Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន * - មាតិកានៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ហ្ពាក៏រ៉ោះ   វាក្យខណ្ឌ:
وَلَا تَقُوْلُوْا لِمَنْ یُّقْتَلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ— بَلْ اَحْیَآءٌ وَّلٰكِنْ لَّا تَشْعُرُوْنَ ۟
2.154. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் ஜிஹாதில் கொல்லப்பட்டவர்களை மற்றவர்களைப்போன்று இறந்தவர்கள் என்று கூறாதீர்கள். அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் உயிருடன் உள்ளார்கள். ஆயினும் அவர்கள் வாழ்வதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியாது. ஏனெனில் அது வஹியின் மூலமாகவே அன்றி யாராலும் அறிந்துகொள்ள முடியாத பிரத்யேகமான வாழ்க்கையாகும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ ؕ— وَبَشِّرِ الصّٰبِرِیْنَ ۟ۙ
2.155. எதிரிகள் குறித்த பயம், உணவுப்பற்றாக்குறையால் ஏற்படும் பசி, அழிதல் அல்லது பெறுவதற்கு சிரமம் ஆகியவற்றால் செல்வம் குறைதல், பேரழிவுகளினால் அல்லது அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைதலினால் ஏற்படும் உயிர்ச்சேதம், பூமியில் விளையும் பழங்களின் பற்றாக்குறை ஆகிய பல்வேறு துன்பங்களால் நிச்சயம் நாம் உங்களைச் சோதிப்போம். தூதரே! இத்தகைய துன்பங்களை பொறுமையாக எதிர்கொள்பவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் மகிழ்ச்சி காத்திருக்கின்றது என்ற நற்செய்தியைக் கூறுவீராக.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
الَّذِیْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ ۙ— قَالُوْۤا اِنَّا لِلّٰهِ وَاِنَّاۤ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟ؕ
2.156. அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அதனை ஏற்றுக்கொண்டு, நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அவன் நாடியவாறு நம்மை ஆட்சிசெய்கின்றான். மறுமையில் அவன் பக்கமே நாம் திரும்பக்கூடியவர்கள். அவன்தான் நம்மைப்படைத்தான்; பல்வேறு அருட்கொடைகளைக்கொண்டு நம்மைச் சிறப்பித்தான். அவன் பக்கமே நாம் திரும்ப வேண்டியுள்ளது” என்று கூறுவார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۫— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ ۟
2.157. இத்தகைய பண்புகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டவர்களை அல்லாஹ் வானவர்களிடத்தில் புகழ்ந்து கூறுகிறான். அவர்கள்மீது அவனுடைய அருள் இறங்குகின்றது. அவர்கள்தாம் சத்தியத்தின் பக்கம் நேர்வழிபெற்றவர்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآىِٕرِ اللّٰهِ ۚ— فَمَنْ حَجَّ الْبَیْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیْهِ اَنْ یَّطَّوَّفَ بِهِمَا ؕ— وَمَنْ تَطَوَّعَ خَیْرًا ۙ— فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِیْمٌ ۟
2.158. கஅபாவிற்கு அருகில் அமைந்துள்ள ஸஃபா,மர்வா என்ற இரு மலைகளும் மார்க்கத்தின் வெளிப்படையான அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். யார் ஹஜ் அல்லது உம்ரா செய்ய நாடுகிறாரோ அவர் அவ்விரண்டிற்குமிடையே வலம் வருவதில் (சயீ செய்தல்) எந்தக் குற்றமும் இல்லை. இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் மக்கள் அவ்விரண்டிற்குமிடையே "சயீ" செய்துவந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றபிறகு அவ்வாறு செய்வதில் முஸ்லிம்களில் சிலருக்கு ஏற்பட்ட தயக்கத்தை அகற்றுவதற்காகவே அது தவறில்லை, அவையிரண்டும் ஹஜ்ஜின் வணக்கங்களில் உள்ளவைதான் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். எவர் அல்லாஹ் கடமையாக்காத உபரியான வணக்கங்களில் அவனுக்காக ஈடுபடுவாரோ அவரிடமிருந்து அவற்றை அவன் ஏற்றுக்கொள்வான், அவருக்குத் தகுந்த வெகுமதியும் அளித்திடுவான். நற்செயல் புரிபவர்களையும், கூலி பெறுவதற்கு தகுதியானவர்களையும் அவன் நன்கறிந்தவன்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلْنَا مِنَ الْبَیِّنٰتِ وَالْهُدٰی مِنْ بَعْدِ مَا بَیَّنّٰهُ لِلنَّاسِ فِی الْكِتٰبِ ۙ— اُولٰٓىِٕكَ یَلْعَنُهُمُ اللّٰهُ وَیَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَ ۟ۙ
2.159. யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் முஹம்மது நபியின் தூதுத்துவத்தையும், அவர் கொண்டுவந்தவற்றையும், உண்மைப்படுத்தக்கூடிய தமது வேதங்களில் நாம் இறக்கிய தெளிவான சான்றுகளை மறைப்பவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கிவிட்டான். வானவர்கள், தூதர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் அவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்குமாறு பிரார்த்தனை செய்கிறார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَیَّنُوْا فَاُولٰٓىِٕكَ اَتُوْبُ عَلَیْهِمْ ۚ— وَاَنَا التَّوَّابُ الرَّحِیْمُ ۟
2.160. ஆயினும் தெளிவான சான்றுகளை மறைத்ததற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி, தங்களின் வெளிப்படையான, அந்தரங்கமான செயல்களைச் சீர்படுத்தி, மறைத்த சத்தியத்தையும், நேர்வழியையும் தெளிவுபடுத்தியவர்களைத்தவிர. இவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்வேன். நான் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றேன்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟ۙ
2.161. அல்லாஹ்வை நிராகரித்து, நிராகரித்த நிலையிலேயே பாவமன்னிப்புக் கோராமல் மரணித்தும் விடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் சபித்து தன் அருளிலிருந்து தூரமாக்கிவிடுகிறான். வானவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் அவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்குமாறு பிரார்த்தனை செய்கிறார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
خٰلِدِیْنَ فِیْهَا ۚ— لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
2.162. இந்த சாபத்தில் அவர்கள் நிலைத்திருப்பார்கள். மறுமைநாளில் ஒரு நாள்கூட அவர்களை விட்டும் வேதனை குறைக்கப்படாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ ۟۠
2.163. மனிதர்களே! வணக்கத்திற்குரிய உங்கள் இறைவன் ஒருவனே. அவன் தன்னிலும் தனது பண்புகளிலும் தனித்தவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் அளவிலாக் கருணையாளன்; தனது அடியார்களுக்கு கருணைகாட்டுபவன். அவன் அவர்களுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை அளித்திருக்கிறான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
អំពី​អត្ថប្រយោជន៍​នៃវាក្យខណ្ឌទាំងនេះនៅលើទំព័រនេះ:
• الابتلاء سُنَّة الله تعالى في عباده، وقد وعد الصابرين على ذلك بأعظم الجزاء وأكرم المنازل.
1. சோதனை அடியார்கள் விஷயத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய நியதியாகும். அதைப் பொறுமையுடன் எதிர்கொள்பவர்களுக்கு அழகிய கூலியையும் கண்ணியமான அந்தஸ்தையும் தருவதாக அவன் வாக்களித்துள்ளான்.

• مشروعية السعي بين الصفا والمروة لمن حج البيت أو اعتمر.
2. ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே "சயீ" செய்ய வேண்டும்.

• من أعظم الآثام وأشدها عقوبة كتمان الحق الذي أنزله الله، والتلبيس على الناس، وإضلالهم عن الهدى الذي جاءت به الرسل.
3. அல்லாஹ் இறக்கிய சத்தியத்தை மறைத்தல், மக்களைக் குழப்புதல், தூதர்கள் கொண்டுவந்த வழிகாட்டுதலை விட்டும் மக்களைத் தடுத்தல் ஆகியவை பெரும் பாவமாகவும் கடும் தண்டனைக்கு உரியதாகவும் இருக்கின்றது.

 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ហ្ពាក៏រ៉ោះ
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន - មាតិកានៃការបកប្រែ

ត្រូវបានចេញដោយមជ្ឈមណ្ឌល តាហ្វសៀរនៃការសិក្សាគម្ពីគួរអាន

បិទ