Check out the new design

ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អាប់ឌុលហាមុីទ ពេីក៏វី * - សន្ទស្សន៍នៃការបកប្រែ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អាន់អាម   អាយ៉ាត់:
فَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ رَّبُّكُمْ ذُوْ رَحْمَةٍ وَّاسِعَةٍ ۚ— وَلَا یُرَدُّ بَاْسُهٗ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِیْنَ ۟
147. (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் (அவர்களை நோக்கி), ‘‘உங்கள் இறைவன் மிக விசாலமான அன்புடையவன்தான். எனினும் அவனது தண்டனை, குற்றவாளிகளை விட்டும் ஒருக்காலும் அகற்றப்பட மாட்டாது'' என்று கூறிவிடுவீராக.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
سَیَقُوْلُ الَّذِیْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَیْءٍ ؕ— كَذٰلِكَ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰی ذَاقُوْا بَاْسَنَا ؕ— قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَنَا ؕ— اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْتُمْ اِلَّا تَخْرُصُوْنَ ۟
148. ‘‘அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும், (அல்லாஹ்வுக்கு எதையும்) இணை வைத்திருக்க மாட்டோம்; (புசிக்கக் கூடிய) எதையும் (ஆகாதென) நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்'' என்று இணைவைத்து வணங்கும் இவர்கள் கூறக்கூடும். (நபியே! இவர்கள் பரிகசிக்கும்) இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம் வேதனையைச் சுவைக்கும் வரை (நபிமார்களைப்) பொய்யாக்கியே வந்தனர். ஆகவே, (நீர் அவர்களை நோக்கி ‘‘இதற்கு) உங்களிடம் ஏதும் ஆதாரமுண்டா? (இருந்தால்) அதை நம்மிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் சுயமாகவே கற்பனை செய்துகொண்ட (உங்கள்) வீண் எண்ணத்தில் மூழ்கிக் கிடப்பவர்களே தவிர, வேறில்லை'' என்று கூறுவீராக.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
قُلْ فَلِلّٰهِ الْحُجَّةُ الْبَالِغَةُ ۚ— فَلَوْ شَآءَ لَهَدٰىكُمْ اَجْمَعِیْنَ ۟
149. நபியே!) கூறுவீராக: ‘‘(மறுக்க முடியாத) முழுமையான ஆதாரம் அல்லாஹ்வுடையதே! (அவர்களுடைய ஆதாரம் முற்றிலும் தவறானது.) அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்தியிருப்பான்.''
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ الَّذِیْنَ یَشْهَدُوْنَ اَنَّ اللّٰهَ حَرَّمَ هٰذَا ۚ— فَاِنْ شَهِدُوْا فَلَا تَشْهَدْ مَعَهُمْ ۚ— وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ یَعْدِلُوْنَ ۟۠
150. (மேலும், அவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று நீங்கள் உறுதிப்படுத்துவதற்காக உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்'' என்று நீர் கூறுவீராக. (அவ்வாறு அவர்களை அழைத்து வந்து) அவர்களும் (அவ்வாறே பொய்) சாட்சி கூறியபோதிலும் (அதற்காக) நீரும் அவர்களுடன் சேர்ந்து (அவ்வாறு) சாட்சி கூறவேண்டாம். மேலும், நம் வசனங்கள் பொய்யெனக் கூறியவர்கள் மற்றும் இறுதி நாளை நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய மன விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். அவர்கள்தான் தங்கள் இறைவனுக்கு (பலவற்றை) இணையாக்குகின்றனர்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَیْكُمْ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا ۚ— وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ ؕ— نَحْنُ نَرْزُقُكُمْ وَاِیَّاهُمْ ۚ— وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ۚ— وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ ؕ— ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
151. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்தவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடை செய்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவற்றை (விவரித்து) உபதேசிக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អាន់អាម
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អាប់ឌុលហាមុីទ ពេីក៏វី - សន្ទស្សន៍នៃការបកប្រែ

បកប្រែដោយលោកអាប់ឌុលហាមុីទ អាលពើក៏វី

បិទ