹ் தனித்தவன். அவன் ஏற்படுத்திய விதியை, தீர்ப்பைக் குறித்து எவரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அவன் தன் அடியார்களின் செயல்களைக்குறித்து கேள்வி கேட்பான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً ؕ— قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ ۚ— هٰذَا ذِكْرُ مَنْ مَّعِیَ وَذِكْرُ مَنْ قَبْلِیْ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۙ— الْحَقَّ فَهُمْ مُّعْرِضُوْنَ ۟
21.24. மாறாக அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அவை வணக்கத்திற்கு தகுதியானவை என்பதற்கான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். என்மீது இறக்கப்பட்ட இந்த வேதத்திலும் முந்தைய தூதர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களிலும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக பெரும்பான்மையான இணைவைப்பாளர்கள் அறியாமையையும், குருட்டுத்தனமாக பின்பற்றுவதையுமே ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதை விட்டும் புறக்கணிக்கிறார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
អំពី​អត្ថប្រយោជន៍​នៃវាក្យខណ្ឌទាំងនេះនៅលើទំព័រនេះ:
• الظلم سبب في الهلاك على مستوى الأفراد والجماعات.
1. தனிமனிதர்களானாலும், சமூகங்களானாலும் அநியாயம் இழைப்பது அழிவிற்குக் காரணமாக அமைகிறது.

• ما خلق الله شيئًا عبثًا؛ لأنه سبحانه مُنَزَّه عن العبث.
2. அல்லாஹ் எந்த ஒன்றையும் வீணாகப் படைக்கவில்லை. நிச்சயமாக அவன் வீணாகப் படைப்பதைவிட்டும் தூய்மையானவன்.

• غلبة الحق، ودحر الباطل سُنَّة إلهية.
3. சத்தியம் வெற்றி பெறுவதும் அசத்தியத்தை அழிப்பதும் இறை நியதியாகும்.

• إبطال عقيدة الشرك بدليل التَّمَانُع.
4. “பல தெய்வங்களை வணக்கத்திற்குரியவையாக இருந்தால் வானமும் பூமியும் சிரழிந்துவிடும்” என்ற ஆதாரத்தினடிப்படையில் இணைவைப்புக்கொள்கை தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது.

 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អាំពីយ៉ាក
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន - មាតិកានៃការបកប្រែ

ត្រូវបានចេញដោយមជ្ឈមណ្ឌល តាហ្វសៀរនៃការសិក្សាគម្ពីគួរអាន

បិទ