Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន * - មាតិកានៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាន់ណះល៍   វាក្យខណ្ឌ:
وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّنْ بُیُوْتِكُمْ سَكَنًا وَّجَعَلَ لَكُمْ مِّنْ جُلُوْدِ الْاَنْعَامِ بُیُوْتًا تَسْتَخِفُّوْنَهَا یَوْمَ ظَعْنِكُمْ وَیَوْمَ اِقَامَتِكُمْ ۙ— وَمِنْ اَصْوَافِهَا وَاَوْبَارِهَا وَاَشْعَارِهَاۤ اَثَاثًا وَّمَتَاعًا اِلٰی حِیْنٍ ۟
16.80. அல்லாஹ் நீங்கள் கற்களினாலும் ஏனையவற்றாலும் நிர்மாணிக்கும் உங்கள் வீடுகளில் தங்குமிடத்தையும் ஓய்வையும் வைத்துள்ளான். நகரப் புறத்தில் வீடுகள் அமைப்பதைப் போன்று ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றின் தோல்களினால் கிராமப் புறங்களில் கூடாரங்களை அவன் உங்களுக்காக ஏற்படுத்தியுள்ளான். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தூக்கிச் செல்வதும் இறங்குமிடத்தில் அதனை கூடாரமாக அமைப்பதும் உங்களுக்கு இலகுவாக உள்ளது. செம்மறியாட்டின் தோல்கள், ஒட்டகம் மற்றும் வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து வீட்டிற்குத் தேவையான தளபாடங்களையும், குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அனுபவிக்கும் ஆடைகளையும் போர்வைகளையும்அவன் உங்களுக்காக ஏற்படுத்தியுள்ளான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّمَّا خَلَقَ ظِلٰلًا وَّجَعَلَ لَكُمْ مِّنَ الْجِبَالِ اَكْنَانًا وَّجَعَلَ لَكُمْ سَرَابِیْلَ تَقِیْكُمُ الْحَرَّ وَسَرَابِیْلَ تَقِیْكُمْ بَاْسَكُمْ ؕ— كَذٰلِكَ یُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُوْنَ ۟
16.81. வெயிலிலிருந்து நீங்கள் நிழல் பெறும் மரங்கள் மற்றும் கட்டடங்களையும் மலைகளிலிருந்து குகைகளையும் தங்குமிடங்களையும் அவன் உங்களுக்காக ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் அவற்றின்மூலம் குளிர் மற்றும் வெப்பத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்கிறீர்கள்; எதிரிகளை விட்டும் மறைந்து கொள்கிறீர்கள். உங்களுக்காக வெப்பம் மற்றும் குளிரிலிருந்து காக்கும் பருத்தி மற்றும் ஏனையவற்றினாலான ஆடைகளையும் யுத்தத்தில் ஆயுதம் உங்கள் உடம்புகளைப் பாதிக்காவண்ணம் உங்களைக் காக்கும் போர்க் கவசங்களையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரமே அடிபணிந்து அவனுக்கு இணையாக எதனையும் ஆக்காமல் இருக்கும் பொருட்டு அவன் முந்தைய அருட்கொடைகளை உங்கள் மீது பொழிந்தது போன்று தன் அருட்கொடைகளை உங்கள் மீது முழுமைப்படுத்துகிறான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَیْكَ الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
16.82. -தூதரே!- அவர்கள் நீர் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தாமல் புறக்கணித்து விட்டால், எடுத்துரைக்குமாறு உமக்கு ஏவப்பட்டதை தெளிவாக எடுத்துரைப்பதே உம்மீதுள்ள கடமையாகும். அவர்களை நேர்வழி பெறச் செய்வது உம்மீதுள்ள கடமையல்ல.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
یَعْرِفُوْنَ نِعْمَتَ اللّٰهِ ثُمَّ یُنْكِرُوْنَهَا وَاَكْثَرُهُمُ الْكٰفِرُوْنَ ۟۠
16.83. இணைவைப்பாளர்கள் தங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை அறிவார்கள். அவற்றுள் நபியவர்களை அவர்களின் பக்கம் தூதராக அனுப்பியதும் ஒன்றாகும். இருந்தும் அவற்றுக்கு நன்றிசெலுத்தாததன் மூலமும் அவனது தூதரை மறுத்ததன் மூலமும் அவனது அருட்கொடைகளை மறுக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறுப்பவர்களே.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَیَوْمَ نَبْعَثُ مِنْ كُلِّ اُمَّةٍ شَهِیْدًا ثُمَّ لَا یُؤْذَنُ لِلَّذِیْنَ كَفَرُوْا وَلَا هُمْ یُسْتَعْتَبُوْنَ ۟
16.84. -தூதரே!- அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்கும் அனுப்பப்பட்ட அதன் தூதரை அவர்களில் நம்பிக்கையாளனின் நம்பிக்கைக்கும் நிராகரிப்பாளனின் நிராகரிப்பிற்கும் சாட்சி கூறுவதற்காக எழுப்பும் நாளை நினைவு கூர்வீராக. அதன் பின்னர் நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பைக் குறித்து சாக்குப்போக்குகள் கூற அனுமதியளிக்கப்படாது. தங்கள் இறைவனின் திருப்தியை சம்பாதிப்பதற்காக அவர்கள் மீண்டும் உலகிற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். மறுமை விசாரணை செய்யப்படுவதற்கான இடமேயன்றி அமல் செய்வதற்கான இடம் அல்ல.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاِذَا رَاَ الَّذِیْنَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا یُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
16.85. இணைவைத்த அநியாயக்காரர்கள் வேதனையை தம் கண்களால் காணும் நாளில் வேதனை அவர்களை விட்டும் குறைக்கப்படாது. அதனைப் பிற்படுத்தி அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது. மாறாக நிரந்தரமாக அவர்கள் அதில் நுழைந்து விடுவார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاِذَا رَاَ الَّذِیْنَ اَشْرَكُوْا شُرَكَآءَهُمْ قَالُوْا رَبَّنَا هٰۤؤُلَآءِ شُرَكَآؤُنَا الَّذِیْنَ كُنَّا نَدْعُوْا مِنْ دُوْنِكَ ۚ— فَاَلْقَوْا اِلَیْهِمُ الْقَوْلَ اِنَّكُمْ لَكٰذِبُوْنَ ۟ۚ
16.86. இணைவைப்பாளர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வை விடுத்து தாங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களைக் காணும் போது கூறுவார்கள்: “எங்கள் இறைவா! இவர்கள்தாம் உன்னை விடுத்து நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள்.” தங்களின் பாவங்களை அவர்கள் மீது சுமத்திவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ் அந்த தெய்வங்களை பேச வைப்பான். அவை பதிலளிக்கும்: -“இணைவைப்பாளர்களே!- நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி வணங்கியதில் நீங்கள் பொய்யர்களே. அவனோடு இணையாக வணங்கப்படுவதற்கு யாரும் இல்லை.”
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاَلْقَوْا اِلَی اللّٰهِ یَوْمَىِٕذِ ١لسَّلَمَ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
16.87. இணைவைப்பாளர்கள் முழுமையாக சரணடைந்து விடுவார்கள். அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணிந்து விடுவார்கள். தங்களின் சிலைகள் தங்களுக்குப் பரிந்துரை செய்யும் என்று அவர்கள் இட்டுக் கொண்டிருந்த வாதங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
អំពី​អត្ថប្រយោជន៍​នៃវាក្យខណ្ឌទាំងនេះនៅលើទំព័រនេះ:
• دلت الآيات على جواز الانتفاع بالأصواف والأوبار والأشعار على كل حال، ومنها استخدامها في البيوت والأثاث.
1. உரோமங்கள், தோல்கள் ஆகியவற்றினால் எந்த நிலமையிலும் பயன் பெறலாம் என்பதற்கு -மேலுள்ள- வசனங்கள் ஆதாரமாகும். அவற்றை வீடுகளிலும், தளபாடங்களிலும் கூட பயன்படுத்தலாம்.

• كثرة النعم من الأسباب الجالبة من العباد مزيد الشكر، والثناء بها على الله تعالى.
2. அதிகமான அருட்கொடைகள் அடியார்கள் மென்மேலும் நன்றி செலுத்தி அதன் மூலம் அல்லாஹ்வைப் புகழ்வதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.

• الشهيد الذي يشهد على كل أمة هو أزكى الشهداء وأعدلهم، وهم الرسل الذين إذا شهدوا تمّ الحكم على أقوامهم.
3. ஒவ்வொரு சமூகத்திலும் சாட்சி கூறுவதற்காக எழுப்பப்படுபவர் அவர்களில் தூய்மையானவரும் நீதமானவரும் ஆவார். அவர்கள் தூதர்களாவர். அவர்கள் சாட்சி கூறிவிட்டால் அந்த சமூகங்களுக்கு எதிராக தீர்ப்பு உறுதியாகி விடும்.

• في قوله تعالى: ﴿وَسَرَابِيلَ تَقِيكُم بِأْسَكُمْ﴾ دليل على اتخاذ العباد عدّة الجهاد؛ ليستعينوا بها على قتال الأعداء.
4. யுத்தத்தில் உங்களைக் காக்கும் கேடயம் என்ற அல்லாஹ்வின் வார்த்தையில் அடியார்கள் போருக்கான ஆயுதங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் மூலமே அவர்கள் எதிரிகளுடன் போரிட உதவியைப் பெறமுடியும்.

 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាន់ណះល៍
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន - មាតិកានៃការបកប្រែ

ត្រូវបានចេញដោយមជ្ឈមណ្ឌល តាហ្វសៀរនៃការសិក្សាគម្ពីគួរអាន

បិទ